தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தற்போது அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்வதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில், மாவட்ட கல்வி அதிகாரி, அரசு மேல்நிலைப்பள்ளி மூத்த தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஆகியோரைக் கொண்ட குழுவை செப்.,30க்குள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் சராசரியாக 80 முதல் 100 வரை ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு ஒப்புதலுக்குப்பின் நியமிக்கப்படுவர்' என்றார்.
No comments:
Post a Comment