இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, December 14, 2015

அரையாண்டு தேர்வு: அரசு தீவிர ஆலோசனை


வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், நேற்று முதல் செயல்பட துவங்கின.இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது.

எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாணவர்கள் பாதிக்கக் கூடாது; அதே நேரத்தில், தேர்வு இல்லை என்ற அலட்சியமும் வந்துவிடக் கூடாது. எனவே, கிறிஸ்துமஸ் முன்னிட்டு, 24ம் தேதி முதல், 27ம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு மட்டும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை; மற்ற மாவட்டங்களுக்கு, 31 வரை விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

அரையாண்டு தேர்வை பொறுத்தவரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு குறுகிய கால கட்டத்தில், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். ஐகோர்ட்டில் முறையீடு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுநஸ்ருல்லா, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று ஆஜராகி, மனு ஒன்றை சமர்ப்பித்தார். அதில் கூறியுள்ளதாவது:மழை காரணமாக, பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கும் மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பில் இருந்து, மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதை கருதி, எல்.கே.ஜி., முதல், ௮ம் வகுப்பு வரை, அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்றம், தாமாக விசாரணைக்கு எடுத்து, கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை படித்த நீதிபதிகள், இது பற்றி, பிறகு முடிவெடுப்பதாக கூறினர்.

No comments:

Post a Comment