இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 04, 2014

அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் வினா வங்கி புத்தகத்தை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) வினா எழுப்பினார். அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினா வங்கி புத்தகத்தை கூடுதல் மையங்களில் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதில்:

வினா வங்கி புத்தக தொகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தின் மூலமாக மிகக் குறைந்த விலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனாலும், அவற்றை விலையில்லாமல் கூடுதல் மையங்களின் மூலம் விநியோகம் செய்வது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யப்படும். வினா வங்கி புத்தகம் உள்பட தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் 90.7 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 90.6 சதவீதமுமாக தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

No comments:

Post a Comment