இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 06, 2013

"பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்ற

ர். பள்ளிக் கல்வி துறையில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாட வேளைகள் மாற்றியமைக்கப்பட்டன. பகல் 12:35 முதல் 1:05 மணி வரை, 15 நிமிடங்கள் யோகா வகுப்பும், மீதம் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வியும் அளிக்க வேண்டும். மாலை பள்ளி முடிந்த பின், ஒரு மணி நேரம் பொழுது போக்கு நிகழ்வுகளில், மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும், என, மாற்றப்பட்டது.

யோகா என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தும் உன்னத திட்டம். அவர்களின் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யோகா வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: நூற்றுக்கணக்கில் மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களை, யோகா வகுப்பிற்கு தயார்படுத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. இதனால், பல பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடப்பதில்லை. யோகா கற்க, திறந்தவெளி சிறந்தது. பகல் 12:30 மணிக்கு வெயிலில், மைதானத்தில் மாணவர்களை வைத்து ஆசனங்களை கற்றுத்தர முடியவில்லை.

மாலையில் யோகா நடத்தும் வகையில், நேரத்தை மாற்றலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். யோகா பயிற்சி ஆசிரியர் சுவாமி பிரேம்மித்ரா, ""பகல், இரவு சந்திக்கும் நேரம் தான் யோகா, தியானத்திற்கு ஏற்ற நேரம். பகல் 12:30 மணி என்பதை விட மாலை நேரம் சிறந்தது. அந்நேரம் தான் மனிதனின் நாடி, நரம்புகளை சாந்தப்படுத்தும்,'' என்றார்.

Friday, July 05, 2013

12 லட்சம் மாணவர்களுக்கு உடல் திறன் கண்டறிய போட்டி  

   அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12 லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக, அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்காக, 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த வேண்டும். குழு விளையாட்டு அல்லது தனிநபர் போட்டிகளில், மாணவர்களின் திறனை அறிந்து, அதை மேம்படுத்தும் வகையில், போட்டிகளை நடத்த வேண்டும். வேகமாக ஓடும் ஆற்றலை கண்டறிய, 50 மீட்டர் ஓட்டமும், அதிகமாக தாக்குப் பிடிக்கும் திறனை கண்டறிய, 600, 800 மீட்டர் ஓட்ட போட்டியும் நடத்த வேண்டும். ஜூலை இறுதிக்குள், இந்த போட்டிகளை நடத்தி முடிக்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போட்டியில், 10 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அல்லது ஏதேனும் இரு தேர்வுகளில், முறையே, எட்டு அல்லது ஒன்பது மதிப்பெண் பெற்ற மாணவர்களின் ஆற்றல் தரத்தை, இதற்கென தரப்பட்ட படிவத்தில் பதிவு செய்து, அதை, மாவட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். மாணவர் திறன் அறியும் அட்டையில், பெற்றோரின் கையொப்பத்தை பெற வேண்டும். போட்டிகள் முடிந்ததும், அது தொடர்பான முழுமையான அறிக்கையை, இயக்குனருக்கு, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும், 7,307 அரசு நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 12.72 லட்சம் மாணவர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதிய 12 லட்சம் மாணவர்கள், பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 215 பேரும், பத்தாம் வகுப்பு மாணவர்களில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 955 பேரும் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 10.51 லட்சம் பேரில் 9.35 லட்சம் பேர் தேரச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 89 சதவீதம் ஆகும். அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 20-ஆம் தேதி வழங்கப்பட்டது.

இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனியாக பாஸ்வேர்டு வழங்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஜூன் 20 முதல் ஜூலை 4 வரை மொத்தம் 15 நாள்களில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 955 மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த மாணவர்களுக்கு உடனடியாக பதிவு அட்டைகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. 15 நாள்களில் பதிவு செய்த மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதியிட்ட பதிவு மூப்பே வழங்கப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 125 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு மே 20-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜூன் 3 வரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 215 மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். வழக்கமாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். மாணவர்கள் நீண்ட தொலைவு பயணம் செய்வதோடு, வீணாக அலையவும் நேரிடும். ஆனால், சில ஆண்டுகளாக மதிப்பெண் சான்றிதழைப் பெறும்போதே பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 12 லட்சத்து 14 ஆயிரத்து 170 மாணவர்கள் எந்தவித அலைச்சலும் இன்றி தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்

Thursday, July 04, 2013

தமிழ் சொற்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் அறியக் கிடைக்கிறது. பிரபல புத்தக நிறுவனமான LIFCO நிறுவனம் இந்த தளத்தின் வாயிலாக இந்த சேவையை நமக்கு இலவசமாக தருகிறது

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாளாக அறிவிக்கப்படுமா?


தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 1 முதல் 8 வகுப்புகள் வரை உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் பத்து நாட்கள் குறுவள மைய பயிற்சி தொடக்க, உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு நடைபெறும். வழக்கமாக தொடக்கக் கல்வித்துறையை பொருத்தவரையில் இந்த குறுவள மைய பயிற்சி நாட்களை வேலை நாட்களாக கருதப்படும் அந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வர்.

இந்த பயிற்சி நாட்களை மொத்த வேலை நாட்களில் இருந்து கழிக்கப்படும். 2013-14ஆம் கல்வியாண்டிற்கான குறு வள மைய பயிற்சி நாட்கள் மூன்றாக குறைத்து அரசு உத்தரவிட்டது, மேலும் பயிற்சியில் ஒவ்வொரு குறுவள மையத்திலும் 100% ஆசிரியர்களுக்கு பதிலாக 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டது. இதனால் பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் பயிற்சி நாளன்று பள்ளி வேலை செய்யுமா அல்லது விடுமுறையாக கொள்ளப்படுமா என்று குழப்பமடைந்துள்ளனர். ஒரு சில மாவட்டங்களில் பயிற்சி நாளை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில மாவட்டங்களில் அறிவிக்காததால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறை பொருத்தவரை குறு வள மைய பயிற்சி நாள், பள்ளி வேலை நாளாக கருதப்படுவதால் அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து இறுதி முடிவு அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளுக்கு அதிகாரிகள், "விசிட்'  

தமிழக அரசின் நலத்திட்ட பொருட்கள் வினியோகம் மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச புத்தகத்தில் துவங்கி, "லேப்-டாப்' வரை, 14 வரையான பொருட்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த மாதம், 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது இருந்தே, பல்வேறு பொருட்கள், ஒவ்வொன்றாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும், மாணவர்களைச் சென்றடைந்ததா, மாணவர் சேர்க்கை நிலவரம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பல இணை இயக்குனர்கள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

SCHOOL WISE ENROLLMENT AS ON .1-7-13

Wednesday, July 03, 2013

இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம

்இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் அஞ்சல்வழியில் பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

தற்போது பி.எட் படிப்பு இந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது. 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயின்று பட்டம் வாங்க வேண்டும் (கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தால் 10 மாதம் மட்டுமே) மதுரை இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக் கழக மண்டல அலுவலகம் இயங்குகிறது.

இதில் பயின்ற மாணவர்கள் மே மாதம் நடக்கும் பி.எட் செமினார் வகுப்புகள் படிப்பதற்கான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்குரிய கவுன்சிலிங், தேர்வு கட்டணம் செலுத்துதல், உட்பட அனைத்து தேவைகளுக்கும் மதுரையில் உள்ள மண்டல அலுவலகத்தைபயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் மதுரை மண்டலத்தில் இருந்து பிரிந்து திருவனந்தபுரத்தில் இணைக்கப்பட்டிருப்பதுடன் விண்ணப்ப கட்டணமும் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தை எளிதில் தொடர்பு கொண்டு தேர்வு, ரிசல்ட், அட்மிசன் உட்பட அனைத்து சந்தேகங்களும் போனிலும் நேரிலும் கேட்டு தெளிவடைந்து வரும் தபால் வழி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் இயக்கப்பட்டால் இரண்டாம் தரகுடிமக்களாக நடத்தப்படும் கசப்பான நிலை ஏற்படும், தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இந்த ஆண்டு 6.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

முதல் தாளுக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாளுக்கு 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற உள்ளது. இவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த இணையதளத்திலிருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தையும், பத்திரிகைகளையும் தொடர்ச்சியாக பார்த்து வர வேண்டும். ஹால் டிக்கெட் பதிவேற்றம் போன்ற தகவல்கள் இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. 29 ஆயிரம் பேர் அதிகம்: கடந்த 2012-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு 29 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கான

விண்ணப்பங்கள் ஜூன் 17-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் வழங்கப்பட்டன. மொத்தம் 7.38 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேர்வர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரடியாகச் சமர்ப்பித்தனர். கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் இந்த விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, அதில் உள்ள தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அதன் பிறகு, மாவட்டத்துக்கு எத்தனை தேர்வர்கள் என்ற எண்ணிக்கையைப் பொருத்து தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இணையதளம் மூலமே ஹால்டிக்கெட்டுகள்: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கும் இனி ஹால் டிக்கெட்டுகள் தபாலில் அனுப்பப்படாது என்றும், இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பொதுப் பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.

உதவிப் பேராசிரியர் நியமனம்: விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26 வரை நீட்டிப்பு

  அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,023 உதவிப் பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்க உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 33 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 19-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன

.இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் கடைசி தேதி ஜூலை 10 என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கடைசி தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தப் பணியிடங்களுக்கு பணி அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 1,023 பணியிடங்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து அனுப்பப்பட்டன.இதுவரை 40 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையில் மாநிலக் கல்லூரியிலும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும்  விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன.
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Tuesday, July 02, 2013

பட்டப் படிப்புகளும் அவற்றிற்கு இனையான பட்டப்படிப்புகளும்-அரசாணைகளின் தொகுப்பு.

IX CCE - all subject manuals - Tamil Version

சென்னைப் பல்கலைக்கழக முதுநிலைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை மாலை (ஜூலை 3) வெளியிடப்படவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம், எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ.(எல்எம்), எம்.பி.ஏ., எம்.ஏ(எச்ஆர்எம்), எம்.சி.ஏ., எம்.எஸ்சி.(ஐ.டி), எம்.எஸ்சி. (சிஎஸ்) எம்.எஸ்சி.(சிஎஸ்டி) பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in, www.chennaionline.com/results, www.schools9.com, www.indiaresults.com, http://results.southindia.com, http://results.webdunia.com, http://kalvimalar.com/results.asp, www.examresults.net  ஆகிய இணைய முகவரிகளில் பார்த்துக் கொள்ளலாம். குறுஞ்செய்தி (நஙந) மூலம் தேர்வு முடிவு: தேர்வு முடிவுகளை 56263 என்ற எண்ணுக்கு தங்ள்ன்ப்ற் என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு மசஞஙடஎ என்று டைப் செய்து மீண்டும் இடைவெளி விட்டு பதிவு எண்ணை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் பெயரில் செலுத்தத்தக்க வகையில் ரூ.750-க்கு வரைவோலை எடுத்து, வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 3 செமஸ்டர்களில் அனைத்து "தியரி' தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, நான்காவது செமஸ்டரில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் மட்டும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை மாணவர்கள் ரூ. 350, தொழில்படிப்பு மாணவர்கள் ரூ.600 கட்டணமாகச் செலுத்தி உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான வங்கி வரைவோலையை வரும் 10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். உடனடித் தேர்வு வரும் 27-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டுகளை கல்லூரி இணையதளத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியிடங்கள்: கலந்தாய்வு மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு

  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 539 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக ஒற்றைச் சாளர முறையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஜூலை 8 முதல் 15 வரை நடைபெறுகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 17 ஆயிரத்து 45 காலியிடங்கள் உள்ளன. அவை ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்பட உள்ளன. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேரத் தகுதி வாய்ந்த மேனிலைக் கல்வி முடித்த மாணவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் அசல் சான்றிதழ்களான பத்தாம் வகுப்பு மேல்நிலைக் கல்வித் தேர்ச்சிக்கான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகள் அல்லது மகள் போன்ற சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஜூலை 8- ஆம் தேதி சிறப்புப் பிரிவு, சிறுபான்மை மொழியியல் பயில விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 9-ஆம் தேதி தொழிற்பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கலைப்பிரிவு மாணவர்களுக்கும், ஜூலை 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களின் தர வரிசைப் பட்டியல் மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடம் அனைத்தும் www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2012 - 13ஆம் ஆண்டுக்குரிய மாநில நல்லாசிரியர் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்தல், வழிக்காட்டு நெறிமுறைகள்

Monday, July 01, 2013

மாநில/தேசிய நல்லாசிரியர் விருதுபெற aeeo/deeo அலுவலரிடம் ஜூன் 12க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்



ஆசிரியர் தகுதித் தேர்வு: 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 1) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடைசி நாள் வரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

1999 முதல் 2011 வரை 56 பள்ளிகள் மூடல் மாணவர் சேர்க்கை குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு தீவிரம்

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 32 மேல்நிலைப்பள்ளி, 36 உயர்நிலைப்பள்ளி, 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப்பள்ளி, 122 தொடக்கப்பள்ளி, 30 மழலையர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுமார் 98 ஆயிரத்து 857 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். 4041 ஆசிரியர்கள் உள்ளனர். இவற்றில் குறைந்த மாணவர்கள் உள்ள மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளுடன் சேர்க்கும் நிலைக்கு மாநகராட்சி தள்ளப்பட்டுள்ளது. இப்படி 1999 முதல் 2011ம் ஆண்டு வரை 56 பள்ளிகள் மூடப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்த ஆண்டு 25க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ள பள்ளிகள் கணக்கிடப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றப்படும்போது மாணவ, மாணவிகள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியது உள்ளது. தொலைவு அதிகரிப்பது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் படிப்பை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. சில மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள்  சரிவர இல்லாததாலும் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இதுவும் மாணவர் சேர்க்கை குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட்டில் கோடி கணக்கில் கல்வித்துறைக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. 2012,2013ம் ஆண்டு மட்டும் மாநகராட்சி பட்ஜெட்டில் ஸீ 15 கோடி ஒதுக்கப்பட்டது. இதேபோல், இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஸீ 14.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியை ஒழுங்காக அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை என்றும், பல கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் அப்படியே திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த நிதியை ஒழுங்காக பயன்படுத்தினாலே தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளியின் தரத்தை உயர்த்த முடியும். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆங்கில வழி மாணவர் விபரம் கோருதல் 28-6-13ன் படி

மாணவர் பட்டியல் சாதி வாரி விபரம்

மாணவர் சேர்க்கை விபரம் 28-6-2013ன் படி