ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக, ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்பூர் வடக்கு வட்டார தலைவர் பாலசுப்ரமணி, செயலாளர் முத்துச்சாமி வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடிகளில், நிலை அலுவலர்களாக அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் என பணிகள் வழங்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக, மத்திய, மாநில அரசு பணியாளர்களை பயன்படுத்தலாம் என்ற விதி இருந்தும், ஆசிரியர்களையே முழுமையாக பயன்படுத்துவதால், கற்றல், கற்பித்தல் பணிகள் முழுவதும் பாதிக்கப்படுகிறது.எனவே, மத்திய, மாநில அரசு பணியாளர்களை நியமிக்கவும், விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment