், நிகழ் கல்வியாண்டில் பல்வேறு பட்டப் படிப்புகளில் 163 பாடப் பிரிவுகள் புதிதாகத் தொடங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1,623 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த கல்வியாண்டில் பதவி உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட காலியிடங்கள், புதிய பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் என மொத்தம் 1,112 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 797 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிகழ் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 26 பாடப் பிரிவுகள், 23 முதுகலை பாடப் பிரிவுகள், 62 எம்.பில்., பாடப் பிரிவுகள், 52 பி.எச்.டி., பாடப் பிரிவுகள் என மொத்தம் 163 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும். புதிய கல்லூரி: மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளில் பல்கலைக்கழக உறுப்புக் கலை, அறிவியல் கல்லூரிகள் என்ற வகையில் 37 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மயிலாடுதுறை, சீர்காழி தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, மயிலாடுதுறையில் மணல்மேடு என்ற இடத்தில் புதிதாக இருபாலரும் படிக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரி நிகழாண்டு முதல் தொடங்கப்படும
். சென்னை கடற்கரைச் சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூரில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் 10 ஏக்கரில் ரூ.95 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தல் பயிலும் இளநிலை மாணவர்களுக்காக புதிய மாணவர்-மாணவியர் விடுதிகளும், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு நிர்வாகக் கட்டடமும் அங்கு பயிலும் இளநிலை மாணவியர்களின் வசதிக்காக புதிய விடுதிக் கட்டடங்களும் கட்டப்படும். தமிழகத்தில் உயர்கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகங்களில், நூலகம் சார்ந்த தகவல்கள், ஆராய்ச்சி உள்ளிட்டவை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்திலும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் மின் தொடர்பு நூலக களஞ்சியங்களை இணையதள வசதியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களும், அவற்றில் இணைவு பெற்ற கல்லூரிகளும், இந்தக் களஞ்சியத்துடன் இணைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
திருச்சி, கோவை மண்டலங்கள் பிரிப்பு உயர் கல்வித் துறையின் கீழுள்ள திருச்சி, கோவை மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. புதிதாக தஞ்சாவூர், தருமபுரியைத் தலைமையிடமாகக் கொண்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் 10 மாவட்டங்களின் கல்லூரிகளும், கோவை மண்டலக் கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்களின் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு மண்டலங்களிலும் அதிகக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளதால், நிர்வாக வசதிக்காக திருச்சி மண்டலம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும். இந்த அலுவலகம் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும். கோவை மண்டல அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி தருமபுரியில் புதிதாக ஒரு மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் உருவாக்கப்படும்
. இந்த அலுவலகம் தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
No comments:
Post a Comment