காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்துள்ளது.இந்த ஊதியம் கணவர், மனைவி, 2 குழந்தைகள் என, 4 பேர் கொண்ட குடும்பம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இதில் ஆணுக்கு ஒரு யூனிட், பெண்ணுக்கு 0.80 யூனிட், 2 குழந்தைகளுக்கு தலா 0.60 யூனிட் என, குடும்பத்திற்கு மொத்தம் 3 யூனிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு யூனிட்டிற்கு 475 கிராம் அரிசி அல்லது கோதுமை, 80 கிராம் பருப்பு வகைகள், 100 கிராம் பலசரக்கு பொருட்கள், 125 கிராம் பச்சை காய்கறிகள், 75 கிராம் இதர காய்கறிகள் தேவைப்படும்.அதேபோல் 120 கிராம் பழங்கள், 200 மி.லி, பால், 56 கிராம் சர்க்கரை, 40 கிராம் எண்ணெய் தேவைப்படும். அதன் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் குடும்பத்திற்கு மாதம் 2.5 கிலோ மீன், 5 கிலோ இறைச்சி, 90 முட்டைகள், 5.5 மீ., புது துணி தேவைப்படும். வாங்கப்படும் பொருட்களின் விலை (ஒரு கிலோவிற்கு):
அரிசி அல்லது கோதுமைக்கு ரூ.25.93, பருப்பு வகைகளுக்கு ரூ.97.84, பலசரக்கு ரூ.58.48, பச்சை காய்கறிகளுக்கு ரூ.38.12, இதர காய்கறிகளுக்கு ரூ.32.80, பழங்களுக்கு ரூ.64.16, சர்க்கரைக்கு ரூ.37.40, எண்ணெய்க்கு ரூ.114.02, மீன்களுக்கு ரூ.268.38, இறைச்சிக்கு ரூ.400.90 செலவாகும்.அதேபோல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.37.74, ஒரு மீ., துணிக்கு ரூ.164.88, ஒரு குடும்பத்திற்கு சோப்பு ரூ.291.31, எரிபொருள், குடிநீர், மின் கட்டணத்திற்கு ரூ.2,304, திருமணம், பொழுதுபோக்கு, திருவிழாக்களுக்கு ரூ.2,033.38, இதர செலவிற்கு ரூ.4,444.13, மொத்தம் ரூ.18 ஆயிரம் இருந்தால் போதும் என, 7 வது ஊதியக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment