இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 11, 2016

தூய்மைப் பள்ளிகளுக்கு விருதுகள் விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் "தூய்மைப் பள்ளிகள்' விருதுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு, நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான பள்ளிகள் இயக்கம்(Swachh Vidyalaya  Puraskar)

துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், தேசிய, மாநில, மாவட்ட அளவில் தூய்மைப் பள்ளிகள் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் இந்த விருதை பெற, நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் பள்ளியினை பதிவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து தண்ணீர், கழிவறை, கைகழுவும் வசதி, இயக்குதலும் மற்றும் பராமரித்தலும், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது.

அதன்படி விருதுக்கு விண்ணப்பித்த பள்ளிகளின் பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர், 3 ஆசிரியர்கள், ஒரு பொறியாளர், மாவட்ட உடல்நல அலுவலர் மற்றும் இரண்டு தன்னார்வலர்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள்.

அதைத்தொடர்ந்து இந்த விருதுக்கான பள்ளிகள் தேர்வு செய்யப்படும். இந்த விருதை பெற விரும்பும் பள்ளிகள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment