7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே ஏற்பதாக மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 29-ஆம் தேதி அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும், குறைந்தபட்ட ஊதியம் ரூ.18,000 என்பதை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதையடுத்து இந்த கோரிக்கைகளைப் பரிசீலிக்க உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
இதனால், 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வருமா? அல்லது காலதாமதமாகுமா? என்று கேள்வி எழுந்தது. முக்கியமாக, ஜூலை மாத சம்பளம், ஓய்வூதியத்துடன் 7-ஆவது ஊதியக்குழுவின் பலன்கள் கிடைக்குமா அல்லது காலதாமதமாகுமா என்ற குழப்பம் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தில்லி வட்டாரங்கள் கூறுகையில், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவது தொடர்பான அரசு அறிவிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment