இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 19, 2016

எல்.கே.ஜி.,க்கு ரூ.42 ஆயிரம் 'பீஸ்' சிங்காரவேலர் கமிட்டி அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய, அரசு சார்பில், நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் சார்பில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயித்து, அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும், உள்கட்டமைப்பு, நில அளவு, அங்கீகார நிலை, அரசு விதிமுறைகளை பின்பற்றுதல், மாணவர், ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதி அமைத்தல் போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.இதன்படி, முதல் கட்டமாக, கடந்த ஆண்டுடன் கட்டண நிர்ணயம் காலம் முடிந்த, 10 ஆயிரம் பள்ளிகளுக்கு அடுத்த,இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பல பள்ளிகளுக்கு, 40 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தான், கல்வி கட்டணம் அதிக அளவு வசூலிக்கப்படுகிறது. சென்னை, கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில், எல்.கே.ஜி.,க்கான கல்வி கட்டணமாக, 42 ஆயிரத்து, 500 ரூபாய் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பள்ளிகள்:

நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள்,  6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே வகுப்புகள் நடத்துகின்றன. இவற்றிலும் பல பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இவற்றில், வித்யா விகாஸ், வெற்றி விகாஸ் ஆகிய பள்ளிகளில், பிளஸ் ௨ படிப்புக்கு, 30 - 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 18, 2016

ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.பணி நிறைவடையாததால், பிப்., 25 வரை இப்பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் அழைத்து பேசும் வரை போராட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு


அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசும் வரை போராட்டம் தொடரும்,'' என, சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். அது உட்பட 20 கோரிக்கைகளை நிறைவேற்ற நான்காண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். 72 முறை மனு கொடுத்திருக்கிறோம். பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம். தற்போதைய காலவரையற்ற போராட்டத்திற்கு அரசு தான் காரணம். எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஐந்து அமைச்சர்கள், 'நியாயமானது எனக்கூறியதுடன், முதல்வரிடம் கூறி நிறைவேற்றுவதாக,' தெரிவித்தனர். அமைச்சர்கள் முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றார்களா என்பது சந்தேகமாக உள்ளது.

எனவே உடனடியாக முதல்வர் ஜெ., சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். இந்த வேலை நிறுத்தத்தால் மக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்புள்ளது. ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் பள்ளிகள் மூடப்படும் நிலையுள்ளது, என்றார்.

Tuesday, February 16, 2016

வாக்காளர் பட்டியல் திருத்தம்:ஆசிரியர் கூட்டணி சந்தேகம்


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடப்பது சந்தேகம்' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மீண்டும் துவங்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், இப்பணி நடப்பது சந்தேகம் என, தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்பூர் தெற்கு வட்டார செயலாளர் கனகராஜிடம் கேட்டபோது, ''மக்கள்தொகை கணக்கெடுப்பு திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடக்கும் என அறிவித்திருப்பது, அதிர்ச்சியளிக்கிறது. இதுவரை, பள்ளிகளுக்கு பட்டியல் அனுப்பவில்லை. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், செம்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வது சந்தேகமே,'' என்றார்.

பிஎப் வட்டி வகிதம் 8.80 சதவீதமாக உயர்வு


தொழிலாளர் வைப்பு நிதியான பிஎப்., வட்டி விகிதம் 8.75 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். சென்னை கிண்டியில் தொழிலாளர் வை‌ப்பு நிதி தொடர்பான சங்கக்கூட்டத்தில் பங்கேற்ற பண்டாரு தத்தாத்ரேயா, கூட்டத்தை முடித்த பின்னர் செய்தியாளர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார்.

பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு


பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 1,2,3 ஆண்டு சேமிப்புத் திட்டங்கள், கிசான்விகாஸ் பத்திரங்கள் வட்டி 0.25 சதவீதம் குறைப்பு 5 ஆண்டு அஞ்சலக ஆர்டி சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி, 5 ஆண்டு தேசிய சிறுசேமிப்பு பத்திரத்திற்கான வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMMS exam hall ticket

Click below

http://www.tndge.in/login.aspx

Monday, February 15, 2016

ஆசிரியர் பயிற்சி தேர்வு மறுகூட்டல் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டு வரை படித்த மாணவர்கள் தேர்வின் விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் விண்ணப்பிக்கலாம். அதற்காக www.tndge.in என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இன்று மதல் 20ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்துக்கு ரூ.275 மற்றும் ஆன்லைன் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மறுகூட்டல் செய்ய ஒரு பாடத்துக்கு ரூ.205 செலுத்த வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது. ஜாக்டோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகிய இரு அமைப்புகளையும் தனித்தனியே அழைத்து அமைச்சர்கள் குழு அண்மையில் பேச்சு நடத்தியது. பிப். 16-ஆம் தேதிக்குப் பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை ஜாக்டோ ஏற்றுக் கொண்டது.

ஆனால், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அரசு ஊழியர் சங்கத்தினருடன் சேர்ந்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் 17-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். ஜாக்டோ அமைப்பில் உள்ள சங்கங்கள், தனித்தனியே வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, மற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் எஸ்.மோசஸ் கூறியதாவது:-மற்ற சங்கங்களும் எங்களுடன் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வர். வேலைநிறுத்தத்தையொட்டி பல இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றனர் என்றார்.

பிளஸ் 2 தேர்வு பாதிக்கும் அபாயம்?மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஸ்டிரைக்


பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத் தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது; ஆனால், எந்த உறுதியும் அளிக்கவில்லை.எனவே, ஜாக்டோவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நேற்று முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். 'முதல் நாளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை' என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தெரிவித்தார்.

இந்நிலையில், 'முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், இன்று முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவர்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் அறிவித்துள்ளார்.போராட்டம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தான், பிளஸ் 2 பாடம் நடத்துகின்றனர்; தேர்வு கண்காணிப்பு, மேற்பார்வை, விடைத்தாள் திருத்தம் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் போராட்டம், செய்முறைத் தேர்வையும், பொதுத் தேர்வையும் நேரடியாக பாதிக்கும் எனகூறப்படுகிறது. 'ஹால் டிக்கெட்' இன்று முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், 'மார்ச், 4 முதல் பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 22 முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும்' என, கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஏழு லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாணவர்களின் பெயர் விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு, இறுதிப் பட்டியலை, அந்தந்த பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதேபோல், மாணவர்களின் ஹால் டிக்கெட், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கவலை அனைத்து பள்ளிகளுக்கும் பிப்., 20 முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 'மாணவர்களுக்கு பிப்., 22 முதல், 27க்குள் ஹால் டிக்கெட் வழங்கப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுத் தேர்வுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பால், தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என, மாணவர்களும், பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர். செம்மைப்படுத்துவதில் சிக்கல் தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, நேற்று துவங்கியது. பட்டியலில் உள்ள, இறந்தவர்கள் பெயர்; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்கள் பெயர்; தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்டுள்ள போலி வாக்காளர் பெயர் போன்றவற்றை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, தேவையற்ற பெயர்களை நீக்கும் பணி, பிப்., 29 வரை நடைபெறும்.அரசு ஊழியர் சங்கம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், சென்னை தவிர பிற மாவட்டங்களில்,வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

பொறுமை இழந்தோம்


ஓராண்டாக தொடர் போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காததால், பொறுமை இழந்து ஸ்டிரைக்கில் ஈடுபடும் நிர்ப்பந்தம் வந்துள்ளது. 25 ஆயிரம் ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். ஜாக்டோவில் உள்ள அனைத்து சங்கங்களும் தீவிர போராட்டத்தில் இறங்கும். அரசு கோரிக்கைகளை ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

- பாலசந்தர், பொதுச்செயலர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா


தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழகத்தில், மார்ச், 4 முதல், பிளஸ் 2; மார்ச், 15 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன; 15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், குறுக்கு வழியில் மாநில, 'ரேங்க்' பிடிக்க நினைக்கும் சில தனியார் பள்ளிகளுக்கு, 'செக்' வைக்க, தேர்வு அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, சந்தேகத்துக்கு இடமான தனியார் பள்ளிகள் பட்டியல் தயாராகி வருகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சில ஆண்டுகளாக, கொங்கு மண்டலத்தில் உள்ள, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள்; மதுரை மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும், மாநில, 'ரேங்க்' எடுக்கின்றன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, தனியார் பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஆள் மாறாட்டம் செய்ததும்; கேள்வித்தாளை, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிற ஆசிரியர்களுக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த பிரச்னை, பொதுத் தேர்வில் விஸ்வரூபம் எடுத்தது; இது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே, இந்த ஆண்டு, தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பாளர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட உள்ளது.

மேலும், தேர்வு அறையில், கண்காணிப்பு கேமரா பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில் அதிகாரிகள், ஆசிரியர்கள் உதவியுடன் முறைகேடு நடப்பது இதன் மூலம் தடுக்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறின. அதிகாரிகள், அரசியல்வாதிகள் உடந்தை சில குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் மாநில, 'ரேங்க்' பிடிக்கின்றன. மேலும், அரசு பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, சில தனியார் பள்ளிகள் முன்னிலை பெறுகின்றன. இதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். அதனால் தான், கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; மொபைல் போனுக்கு கட்டுப்பாடு போன்ற திட்டங்களை, தேர்வுத் துறையால் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியவில்லை என, கூறப்படுகிறத

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) Term End Examination Revaluation 2016 Results Published

Click below

http://www.tnou.ac.in/bedrev2016.htm

Sunday, February 14, 2016

அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது : தமிழகம் ஸ்தம்பிக்கும் அபாயம்-தினகரன்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்கள் போராட்டத்தை இன்று முதல் தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால், பல்வேறு துறைகள் முற்றிலும் முடங்குவதுடன், ரேஷனில் அரிசி, சர்க்கரை மற்றும் வருவாய் துறையில் சான்றிதழ், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது உள்பட அனைத்து பணிகளும் கடுமையாக பாதிக்கும். தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது.

ஆனால், இதுவரை ஒருமுறை கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என எந்த சங்கங்களையும் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

திணறும்அமைச்சர்கள்: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10.63 லட்சம் வாக்குகள் மற்றும் அவர்களது குடும்ப வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சத்தில், கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தும் சங்கங்களுடன் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் மற்றும் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அடங்கிய குழுவினர் பேசி வருகிறார்கள். குறிப்பாக பேச்சுவார்த்தையின் முடிவில் ‘உங்கள் கோரிக்கைகள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்’ என்று தெரிவித்து வருகின்றனர். இது போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கையாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்ைல. இதனால் இன்று முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்களின் திட்டமிட்டுள்ளனர்.போராட்டம் தீவிரமாகும்: அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது: ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இதுவரை அக்கறை காட்டவில்லை. சமீபத்தில் அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசும்போது, ‘’உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், அவர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என்றும்’’ ஆசை வார்த்தை காட்டினர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் அடுத்தக்கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு ஆசிரியர்கள், நர்சுகள், நீதித்துறை ஊழியர்கள், டாக்டர்கள் என பல்வேறு துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக இன்று காலை அனைத்து மாவட்டங்களிலும் மறியல் நடத்தப்படும். சென்னையை பொறுத்தவரை போலீசார் எங்களை போராடவிடாமல் தடுக்கின்றனர். அரசு தரப்பில் மிரட்டலும் வருகிறது. இருப்பினும் எந்த தடை வந்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றார். எதிர்கட்சிகள் புகார்: அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை ஒன்றிணைந்து இன்று முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ேபாராட்டத்தில் ஈடுபடுவதால் தொடக்கப்பள்ளிகள் நாளை இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊழியர்களின் போராட்டம் தீவிரமடையும் இந்த நிலையிலும், எதை பற்றியும் கவலைப்படாமல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் கூறியுள்ளன. அரிசி, சர்க்கரை, பருப்பு கிடைக்காது: சிவில் சப்ளை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழஙக வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழக அரசின் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் ஊழியர்களும் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இச்சங்கங்களின் கீழ் 15,443 ரேஷன் கடைகளில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதுதவிர பிற சங்கங்களை சேர்ந்த ரேஷன் ஊழியர்கள் உள்பட மொத்தம் சுமார் 30 ஆயிரம் ேரஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் புறக்கணிப்பு: தமிழகத்தில் உள்ள பிற துறைகளைப் போலவே நீதித் துறை ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு மீது உள்ள எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நீதித்துறை ஊழியர்கள் இன்று கோர்ட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த அரசு துறை ஊழியர்களும் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளதால் இன்று முதல் தமிழகம் ஸ்தம்பித்து, அரசு நிர்வாகமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Aadhar card camp and incharge name list in tirupur dist

Click below

https://app.box.com/s/ty90nvbyqahyzbu713ffcxaq7439v93w

Saturday, February 13, 2016

அரசு ஊழியர்கள் போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு


தமிழகத்தில் நாளை (பிப்.,15) நடக்கும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது,'' என, மாநில தலைவர் பேட்ரிக் ரேமன்ட் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:

தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொடக்கக் கல்வி துறையில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளித்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பிப்.,௧௬ல் பட்ஜெட் தாக்கலாகும் வரை காத்திருப்போம். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம், என்றார். நிர்வாகிகள் வீரசிம்மன், ஜெயக்குமார், கிருபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தீவிரமடையும் போராட்டங்கள்


சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைவதால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் அரசின் பதவிக்காலம் முடிவதற்குள், எப்படியாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கில், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஆறாவது ஊதிய கமிஷனின் பல்வேறு குளறுபடிகள்தான், அரசு ஊழியர்களிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலமுறை ஊதியம், முழு நேர ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் ஸ்டிரைக்கால் கிராமப்புறங்களில் நுாறு நாள் வேலை திட்டம் தடைபட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் குறைகள் தீர்க்கப்படும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

ஆனால், ஆட்சி அமைத்து ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்த அரசு ஊழியர் சங்கங்களையும், முதல்வர் அழைத்து பேசவில்லை. இதே போல், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.8 ஆயிரத்து 500 கோடி குறித்து அரசு எந்த வித பதிலையும் தெரிவிக்கவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: ஆதரவற்றோருக்கு வழங்க கூடிய மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் ரூபாய். அந்தளவிற்கு கூட அரசு ஊழியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு இதுநாள் வரை பணபலன்கள் வழங்கப்படவில்லை. எனவே 20 அம்ச கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டங்கள் தொடரும், என்றார். ரேஷன் ஊழியர்களும் போராட்டம்தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் 23 ஆயிரம் ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில் 45 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

'பணி நிறைவு பெறுவோருக்கு ஓய்வூதியம், கருணைத் தொகை வழங்க வேண்டும்' என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். நாளை முதல் போராட்டத்தில் இவர்களும் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மொத்தம் 4,534 தொடக்க வேளாண் கூட்டுறவு ஊழியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்,'' என்றார்.