் பிளஸ் 2 தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு, இனி தனி தேர்வு மையம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு , தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்வு மையத்தில் ஒரு ஹாலில் அதிகபட்சம் 30 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நடைமுறையில் வரும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஹாலில் 20 பேர் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர, பள்ளிகளில் பயிலாதோர் தனித்தேர்வர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனி மையம் அமைத்து தேர்வு நடத்தப்பட்டது. வரும் பொதுத்தேர்வில் இவர்களுக்கென தனி தேர்வு மையம் கிடையாது. பள்ளி மாணவர்களின் தேர்வு மையத்தில் இடையே, இடையே தனித்தேர்வர்களுக்கு இடம் ஒதுக்கி தேர்வெழுதவேண்டும், என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ""வீட்டில் படித்து பொதுத்தேர்வு எழுதுவோருக்கென தனிப்பாடம் கிடையாது. தனித்தேர்வர்கள் என்ற மனநிலையை போக்க, பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஒரே ஹாலில் தேர்வெழுதும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் பின்பற்றப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment