ஆதார் எண் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த மாதத்தில் இருந்து காஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும்' என, எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் (பாஹல்) 2015 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படுகிறது.மானியம் பெற 'ஆதார்' எண்ணை, காஸ் ஏஜன்சிகளிடம் வழங்க வேண்டும். ஆனால் 20 சதவீத வாடிக்கையாளர்கள் 'ஆதார்' எண் வழங்கவில்லை.
இந்நிலையில், 'ஆதார் எண் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே ஜூலை 1- முதல் காஸ் மானியம் வரவு வைக்கப்படும்' என எண்ணைய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.'செப்.,30 க்குள் 'ஆதார்' எண்ணை சமர்ப்பித்தால், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவை மானியத்தை பெற்று கொள்ளலாம். அக்.,௧க்கு பின் 'ஆதார்' எண் ஒப்படைத்தால், அதற்கு பிறகு வாங்கும் சிலிண்டருக்கு உரிய மானியம் மட்டுமே வழங்கப்படும். நிலுவை மானியம் வழங்கப்படாது' என அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment