கையகப்படுத்தப்பட்ட நிலம், உள்ளூர் நிலவரம் உட்பட, அனைத்து விவரங்களையும் மாவட்ட கலெக்டர் முறைப்படி அனுப்பி வைத்தால், தேனியில், 'கேந்திரிய வித்யாலயா' எனப்படும், மத்திய அரசு பள்ளி துவக்க, உடனடியாக அனுமதி வழங்கப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிகவும் குறைவு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில், இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறிப்பாக, தென்மாவட்டங்கள் பலவற்றில், இந்தப் பள்ளிகளே இல்லை. இந்நிலையில், டில்லியில் நேற்று, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, தேனி லோக்சபா தொகுதி எம்.பி., பார்த்திபன் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், '2016 - -17ம் கல்வி ஆண்டில், தேனி தொகுதியில், கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.
மனுவை பெற்ற அமைச்சர் உரிய முறையில் பரிசீலிப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:தேனி மாவட்டத்தினர், தங்களின் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்க வேண்டும் எனில், மதுரை அல்லது திருச்சிக்குத் தான் செல்ல வேண்டி உள்ளது. எங்கள் அமைச்சகத்திற்கு கிடைத்த தகவல்படி, தேனி மாவட்டத்தில், வீரபாண்டிக்கு அருகே, தப்புக்குண்டு என்ற ஊரில், மாநில அரசுக்கு சொந்தமான, 60 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு பாலிடெக்னிக் உள்ளது; அரசு கலைக் கல்லுாரி கட்டும் திட்டமும் உள்ளது. உடனே அனுமதி அந்த நிலத்தின் ஒரு பகுதியை, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக ஒதுக்கலாம். ஆனாலும், இதுகுறித்த முறையான தகவல் எதுவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வரவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலம், உள்ளூர் நிலவரங்கள், மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை உட்பட, கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்குவதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளதாக, அந்த மாவட்ட கலெக்டர் அறிக்கை தர வேண்டும்.
அப்படி அறிக்கை அளித் தால், தேனியில், கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க, உடனே அனுமதி தர மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment