தேர்தலில் ஓட்டளித்தற்கான அடையாளமாக, கை விரலில் வைக்கப்படும் அழியாத மை, கர்நாடக மாநிலத்தில் உள்ள, 'மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ்' நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின், 39 மற்றும் புதுச்சேரி தொகுதி உட்பட, நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், இம்மாதம் 7ல் துவங்கி, மே 12ல் நிறைவடைகிறது. ஒருவரே பல முறை ஓட்டுப் போட முயல்வது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக, ஓட்டளிக்கும் வாக்காளரின் கைவிரலில், ஓட்டளித்ததற்கான அடையாளமாக அழியாத மை வைக்கப்படுகிறது.
இந்த மை, பல மாதங்களுக்கு அழியாமல் இருக்கும். இந்த மையை, கர்நாடக மாநில அரசு நிறுவனமான, மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் தயாரிக்கிறது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல்கள் மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் நடைபெறும் தேர்தல்களுக்கும், இந்த நிறுவனம் அழியாத மையை வழங்குகிறது. இந்நிறுவனம், 1937ல், அப்போதைய மைசூர் மகாராஜாவாக இருந்த, நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் துவக்கப்பட்டது. கடந்த, 1962ல் இருந்து, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அழியாத மை தயாரித்து வழங்கி வருகிறது.
நம் நாட்டில், 2006ல் இருந்து, வாக்காளரின் விரலில், இடது கை ஆட்காட்டி விரல் நகத்தில், ஊதா நிறத்தில் சிறிய கோடாக அழியாத மை வைக்கப்படுகிறது. இந்த மையில், 'சில்வர் நைட்ரேட்' என்ற ரசாயனம் உள்ளது; இதை நீக்குவது எளிதல்ல.
No comments:
Post a Comment