தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11ஆயிரத்து 45மாணவர்களும், 12ஆயிரத்து 148 மாணவியரும் என மொத்தம் 23ஆயிரத்து 193பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 66 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வர்களுக்காகவும், கண்காணிப்பு அலுவலர்களுக்காகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இதன்படி விடைத்தாளில் தேர்வர்கள் கடைசியாக எழுதிய வரியின் கீழ் தேர்வுத்துறை சார்பில் ரப்பர் முத்திரை இட வேண்டும்.
தேர்வு முடிந்த பின்பு அறை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள்களை தாமதமின்றி தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்து வர வேண்டும். தேர்விற்கு பயன்படுத்தப்படும் சுவர் கடிகாரம் நல்லநிலையில் இயங்கக்கூடியதாக இருக்கிறதா என்ற சரிபார்த்து கொள்ள வேண்டும். இதைப்பார்த்துத்தான் பெல்லடிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் வருகை புரியாதோர் விபரங்களை பிற்பகல் 2 முதல் 5 மணிக்குள் www.tndge.in என்ற இணையத்தில் முதன்மைக் கண்காணிப்பாளரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதள வசதி இல்லாத இடங்களில் தேர்வு மையத்தின் அருகில் உள்ள கணினி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மாணவர்கள் சில விடைகளை அடிக்க நேர்ந்தால் மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது என்று குறிப்புரையை பேனாவால் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் கல்வித்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment