இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 15, 2014

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது

நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் குறைத்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், விண்ணப்பத்துடன், குறிப்பிட்ட தொகையை கட்டணமாக, தேர்வு துறை இயக்குனரகத்துக்கு செலுத்த வேண்டும். நடப்பு ஆண்டில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், பணிகளை, தேர்வு துறை வேகப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்க உள்ளது

   . எனவே, தற்போது, தேர்வு கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கல்வி துறை உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்புக்கு, தேர்வு கட்டணமாக, 125 ரூபாய் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில், 115 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது குரூப் படிக்கும், பிளஸ்2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுத உள்ள மாணவர்கள், 225 ரூபாய் செலுத்த வேண்டும். செய்முறை தேர்வு இல்லாதவர்களுக்கு, 175 ரூபாய் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை, வரும், 17ம் தேதி முதல், 23ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tuesday, January 14, 2014

25 ஆண்டுகள் பணி முடித்தால் ஊக்க விருது வழங்க வேண்டும TNPTF

் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊக்க விருது வழங்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் நகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயற்குழுகூட்டம் மாவட்டதலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. வெண்ணந்தூர் வட்டார செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, மாவட்ட செயலாளர் தங்கவேல், முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உயர்கல்வி படிக்க முன்னேற்பு ஆணை கிடைக்க பெறாத ஆசிரியர்களுக்கு பின்னேற்பு ஆணைகள் வழங்க வேண்டும். 25 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்க விருது வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு கட்டணம் அறிவிப்பு

  "அரசு பொதுதேர்வு எழுத உள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், தேர்வு கட்டணம் வசூலிக்க,” அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.115; பிளஸ் 2 மாணவர்களில் 'பிராக்டிக்கல்' தேர்வுள்ள பாடங்களுக்கு ரூ.225; 'பிராக்டிக்கல்' தேர்வில்லாத பாடங்களுக்கு ரூ.175 வீதம், ஜன.,17 முதல் 23ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர் வசூல் செய்யவேண்டும். அரசு வங்கி கணக்கில், ஜன.,23 அன்று செலுத்தவேண்டும்.

அதற்கான விபரங்களை, ஜன.,24ல் கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஜன.,27ல் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்கவேண்டும், என தேவராஜன் தெரிவித்துள்ளார். சலுகை: கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், தேர்வு கட்டணமாக, ரூ.125 வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசில் 4,000 வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில், இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்கிறது. சில தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு மூலமும், சிலவற்றுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓர் ஆண்டில், என்னென்ன பதவிகள், தேர்வுகள், எந்த தேதிகளில் நடக்கிறது; எப்போது ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது;

நேர்காணல் எப்போது உள்ளிட்ட முழு விவரங்களுடன் கூடிய ஆண்டு தேர்வு கால அட்டவணையை, 2012ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த நட்ராஜ் அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து ஆண்டுதோறும், இதுபோன்ற கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான கால அட்டவணையை ஜன.,10ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் வெளியிட்டார். மொத்தம் 23 வகையான தேர்வுகள் இந்தாண்டு நடத்தப்படவுள்ளன. இதில் அதிகபட்சமாக வி.ஏ.ஓ., பணிக்கு, 2,342 பேரும், குரூப் 2 (நேர்காணல் இல்லாதது) பணிக்கு 1,181 பேரும், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுக்கு 98 பேரும், தேர்வு செய்யப்படுகின்றனர். இது தவிர குரூப்-2 (நேர்காணல்) தேர்வு, குரூப்-4 தேர்வு ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களும் தோராயமானவை; அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தாண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம் 4,000 பேர் தேர்வு செய்யபடவுள்ளனர். இது போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபரங்களுக்கு: www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

Monday, January 13, 2014

அ தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மார்ச் 2014 மாணவர்களுக்கான தேர்வு தொகை ரூ.115/- ஜனவரி 17 முதல் 23 வரை வசூலிக்கவும், அரசு கணக்கில் ஜனவரி 23ம் தேதி செலுத்த உத்தரவு

டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய நெருக்கடி: டி.ஆர்.பி., உத்தரவால் அதிருப்தி

  ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில், 12,596 பேரும், தாள் 2ல், 14496 பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில், பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இதில், தாள் 2ல், 2ஆயிரத்திற்கும் மேல், கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களாக, 'இளங்கலை பட்டப்படிப்பில், பல்கலை, கல்லூரிகள் வழங்கிய, செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டப்படிப்பு சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளிக்கப்படாத சான்றுகள் அதற்குப்பின் ஏற்கப்படமாட்டாது,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பட்டப் படிப்பின் தொகுப்பு மதிப்பெண் சான்று மட்டுமே கேட்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கேட்டு, டி.ஆர்.பி., அதிர்ச்சி ஏற்படுத்தியது. 1980 மற்றம் 1990களில் ரெகுலர் அல்லது தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றோர், 80 சதவிகிதத்திற்கும் மேல், இதுபோன்ற செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பில்லை. டி.ஆர்.பி.யின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது: பொதுவாக அரசுப் பணிகளுக்கும் டிகிரி சான்று மற்றும் மதிப்பெண் சான்று மட்டும் கேட்பது வழக்கம். கடந்த டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதே வழக்கம் தான் கடைபிடிக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றுகள் கேட்கப்பட்டுள்ளன, குழப்பமாக உள்ளது. 6வது செமஸ்டருக்கான சான்றே வழங்கமாட்டார்கள். '

   டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்டு, கல்லூரிக்கு சென்றால், சம்பந்தப்பட்ட பல்கலையில் கேளுங்கள் என்கின்றனர். பல்கலைக்கு சென்றால், மீண்டும் அந்த சான்றிதழ் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட சான்றிதழின் ஜெராக்ஸ் வேண்டும். ஒரு செமஸ்டர் சான்றுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். சான்று காணாமல் போனதாக போலீஸ் எப்.ஐ.ஆர்., வேண்டும் என, ஒரு மாதத்தில் நடக்க சாத்தியமில்லாத வழிகளை கூறுகின்றனர். தேர்ச்சி பெற்றும் நிம்மதி இல்லை. அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, தெளிவுபடுத்த வேண்டும், என்றனர்.

Sunday, January 12, 2014

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு விண்ணப்பிக்க ஜன. 20 வரை வாய்ப்பு

தேசிய வருவாய் வழி, திறன்படிப்பு தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஜன.,20 வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவி தொகை திட்டத்தேர்வு பிப்.,22ல் நடக்க உள்ளது. தேர்வு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 செலுத்த வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு, பிளஸ்2 வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு எழுதுபவர்கள், ஜன.,10 வரை, www.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பித்தபின், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்துடன், ஜன.,21, 22 ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலங்களிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும் ஒப்படைக்க வேண்டும்.

வாசிப்பு திறனை மேம்படுத்துங்கள் : ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு

    மாணவர்களிடம் "வாசிப்பு திறன்' குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அடிப்படை, கட்டட வசதிகள், மாணவர்களுக்கு தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட நிலையில், வட்டார மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் பணியை, ஆசிரியர் பயிற்றுனர்களின், சீனியர் பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதலாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தற்போது, பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை அறியும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது; பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு திறன் 50 சதவீதம் வரை தான் உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பணியாற்றும், ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகள் வாரியாக சென்று, மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறனை பரி சோதித்து, 100 சதவீதம் வாசிப்பு, எழுதும் திறனை உருவாக்குமாறு, கூறியுள்ளனர். பொங்கல் முடிந்த பின், நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு, புதிய பணிகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன, என்றார்.

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தாவரவியல், வரலாறு, வணிகவியல், வேதியியல், இயற்பியல் உட்பட 5  பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வில் தாள் ஒன்று தாள் இரண்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சாரிபார்க்கும் பணிகள் வரும் 20ம் தேதி முதல் 28 வரை  தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதங்கள், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணைய தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 8 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட 2400 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Saturday, January 11, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீட

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது. முதல் தாள் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் இல்லாததால், அந்த தேர்வு முடிவுகளில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாளை 2.62 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும் இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர் இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இரண்டாம் தாளில் 4 முக்கிய விடைகளை மாற்றி உத்தரவிட்டது. அதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட புதிய தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், ஜனவரி 27-ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

டிட்டோஜாக் அமைப்பில் இருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியேற்றம


இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி ஆசிரியர் சங்க கட்டடத்தில் டிட்டோஜாக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது, பின்பு அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட போது பிப்ரவரியில் பேரணி மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்ட போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கனவே எடுத்த தனது நிலைப்பாட்டில் மாறாமல் பிடிவாதம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

. இதை குறித்து மற்ற 6 சங்கங்கள் ஆட்சேபம் தெரிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் மற்ற 6 சங்கங்கள் இணைந்து  பிப்ரவரி 2ஆம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடத்துவது என்றும், போஸ்டர், துண்டு பிரசுரம் மற்றும் செலவு ஆகியவை அனைத்து சங்கங்களும் ஏற்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து அனைத்து சங்கங்களும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை டிட்டோஜாக் அமைப்பில் இருந்து நீக்கி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNTET 2013 - Certificate Verification Venue Center List

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I - Certificate Verification Individual Query

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I and Paper II - Certificate Verification Call Letter

Friday, January 10, 2014

Tamil Nadu Teacher Eligibility Test revised Result -2013

TNPSC அட்டவணை வெளியீடு

78 பணியிடங்களுக்கான கடந்த மாதம் வெளியிடப்பட்ட குரூப்–1 தேர்வு ஏப்ரல் 26–ந் தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு செப்டம்பர் 20–ந் தேதி நடத்தப்படும். இந்த வருடம் அறிவிக்கப்பட உள்ள தேர்வு விவரங்கள் வருமாறு:–

குரூப்–2 தேர்வு

1181 பணியிடங்களுக்கான குரூப்–2 (நேர்முக தேர்வு கிடையாது) தேர்வு மே 15–ந் தேதி நடத்தப்பட்டு ஆகஸ்டு 3–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.

டிராப்ட்ஸ்மென் 3–வது கிரேடு பதவிக்கு 5 பணியிடங்களுக்கு மே 3–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூலை 2–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.

குரூப்–6 தேர்வில் வன பயிற்சியாளர்கள் 26 பேரை தேர்வு செய்ய ஜூன் 1–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு செப்டம்பர் 2–வது வாரத்தில் வெளியிடப்படும்.

மாவட்ட கல்வி அதிகாரிகள்

11 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஜூன் 8–ந் தேதி முதல்நிலை எழுத்துதேர்வு நடத்தப்பட்டு ஜூலை 3–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும். மெயின் தேர்வு ஆகஸ்டு 9–ந் தேதி நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வு நவம்பர் 2–வது வாரம் நடக்கும்.

2,342 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 15–ந் தேதி நடத்தப்படும்.

குரூப்–5 தமிழ்நாடு தலைமைச்செயலக அலுவலர் பணிக்காக 25 பேரை தேர்வு செய்ய ஜூன் 22–ந் தேதி தேர்வு நடத்தப்படும். முடிவு ஆகஸ்டு 2–வது வாரத்தில் வெளியிடப்பட்டு, நேர்முகத்தேர்வு ஆகஸ்டு 4–வது வாரத்தில் நடத்தப்படும்.

என்ஜினீயரிங் பணி

உதவி மேலாளர் பணிக்கான 4 பேரை தேர்வு செய்ய ஜூன் 28–ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு, முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். 4–வது வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். 98 என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு ஜூன் 29–ந் தேதி நடத்தப்பட்டு முடிவு ஜூலை முதல் வாரம் அறிவிக்கப்படும். ஜூலை 3–வது வாரத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

குரூப்–2 (நேர்முகத்தேர்வுடன் கூடியது) தேர்வுக்கு எத்தனை பணிகள் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும். அந்த தேர்வு ஜூலை 6–ந் தேதி நடத்தப்படும். குரூப்–4 தேர்வு அக்டோபர் மாதம் 19–ந் தேதி நடத்தப்பட்டு, டிசம்பர் 2–வது வாரத்தில் முடிவு வெளியிடப்படும்.

மீண்டும் குரூப்–1 தேர்வு

குரூப்–1 முதல்நிலை தேர்வு 2015–ம் ஆண்டு ஏப்ரல் 3–வது வாரம் நடத்தப்பட்டு, ஜூன் 2–வது வாரம் முடிவு வெளியிடப்படும். மெயின் தேர்வு ஆகஸ்டு 2–வது வாரத்தில் நடத்தப்பட்டு, நவம்பர் முதல் வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவை உள்பட 29 வகையான தேர்வுகள் 2015–ம் ஆண்டு ஏப்ரல் வரை நடத்தப்பட உள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் அவர்கள் தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்களை சரியாக சமர்ப்பிப்பதில்லை. இதுபோன்ற காரணத்தால் தான் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. 13 லட்சம் பேர் எழுதிய குரூப்–4 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார். ஆணையத்தின் செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் உடன் இருந்தனர்.

நேற்றைய அறிவிப்பில் மொத்தம் 3 ஆயிரத்து 700 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டியூஷனுக்குக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை டியூஷனுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வியாழக்கிழமை (ஜன.9) அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:

   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரைக் கட்டாயப்படுத்தி சில ஆசிரியர்கள் டியூஷனுக்கு (தனி வகுப்பு) வரவழைத்து கட்டணம் வசூலிப்பதாக அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. விழுப்புரம் மாவட்டத்தில் கட்டாய தனி வகுப்புகளால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக துறையின் கவனத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக தாற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து டியூஷன் நடத்துவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை மீறிச் செயல்படும் ஆசிரியர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோரப்படுகிறார்கள்.

Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List (Physics, Chemistry, Botany, History & Commerce)