ஜூலை, 18 முதல், பள்ளிகளில், 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் மாதம் நடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவுக்கு பின், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஜூன், 1ல் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ், ஆக., 29 வரை மட்டுமே செல்லத்தக்கது. எனவே, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை, 18ல் அந்தந்த பள்ளிகள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
தனித்தேர்வர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment