இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, April 10, 2013

2 புதிய மாநகராட்சிகள்: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

  தமிழகத்தில் கூடுதலாக இரு நகராட்சிகள் மாநகராட்சி அந்தஸ்து பெற உள்ளன. இதற்கான அறிவிப்பினை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்டார். இதையடு்த்து தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாகின்றன. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மான்ய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு, தமிழகத்தில்‌‌‌‌‌ திண்டுக்கல், ‌தஞ்சை ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். தவிர ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தபடும். இந்த திட்டத்தின் மூலம் தலா 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடிநீராக மாற்றப்படும். ரூ. 797 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் : காவிரி ஆற்று நீரை ஆதாரமாக ‌கொண்டு திண்டுக்கல்லில் ரூ. 450 கோடியிலும், தஞ்சைக்கு ரூ. 185 கோடியிலும் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். தவிர திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளுக்கும் காவிரி நீர் மூலம் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும

்.பவானி ஆற்றுநீரை கொண்டு கோவையில் குடிநீர் தி்ட்டம், நெல்லையில் ரூ. 227.26 கோடி மதிப்பில குடிநீர் மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ‌. ரூ.797 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டங்கள் நடப்பாண்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தவிர காரைக்குடி, சிவகாசி ஆகிய தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாக மேம்படுத்தப்படும். திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க உயிரி எரிவாயு திட்டத்திற்கு ரூ. 27 ‌கோடி நிதி ஒதுக்கப்படும். இத்திட்டம் திருச்சி, திருப்பூர், ஈரோடு,சேலம், நெல்லை, சேலம் ஆகிய மாநகராட்சிகள் மற்றும் 24 நகராட்சிகளி்ல் செயல்படுத்தப்படும்.நகராட்சி கணக்குகளை பராமரிக்க புதிதாக நகராட்சி கணக்காளர் பணி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்

Tuesday, April 09, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு: மார்க்சிஸ்ட் கோரிக்கை

் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்களில் 5 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆந்திரம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 முதல் 20 சதவீதம் வரை தகுதித் தேர்வு மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மதிப்பெண்கள் தளர்த்தப்படாததால் இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

69 சதவீத இடஒதுக்கீடு தவிர மீதமுள்ள 31 சதவீதம் என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடைவோர் உள்பட அனைவருக்கும் உரியது. ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொதுப் பிரிவு என்பது இட ஒதுக்கீட்டால் பயன் அடையாதவர்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 122. பொதுப்பட்டியலில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 116. இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு மாறாகவும், சமூக நீதியை மறுக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலையில் நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் கடந்த ஆண்டில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்களில் தேவையான சதவீதம் தளர்த்த வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பிளஸ்–2 விடைத்தாள் மதிப்பீடு 13–ந்தேதி முடிவடைகிறது: எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி 15–ந்தேதி தொடங்குகிறது

  பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி 13–ந்தேதி முடிவடையும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு 15–ந்தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். அரசு பொதுத்தேர்வு பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதி உள்ளனர். மொழித்தாள் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையிலேயே விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியது.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 55 மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மதிப்பீட்டு பணி வருகிற 13–ந்தேதியுடன் முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு இதற்கிடையே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, பிளஸ்–2 தேர்வு முடிவடைந்த அன்று அதாவது மார்ச் மாதம் 27–ந்தேதி தொடங்கியது.

கல்வித் துறை அலுவலருக்கு மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்கள்

Monday, April 08, 2013

2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா

  2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.        சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குனர்கள் இது தொடர்பாக திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்பிஎல் நோட்டு புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் சப்ளை செய்ய வேண்டும். மே மாதம் 20ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் பாட புத்தகங்களை ஏப்ரல் 8ம் தேதி முதல் வினியோகம் செய்து மே 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.    அத்துடன் ஒரு செட் சீருடை மே 15ம் தேதியில் இருந்து மே 28ம் தேதிக்குள் வினியோகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இவற்றை பள்ளிகள் திறக்கும் வேளையில் வினியோகம் செய்ய, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சபிதா தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாத 1,000 தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய குழு கருத்துகள்

  அடிப்படை வசதிகள் இல்லாத 1000 தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்திருக்க வேண்டும்.

அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக்கு குறைந்தபட்சம் 6 கிரவுண்டு நிலமும், நகராட்சி பகுதிகளில் 8 கிரவுண்டு நிலமும், மாவட்ட தலைநகரங்களில் 10 கிரவுண்டு நிலமும், பேரூராட்சி பகுதிகளில் 1 ஏக்கர் நிலமும், கிராம ஊராட்சிகளில் 3 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். இதுதவிர, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகளும் இருக்க வேண்டும்.

இந்த விதிகளுக்கு உட்படாத பள்ளிகளுக்கு தொடர் அங்கிகாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளின் இடப்பரப்பளவு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, முழுமையாக ஆய்வு நடத்தி 3 மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் தேர்வில் தவறான அர்த்தம் தரும் ஆங்கில வழி கேள்வி தேர்வு துறை விசாரணை

  எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் தேர்வில், ஆங்கில வழி கேள்வி ஒன்று தவறான அர்த்தத்தில் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறினர். அறிவியல் தேர்வு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் நேற்று அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடந்தது. கேள்விகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு இருந்தன. இதில் பெரும்பாலான கேள்விகள் சுலபமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், பிரிவு 1–ல் ஒரு மதிப்பெண்ணுக்கான கேள்விகள் நான்கு விடைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதும் அமைப்பில் இருந்தது. இதில், 14–வது கேள்விக்கான அர்த்தம் தமிழ் மொழிக்கும், ஆங்கில மொழிக்கும் முரண்பட்டு இருந்தது. அதாவது, ‘ஒரு கம்பிச்சுருளோடு தொடர்புடைய காந்தப்பாயம் மாறும்போதெல்லாம் அச்சுற்றில் மின்னியக்க விசை உருவாகும் நிகழ்வு............?’ என தமிழில் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு சரியான விடை:– மின்காந்தத் தூண்டல். தவறான அர்த்தம் ஆனால், இதே கேள்வி ஆங்கிலத்தில், தவறான அர்த்தத்தை தருவதாக அமைந்துள்ளது. கேள்வி தவறாக இருப்பதால் ஆங்கில வழி கற்ற மாணவர்கள் குழப்பம் அடைந்து, ஏதோ ஒரு விடையை தேர்வு செய்து எழுதினர்.

இதனால், ஆங்கில வழி மாணவர்கள் 100 மதிப்பெண் பெற முடியாமல் போகும் என அவர்களுடைய பெற்றோர் வருத்தம் தெரிவித்தனர். தேர்வுத்துறை இயக்குனர் பதில் இது பற்றி அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு, இந்த கேள்வி குறித்து விசாரித்து மாணவர்கள் பாதிக்காதவண்ணம் முடிவு எடுக்கப்படும். அந்த கேள்வி தவறாக இருக்குமானால் அந்த கேள்விக்கு உரிய ஒரு மார்க் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

  தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்விஇயக்குனரம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.

ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்கு ஒரே நுழைவு தேர்வு : முதல் முறையாக அறிமுகம்

ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்கு சேர்ந்து, ஒரே நுழைவுத் தேர்வு, இன்று நடக்கிறது. முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள, இந்த நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும், 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா என, நாடு முழுவதும் உள்ள, 77 நகரங்களில் நுழைவு தேர்வுகள் நடக்கின்றன.

ஆன்-லைன் மூலம் நடக்கும் இத்தேர்வுகள், இன்று துவங்கி, இம்மாதம், 22, 23 மற்றும், 25ம் தேதிகளில் நடக்கின்றன. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட, மூன்று பாடங்களில், 360 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும், 30 கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு கேள்விக்கு, 4 மதிப்பெண் வழங்கப்படுகின்றன. கேள்விக்கு தவறாக விடையளித்தால், மதிப்பெண்கள் குறைக்கப்படும். முதல்கட்ட நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 1.5 லட்சம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நுழைவுத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வுக்கு, 40 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. இதில், பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் சேர்க்கை நடக்க உள்ளது.

மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு

  தமிழக சட்டசபையில் விதி எண் 110 -ன் கீழ் முதல்வர் ‌ஜெயலலிதா பேசியதாவது, தமிழகத்தில் மேலும் 4 அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள் துவங்கப்படும். சென்னையில் உலக செஸ் சாம்பியன் ஷிப் தொடர் வரும் நவம்பரில் சென்னையில் நடக்கிறது. இந்த போட்டிக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 29 கோடி நிதி ஒதுக்கப்படும். மாணவர்கள் கல்வி தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய மதுரை, கோவை, திருச்சியில் ரூ. 30 கோடியில் அண்ணா பல்கலை., மண்டல மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் அருகே செய்யாறில் அரசு பாலிடெக்னிக் துவங்கப்படும். திண்டுக்கல், ராமநாதபுரம், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் மாணவர்கள் விடுதிகள் கட்டப்படும்.

உயர்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2013-14

உயர்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2013-14

Sunday, April 07, 2013

பள்ளி செல்லா குழந்தைகள் வயது வரம்பு 18 ஆக அதிகரிப்பு

பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின், வயது வரம்பு, 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பற்றி, வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்படுகிறது. இதில், கண்டறியப்படும் குழந்தைகளை, உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து, முறையான பயிற்சிக்கு பின், "ரெகுலர்' பள்ளியில் சேர்க்கின்றனர்.

இதற்கான கணக்கெடுப்பு, வரும், 10ம் தேதி துவங்கி, ஏப், 27ம் தேதி வரை, நடக்கிறது. இப்பணியில், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு, 14 முதல் 18 வயது வரையிலான, பள்ளி செல்லா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுத்து, இடைநிலை கல்வி திட்டத்தில் ஒப்படைக்க உத்தர விடப்பட்டுள்ளது. முதன் முறையாக, 14 முதல் 18 வயதிலான குழந்தைகளை கணக்கெடுப்பதால், இவர்களுக்கு, உண்டு உறைவிட பள்ளி, இணைப்பு பயிற்சி மைய வசதி ஏற்படுத்தப்படும். வணிக நிறுவனங்களில், 14 வயதுக்கு மேல் பணிபுரியும் ஏராளமான, ஏழை மாணவர்கள், இத்திட்டத்தால் பயன் பெற வாய்ப்பு உள்ளது.

வட்டார வள மைய அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த தகவலை, பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், அருகில் உள்ள வட்டார வள மையத்தில் தெரிவிக்கலாம்' என்றார்.

Saturday, April 06, 2013

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

""அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது:

உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை (இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது. 10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். சென்னை,மதுரை போன்ற மாநகரங்களில் நடந்த இத்தேர்வு , தற்போது மாவட்டங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு முறையில், ஆன்லைனில் விடையளித்த அன்றே, மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வு நேரமாக 3 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஒன்றரை மணி நேரத்திலே முடித்து விடலாம்.

மீதமுள்ள நேரத்தில் சரி பார்த்து கொள்ளலாம். இந்தியாவிலே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தான், அதிக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு முறைகளும் வெளிப்படையாக உள்ளன. தேர்வு எழுதிய வினா மற்றும் விடைதாள் வெளியிடப்படுகிறது. அதற்கான "கீ ஆன்சர்' ரும் வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர் இதை சரிபார்த்து தவறு இருந்தால், 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். காலிபணியிடங்களை வைத்து தான்,தகுதி அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. எந்தவித முறை கேடு ஏற்பட வாய்ப்பு இல்லை. நகர்புற மாணவர்களுக்கு நிகராக கிராமபுற மாணவர்களும் டி.என்.பி.எஸ்.சி., மூலம் ,அதிகமாக தேர்வாகின்றனர். வரும் காலங்களில் "அப்ஜெக்டிவ் டைப்' உள்ள தேர்வுகளை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, "செஸ்' போர்டுகள் வாங்க, தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, 2012-13ம் கல்வியாண்டுக்கு தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 7 முதல், 17 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு சதுரங்க (செஸ்) விளையாட்டுக்கான பலகைகள் வழங்குவதற்கு, 39.47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த நிதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. "செஸ்' விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த கொள்முதல் குழு ஏற்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. கொள்முதல் குழு தலைவராக, மாவட்ட கல்வி அலுவலரும், உறுப்பினர் செயலராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், உறுப்பினர்களாக முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) உடற்கல்வி இயக்குனர் நிலை-1 (மேல்நிலைப்பள்ளி), தலைமையிட மாவட்ட கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி ஆய்வாளர், தலைமையிட உதவி தொடக்கக்கல்வி அலுவலர், தலைமையிட பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தலைமையிட பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு இந்த, "செஸ்' போர்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 1,300க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, வழங்குவதற்காக, 1,342 "செஸ்' போர்டுகள் கடந்த வாரம் வாங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன.

"செஸ்' போர்டுகளுக்கு முகப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும், 14 வகையான நலத்திட்ட உதவிகள் குறித்த, "சக்கரம்' இடம் பெற்றுள்ளது.

கவுன்சிலிங் முன்னேற்பாடுகளில் அண்ணா பல்கலை தீவிரம் : 22ம் தேதி முதல் விண்ணப்பங்கள

   வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ள இந்த தேர்வின் முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மே 10ம் தேதி முதல், 15ம் தேதிக்குள் வெளியிடப்படுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும், வழக்கத்திற்கு மாறாக, மே 22ம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, எல்லாமே தள்ளிப்போயின. இந்த ஆண்டு அதுபோல் நடக்காது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மே 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை வெளியிட்டுவிடுவோம் என, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,), நாடு முழுவதும், ஆகஸ்ட் 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் துவங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், செப்டம்பர் முதல் தேதி தான், வகுப்புகள் துவங்குகின்றன. ஜூலை இறுதி வரை, கலந்தாய்வு நடப்பது தான், இதற்கு காரணம்.

ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு, ஆகஸ்ட் 1ம் தேதியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும், முன்கூட்டியே எடுக்கப்பட உள்ளன.

தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு

தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்பாமல், அதிகாரிகளுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கும் போக்கு, கல்வித்துறையில், அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன், நூலகத்துறை இணை இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் பயிற்சி இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். இயக்குனர் நிலையில், பாடநூல் கழக செயலர் பணியில் உள்ள பிச்சை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்குள், காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டு, பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

அண்ணாமலை பல்கலை.,துணைவேந்தர் நீக்கம-dinamalar

் அண்ணாமலை பல்கலை.,துணைவேந்தர் ராமநாதன் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை கவர்னர் ரோசையா பிறப்பித்தார். நிர்வாக ரீதியாக பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Friday, April 05, 2013

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம

்  இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. ஜரியன்ஜெயா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதன் சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.