click Below
Wednesday, October 31, 2012
மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்
மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது. மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன். திண்டுக்கல்லில் நடந்த பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ்
மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை
ி மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது. ஒருவர், பத்து ரூபாயைத் திருடி விட்டாராம் என பரப்பப்படும் வதந்தி, பத்தாவது நபரைச் சென்றடையும்போது, பத்து கோடி ரூபாயாக மாறியிருக்கும்; அந்த அளவுக்கு, "வதந்தீ' கொடூரமானது.உண்மையான, நல்ல, நட்புறவான தகவல்களை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, அருமையான ஊடங்களாக இருக்கும், மொபைல் போனின், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., கலவரங்களை ஏற்படுத்தி விட்டன என்பது, சமீப கால உண்மை.வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை, ஒரு தரப்பினர், தவறாக புரிந்து கொண்டு, வதந்தியை பரப்பும் விதத்தில் அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., செய்திகளால், நாட்டின் பல பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த, வட கிழக்கு மாநிலத்தவர் ஏராளமானோர், ஆகஸ்டில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்ட, அவர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயன்றும் முடியவில்லை.அதையடுத்து, மொத்தமாக, அதிக எண்ணிக்கையில் (பல்க்), எஸ்.எம்.எஸ்., செய்திகளை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது; நிலைமையும் சில நாட்களில் சீரானது. ஆனால்,"பல்க்' எஸ்.எம்.எஸ்., செய்திகளை பரிமாறிக் கொள்ளும் காது கேளாதோர், தகவல்களை தெரிவிக்கும் நிறுவனங்கள், ரயில்வே, விமான விசாரணை தகவல்கள் பாதிக்கப்பட்டன. பல்க் எஸ்.எம்.எஸ்., என்ற பிரிவிற்குள் கொண்டு வரப்படும் பிரிவினர், யார் யார், யாருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, முன்வந்த மத்திய உள்துறை அமைச்சகம், அது குறித்து ஆராய, குழு ஒன்றை அமைத்துள்ளது.அந்த குழுவிற்கு, தொலை தொடர்புத்துறை இயக்குனர், ஆர்.சாக்யா அமைப்பாளராக இருப்பார். அதில், தொலை தொடர்புத்துறை, தகவல் தொழில்நுட்பம், உளவுப் பிரிவினர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்பினர் இடம்பெற்றிருப்பர்.இந்த உயர்மட்ட குழு, பட்டியல் ஒன்றைத் தயாரித்து, பல்க் எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., குறித்து முடிவு செய்யும்.
இடைநிலை ஆசிரியர் தகுதி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு சீனியாரிட்டி சரி பார்ப்பு-Dinamalar news
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி நேற்று சரி பார்க்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றோர் முதல் தாளையும், பி.எட் ஆசிரிய பயிற்சி முடித்தோர் இரண்டாம் தாள் தேர்வையும் எழுதினர்.இதில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி சரி பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இப்பணிகளை மேற்கொண்டனர்.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றோர் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் இரண்டு நகல்களுடன் இதில் பங்கேற்றனர்.
தொடர்ந்து இவர்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை சரி பார்க்கப்பட்டது. தொடர்ந்து தகுதியான 48 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பும் பணி நடந்தது. இப்பட்டியல் முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், மாற்றம் செய்தலுக்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதி வரை வழங்க கால அவகாசம் நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 1.1.2013ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம், மாற்றம் செய்தல் தொடர்பாகவும் வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.வரைவு வாக்காளர் பட்டியலை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் மாற்றம் செய்தலுக்கான விண்ணப்பங்களை வாக்காளர்கள் போட்டி போட்டு கொண்டு அளித்த வண்ணம் இருந்தனர். விண்ணப்பங்களை அளிக்க நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
இந்நிலையில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியலில் குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் மாற்றம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் காரணாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் சென்னை , காஞ்சிபுரம், தி.மலை, வேலூர், தருமபுரி, குமரி, திருவள்ளூர், கோவை, விழுப்புரம் , தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி , குன்னூர் கோத்தகிரி, குந்தா, திருச்சி, கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடிபுதுக்கோட்டை மற்றும் கடலோர மாவட்டங்களி்ல் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! Posted Date : 15:25 (31/10/2012)Last updated : 15:29 (31/10/2012) சென்னை: சென்னை உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலம் புயல் இன்று மாலை கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்க உள்ளதால், சென்னை அருகே கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் வீடு திரும்பலாம் என அறிவித்தார். அத்துடன் தனியார் நிறுவன ஊழியர்களும் வீடு திரும்ப அவர் அறிவுறுத்தினார். மேலும் சென்னை உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பிற்பகல் விடுமுறை
நீலம் புயல் சென்னையை நெருங்குவதையடுத்து, சென்னையிலுள்ள அரசு ஊழியர்களுக்கு இன்று பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணியுடன் அரசு அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநராக இளங்கோவன் நியமனம்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில இயக்குநராக உள்ள இளங்கோவனிடம் இந்தப் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் இதுவரை இந்தப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
பாடத்திட்டங்களை உருவாக்குதல், புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் (ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) இயக்குநராக இளங்கோவன் ஏற்கெனவே 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
Tuesday, October 30, 2012
புயல் அபாயம் : 14 மாவட்டங்களில் இன்று (31.10.20120 பள்ளிகள் விடுமுறை
பலத்த மழை மற்றும் புயல் அபாயம் காரணமாக தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை - பள்ள
ி கரூர் - பள்ளி
வேலூர் -பள்ளி, கல்லூரிகள் சென்னை - பள்ளி, கல்லூரிகள் திருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகள் காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகள் திருவண்ணமாலை - பள்ளி, கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகள் தஞ்சை - பள்ளி, கல்லூரிகள் திருவாரூர் - பள்ளி, கல்லூரிகள் கடலூர் - பள்ளி, கல்லூரிகள்
நாகை - பள்ளிகள், கல்லூரிகள் அரியலூர் - பள்ளிகள்
விழுப்புரம் - பள்ளிகள் மற்றும்
புதுச்சேரி, காரைக்கால் புதுவையில் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை பலத்த மழையால் புதுச்சேரியிலுள்ள கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குனர் பன்னீர்செல்வம் இதனையை அறிவித்தார்.
4ம் தேதி குரூப்-2 தேர்வு : 6.5 லட்சம் பேர் பங்கேற்பு
நவம்பர் 4ம் தேதி நடக்கும் குரூப்-2 தேர்வுக்கு, அனைத்து ஏற்பாடுகளையும், டி.என்.பி.எஸ்.சி., செய்து முடித்துள்ளது. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, குரூப்-2 நிலையில், 3,687 காலி பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 12ல், தேர்வு நடந்தது.
இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர். அத்தேர்வு கேள்வித்தாள், முன்கூட்டியே, "லீக்' ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டு, நவம்பர் 4ல், மறுதேர்வு நடக்கும் என, தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி, 4ம் தேதி நடக்கும் மறுதேர்வில், ஏற்கனவே பதிவு செய்த, 6.5 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', தேர்வாணைய இணையதளத்தில் (தீதீதீ.tணணீண்ஞி.tண.ணடிஞி.டிண) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், 3,456 மையங்களில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்தார். வழக்கம்போல், அனைத்து தேர்வு மையங்களிலும், வீடியோ கண்காணிப்பு இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.
மழையால் தொடர் விடுமுறை : சனிக்கிழமைகளில் பள்ளி நடக்குமா?
பண்டிகைகள் மற்றும் தொடர் மழை காரணமாக, பள்ளிகளுக்கு, தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. கல்வித் துறை நிர்ணயித்தபடி, நவம்பருக்குள், அரையாண்டு பாடத் திட்டங்களை முடிக்க வேண்டும் எனில், இனி, சனிக்கிழமைதோறும் பள்ளிகளை நடத்தினால் தான் முடியும் என, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இம்மாதம், 2ம் தேதி, காந்தி ஜெயந்தி, 23ல், ஆயுத பூஜை, 24ல், விஜயதசமி, 27ல் பக்ரீத் என, நான்கு நாள், அரசு விடுமுறை விடப்பட்டது. கடந்த சில தினங்களாக, தொடர்ந்து பெய்து வரும் மழையால், கடலூர், நாகை, விழுப்புரம், அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட, சில மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல், கரையை கடக்கும் போது, கனமழை பெய்யும் என்பதால், அரியலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஒன்பது மாவட்டங்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி, தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால், கல்வித்துறை நிர்ணயித்த காலத்திற்குள், பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை, ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரையாண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்களை, நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக, டிசம்பர் முதல் வாரம் வரை, கால அவகாசம் வழங்கப்படுகிறது. மழையால், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. இந்த நாட்களை, ஈடு செய்ய வேண்டும் எனில், அரையாண்டு தேர்வு வரை, அனைத்து சனிக்கிழமைகளிலும், பள்ளிகளை நடத்துவதைத் தவிர, வேறு வழியில்லை. சனிக்கிழமைகளில், பள்ளியை நடத்த வேண்டும் என, இதுவரை, கல்வித்துறை எவ்வித உத்தரவையும் வழங்கவில்லை. எனினும், பாடத்திட்டங்களை முடிக்க, பள்ளி நிர்வாகங்களே, சனிக்கிழமையும், அரை நாள் பள்ளியை நடத்தலாம். அதன்படி, சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தி, பாடத்திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அந்த ஆசிரியர் கூறினார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஆரம்பம்
முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக, 3,219 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களிலும், நேற்று துவங்கியது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலையில் போட்டித் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டது.
23 கேள்விகளுக்கான விடைகளில் குளறுபடி ஏற்பட்டதால், சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், குளறுபடியான கேள்விகளுக்கு, உரிய மதிப்பெண்களை வழங்கி, அதனடிப்படையில், புதிய தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட உத்தரவிட்டது. அதன்படி, புதிய பட்டியலை தயாரிக்க, கூடுதலாக, 3,219 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யும் பணி, 32 மாவட்டங்களிலும் நேற்று துவங்கியது.
இன்றும், தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. நவ., 15ம் தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப்-4 தேர்வு: வெற்றி பெற்றோர் சான்றிதழ்களை அனுப்ப காலக்கெடு நீட்டிப்ப
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் முடிந்த குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2007- 2008, 2012-13-ம் ஆண்டுகளுக்கான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து- தட்டச்சர் பணிகளுக்கான தேர்வு (குரூப்-4) முடிவு அக்.8-ம் தேதி வெளியானது. வெற்றி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை அனுப்ப அக்.22-ம் தேதி கடைசி தேதியா அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சான்றிகழ்களை அனுப்ப நவம்பர் 2-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்களது தற்காலிக தெரிவு ரத்து செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
Monday, October 29, 2012
வருவாய் திறன் உதவித்தொகை தேர்வு:விண்ணப்பங்கள் வரவேற பு ்
தமிழகத்தில், டிச., 30ம் தேதி நடக்க இருக்கும், தேசிய வருவாய் திறன் உதவித் தொகை தேர்வுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தேசிய வருவாய் திறன் படிப்பு உதவித் தொகைக்கான, தேர்வு நடக்கிறது. நவ., 9ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர்களிடம், 50 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி, பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும
்.கடந்த, 2011 - 12 கல்வியாண்டில், ஏழாம் வகுப்பு தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், 50 சதவீதம்; பிற மாணவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு, தலா, 6,000 ரூபாய் உதவித் தொகை, மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம், நவ., 12ம் தேதிக்குள், முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலர், ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம
் அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது.
குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30 விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள் விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி ஆசிரியர்கள் பணியாற்றுவர்,''என்றார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்கள் நியமனம
ஆசிரியர் தகுதித்தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நாளை (அக்., 31) ஆஜராக வேண்டும்.
வேலை வாய்ப்பு பதிவு அட்டை சான்றொப்பமிட்ட இரு நகல்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால்டிக்கெட் நகல், அழைப்பு கடித நகல் ஆகியவற்றுடன்,வருகை தர வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வு முடிவு ஒரு வாரம் தள்ளி வைப்பு
சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர்.
விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில் கட்டணம் உயரலாம்: பவன்குமார்
ிதேவைப்பட்டால் பயணிகளுக்கான ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என புதிதாக ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார். மேலும் பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
ரயில்வே துறை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், தினசரி 11,000 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்புக்களை தான் அறிவதாகவும், அவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார். பதவியேற்ற மறுநாளே கட்டணத்தை உயர்த்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.