வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்காக மாவட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் நாளை (11–ந் தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். வண்ண அடையாள அட்டைகள் இதுகுறித்து நிருபர்களுக்கு, பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:–
தமிழகத்தில் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 12 லட்சம் பேருக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இந்தமாத இறுதியில் இவர்களுக்கு வண்ண அட்டைகள் வழங்கப்படும். வண்ண அடையாள அட்டை வழங்கும் பணிக்காக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என ஐந்து மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக சுமார் 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
திருத்தும் பணி தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தும் பணி, அடுத்தமாதம் அக்டோபரில் தொடங்குகின்றன. இந்த காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்துவது, முகவரி மாற்றம் போன்ற பல திருத்தங்களை செய்துகொள்ளலாம். வரும் ஜனவரி 1–ந் தேதியோடு 18 வயது பூர்த்தி அடைபவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாளை பயிற்சி வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடங்குவதற்கு முன்பு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி நாளை (11–ந் தேதி) சென்னையில் நடக்கிறது.
அதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா இரண்டு அதிகாரிகள் பங்கேற்பார்கள். இந்தப் பயிற்சி எனது தலைமையில் நடத்தப்படும். பயிற்சியை பெற்றபிறகு அந்த அதிகாரிகள், தங்களுக்கு கீழ் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து 16, 17, 20 ஆகிய தேதிகளில் பயிற்சி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment