தற்போது நடந்து வரும், தொடர் சுருக்கத் திருத்தப் பணிகள் முடிந்ததும், வரும் அக்டோபர் மாதம், வாக்காளர் பெயர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆன் லைனில் : கடந்த மே 16ல், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததில் இருந்து, வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள், தாலுகா அலுவலகங்களில் பெறப்படுகின்றன.
தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஆன் லைனிலும் விண்ணப்பிக்கப்படுகிறது. இத்தொடர் சுருக்கத் திருத்தப் பணிகள் முடிந்ததும், அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படுகிறது. தேர்தல் பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 15ல், இப்பட்டியல் வெளியிடப்படலாம் என, தெரிகிறது. அதற்கேற்ப அனைத்துப் பணிகளும் மிக விரைவாக நடந்து வருகிறது. வெளியிடும் தேதி, முடிவு செய்யப்படவில்லை. வரும் 2015, ஜன., 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பியோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். பெயர் சேர்ப்பு : மாவட்டங்களில், இன்ஜினியரிங் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மூலம், அங்கு படிக்கும் தகுதி உள்ள மாணவர்களிடம், பெயர் சேர்ப்பு விண்ணப்பப் படிவம் தரப்பட்டு, நிரப்பி வாங்கப்படும். பின், அப்படிவங்கள் தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டு, விவரங்களை சரிபார்த்து, அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். மாணவர்கள், வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், சம்பந்தப்பட்ட தாலுகாவிற்கு, அவர்களது விண்ணப்பம் அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment