வரும் 2013 ஜனவரியை தகுதி நாளாக கொண்டு (18 வயது), அக்.,1 முதல் 31 வரை, வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் நடக்க உள்ளன. சிறப்பு கிராம சபை கூட்டம், வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது.
புதிய திட்டம்: பட்டியலில், 18 வயது பூர்த்தியானவர்களை முழுமையாக சேர்க்கும் விதமாக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, "சீரான வாக்காளர் கல்வி, ஜனநாயக பங்களிப்பு (ஸ்வீப்)' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி, விளம்பர பலகை வைத்தல். கல்லூரி, பள்ளி மாணவர்கள் மூலம் ஓவியம், கட்டுரை, இசை போட்டி; மகளிர் குழு, தன்னார்வ நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம், மனித சங்கிலி நடத்துதல்; "எஸ்.எம்.எஸ்.,' அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குடியிருப்போர் நலச்சங்கத்தினரை அணுகி, வரைவு பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்யவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment