இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 29, 2015

2017 மார்ச் முதல் அஞ்சலகங்கள் வங்கிகளாக செயல்படும்


அஞ்சலகங்கள் வங்கிகளாக மாறும் திட்டம் 2017 மார்ச் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அஞ்சலகங்களை பேமன்ட் பேங்க் எனப்படும் பணம் வினியோகிக்கும் வங்கிகளாக மாற்றும் திட்டம் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும். அஞ்சலகங்களில் தொடங்கப்படும் பேமன்ட் வங்கியுடன் இணைந்து செயல்பட உலக வங்கி, பார்கிலே நிறுவனம் உள்ளிட்ட 40 சர்வதேச நிதி அமைப்புகள் ஆர்வம் காட்டி யுள்ளன. பேமெண்ட் வங்கி தொடங்க 11 நிறுவனங்களின் விண்ணப்பங்களை கொள்கை அளவில் ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் தபால் துறை உள்ளிட்டவற்றை பேமன்ட் வங்கிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை சார்பில் டிசம்பர் 25ம் தேதி முதல் சிறந்த நிர்வாக வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹரித்துவார், ஆஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் வைபி ஹாட் ஸ்பாட் உள்பட 25 வசதிகளை ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், புதிய திட்டங்களை தொடங்குவதில் பிஎஸ்என்எல் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

டிசம்பர் 20ம் தேதி வரை 33 ஆயிரத்து 702 கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதி கிடைக்கும் வகையில் 75 ஆயிரத்து 593 கிமீ தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்குள் 50 ஆயிரம் கிராமங்களுக்கும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் கிராமங்களுக்கும் தொலை தொடர்பு வசதி மேம்படுத்தப்படும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இணைய சேவை சென்று சேர்வதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment