உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக வாக்காளர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை? என்பது பற்றி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பூத் சிலிப்புகள் இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 530 பதவி இடங்களுக்கு 18–ந் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்களிப்பதற்கு வசதியாக வாக்காளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் அதிகாரிகள் மூலம் பூத் சிலிப்கள் வழங்கப்பட்டன.
இந்த பணி 16–ந் தேதியோடு (நேற்று) நிறைவு பெற்றது. 14 ஆவணங்கள் இந்த பூத் சிலிப்பை கொண்டுவந்தால் ஓட்டுபோடுவதற்காக வேண்டிய ஆவணங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துவர தேவையில்லை. பூத் சிலிப் இல்லை என்றால், அடையாளம் காணும் வகையில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 14 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வரவேண்டும்.
அதன்படி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவை வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, சாதி சான்றிதழ் இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதிக்கு முன்னதாக வழங்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள், தபால் கணக்கு புத்தகம் அல்லது கிசான் கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் உள்ளவை), முன்னாள் படைவீரர் ஓய்வூதிய புத்தகம், ஓய்வூதிய வழங்கல் ஆணை போன்ற புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் விதவைகள் அல்லது குடும்பத்தினருக்கான சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட தியாகியின் அடையாள சான்றிதழ், இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி வரை உரிய அலுவலரால் வழங்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், ஆதார் அட்டை புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி உரிமம், மாற்றுத்திறனாளிகள் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் சான்று, இந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதிக்குள் வழங்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடன் அட்டை, தொழிலாளர் நல திட்டத்துறையின் புகைப்படத்துடன் கூடிய நலவாழ்வு காப்பீட்டுத் திட்ட ஸ்மார்ட் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு வரவேண்டும்.
புகைப்படம் கட்டாயம் இந்த ஆவணங்களில் வாக்காளரின் புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் அடையாள ஆவணமாக வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலரால் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment