தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், தமிழகத்தில் தேர்தலின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பு வரை பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவார்கள். தற்போது 7 ஆயிரம் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு அன்று காலை 9, 11 மணி மற்றும் பிற்பகல் 1 மணிக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்படும். தேர்தல் குறித்த விளம்பரத்தை நாளை மறுநாள் வரை பத்திரிகைகளில் வெளியிடலாம். ஆதார், பாஸ்போர்ட் உள்பட 12 அடையாள அட்டை மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.
தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். வன்முறை, பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தலின்போது தடை உத்தரவு அமலில் இருக்கும். பணம் வாங்காமல் மனசாட்சியுடன் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment