இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, December 27, 2017

தமிழ் வழிக்கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் 960 பேருக்கு ஆண்டுதோறும் உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

32 மாவட்டங்களில் மேற்கண்ட வகுப்புகளில் இருந்து தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் ரூ.1 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுதோறும் இதற்காக செலவு செய்ய இருக்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் இந்த பரிசுத் தொகையை வழங்க இருக்கிறோம். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் அயல் நாடுகளுக்கு கல்விப் பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.

நீட் தேர்வுக்காக 100 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் 4 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க 75 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். ஆசிரியர் பணி நியமனங்களுக்கு வெயிட்டேஜ் 2012ல் கொண்டு வரப்பட்டது. அதில் சில குறைகள் உள்ளதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். அதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம். விரிவுரையாளர் தேர்வு செய்வதில் ஒரு சிறிய குறைபாடு உள்ளது.

ஓஎம்ஆர் தாள்களை எல்காட் நிறுவனம்தான் திருத்துகிறது. அதன் காப்பி எங்களிடம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீட் பயிற்சி மையங்களுக்கு செல்லும் 75 ஆயிரம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த ஆண்டு லேப்டாப் வழங்க டெண்டர் விட்டபோது வழக்கு போட்டனர். அந்த வழக்கு முடிந்த பிறகு எல்காட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் தாமதம் ஏதும் ஏற்படாத வகையில் முன்னதாகவே கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி


பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்பில் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்பு திறனை ஏற்படுத்த பள்ளி அளவில் புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே நேரில் செல்லும் வகையில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

*இந்த நடமாடும் புத்தக கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் கூட்டு முயற்சியில் நடக்கும்.

* பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தக கண்காட்சியை அவர்கள் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான இடத்தில் வைத்தோ நடத்தலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து கொடுப்பார்கள்.

* இது தொடர்பான விளம்பரங்களை பதிப்பாளர்களே செய்து கொள்ள வேண்டும்.

* புத்தக கண்காட்சிக்கு கட்டணம் வசூலிக்க கூடாது.

* மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல் நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத் திறன், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம் பெறச் செய்ய வேண்டும்.

* விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும்.

* தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் இந்த நடமாடும் புத்தக கண்காட்சியில் பள்ளிக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாகவும் வழங்கலாம்.

* இந்த விதிகளுக்கு உட்பட்டு பங்கேற்க விரும்பும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தங்கள் விருப்பத்தையும் பங்கேற்க விரும்பும் மாவட்டம், உள்ளிட்ட விவரங்களை இயக்குநர், தொடக்க கல்வி இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அல்லது deechennai@gmail.com என்ற மின்முகவரியில் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பள்ளிகளில் காலிப் பணியிட விபரம்; இணையத்தில் பதிவேற்ற அவகாசம்


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம், நாளை (29ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கிறது.

நடப்பாண்டில், தொடக்க கல்வித்துறையும் இக்கலந்தாய்வை, ஆன்-லைன் மூலம் நடத்தியது.மாவட்ட வாரியாக, காலிப்பணியிட விபரங்கள் பெற்று, கலந்தாய்வு நடக்கும் முன், இணையதளத்தில் பதிவேற்றுவது வழக்கம். இதற்கு பதிலாக, காலிப்பணியிட விபரங்களை, அந்தந்த பள்ளிகளில் இருந்து திரட்டும் வகையில், இயக்குனர் இளங்கோவன், புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளிலும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், காலிப்பணியிட விபரங்களை, தலைமையாசிரியர்களே இணையதளத்தில், பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.ஆசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, www.tndse.com என்ற இணையதளத்தில் கடந்த, 26ம் தேதி வரை, பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும், கால அவகாசம் நாளை (டிச., 29ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட பயனர் எண், பாஸ்வேர்டு கொண்டு, எவ்வித பிழையும் இல்லாமல், துல்லியமாக தகவல்களை உள்ளீடு செய்ய, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

EMIS details...


CEO transfer news



மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் 

* மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன், மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன் நியமனம்.

* தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி,  முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமனம்.
#SchoolEducationDept

Tuesday, December 26, 2017

192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 192 பேருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கும் பணி நடப்பதை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டு பேசியதாவது: சட்டப் பேரவையில் நடந்த மானியக் கோரிக்ைககள் மீதான விவாதங்களின் போது நடப்பு 2017-18ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழல் உருவாவதற்காக கனவு ஆசிரியர் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு 192 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விருதுகளை பெறுவதற்கான தகுதிகள் குறித்த பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 192 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இந்த விருதுக்காக ஆண்டுக்கு ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் பிளஸ் 1 வகுப்புக்கு இந்த பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் மாற்றம் வருவதால் ஆசிரியர்கள், பாடத்திட்டத்துடன் நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும் கற்றலும் என்ற அடிப்படையில் value integrated teaching and learning என்ற தலைப்பில் பயிற்சி கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி ைகயேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். புதிய பாடத்திட்டம் எழுதும் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்கான புதிய புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் நடந்த குளறுபடிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. அது முடிவுக்கு வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு தலா இரண்டு பள்ளிகள் தேர்வு


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம் வழிகளில் தலா ஒரு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியை தேர்வு செய்து புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்வு செய்யப்படும் இந்த பள்ளிகளில் 3ம் பருவத்தேர்வுகளை டிஜிட்டல் முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வகுப்பு வாரியாக வினாத்தாள்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. டிஜிட்டல் மயமாகும் 3ம் பருவத்தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் படங்கள், வண்ணங்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது.

கேள்விகள் அனைத்தும் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாக்கப்படும். இதற்காக பிரத்யேக ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை


பணி நிரந்தரம் கோரி, அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று போராட்டம் அறிவித்துஉள்ளனர். அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, வேளாண்மை போன்ற சிறப்பு பாடங்களை நடத்த, 2012ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நிய மிக்கப்பட்டனர். இவர்களில், 12 ஆயிரத்து, 637 பேர் மட்டுமே, தற்போது பணியாற்றுகின்றனர். இவர்கள் வாரந்தோறும், மூன்று அரை நாட்கள் என, மாதத்தில் ஆறு நாட்கள் வகுப்பு எடுக்கின்றனர்; 7,700 ரூபாய் மாத ஊதியம் தரப்படுகிறது.இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன், பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர், இன்று மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். பள்ளி வேலை நாளில், அனுமதியின்றி போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கணினி பயிற்சி குறித்து இயக்குநரின் செயல்முறைகள்


*தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் சார்பு




TNPTF news



☀【T】【N】【P】【T】【F】☀

〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*ஈடுசெய் கணினிப் பயிற்சி : விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் - ஏனையோர் இக்கல்வியாண்டிற்குள் பணிமேற்கொண்டு ஈடுசெய்யலாம் : பொதுச்செயலாளர் அறிக்கை - 26.12.17*

https://tnptfvizhudhugal.blogspot.in/2017/12/261217.html?m=1

*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!*

*வணக்கம்.*

*☀ மதுரையில் இன்று நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில், டிசம்பர் 27-30 வரை நடக்க இருந்த ஈடுசெய் கணினிப் பயிற்சி குறித்த முடிவு எடுக்க இருந்த நிலையில்,*

*☀இன்று முற்கல் ஜாக்டோ-ஜியோ மாநில நிர்வாகிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து ஈடுசெய் பயிற்சி தொடர்பான இடர்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.*

*☀இச்சந்திப்பில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மேனாள் துணைத் தலைவர். தோழர்.தா.கணேசன் அவர்கள் கலந்து கொண்டார்.*

*☀நமது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்த இயக்குநர் அவர்கள்,*

*☀நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஈடுசெய்யும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாளைய பயிற்சியினை ரத்து செய்ய இயலாது என்றும்*

*☀எனினும் விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் என்றும்*

*☀விருப்பம் இல்லாதோர் ஏப்ரல் இறுதிக்குள் பள்ளிகள் வைத்து ஈடுசெய்து கொள்ளலாம் எனவும்*

*☀நாளைய பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மீது எவ்வித துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் உறுதியளித்துள்ளார்.*

*☀பயிற்சி தொடர்பான மாநிலச் செயற்குழுவின் தீர்மானத்தில் இயக்குநர் அவர்களின் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.*

_தோழமையுடன்_
*செ.பாலசந்தர்,*
_பொதுச் செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Monday, December 25, 2017

தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்


அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளாக 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகின்றன.

இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய தேர்வுக்கான பணிகளை செய்ய உரிய வழிகாட்டுதல் இல்லாமல் 9000 உயர்நிலைப் பள்ளிகள் திணறி வருகின்றன. இந்நிலையில் சீனியாரிட்டி குறித்த பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தலைமை ஆசிரியர் பணி நியமன கவுன்சலிங் நடக்கும். இதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டிபடி வழங்கப்பட உள்ளன.

பெரியார் பல்கலை தேர்வு தள்ளிவைப்பு

Sunday, December 24, 2017

கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு புதுமை பள்ளி விருது!மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் குழு அமைப்பு


கற்பித்தல் முதல் கட்டமைப்பு வரை, சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப்பள்ளி', விருது வழங்க, திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், நடப்பாண்டில், 'புதுமைப்பள்ளி' விருது வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர் எண்ணிக்கையை ஆண்டுதோறும் அதிகரிப்பது, கற்பித்தலில் புதுமை, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வது என சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு, 'புதுமைப் பள்ளி', விருது வழங்கப்படுகிறது.

ஆய்வுப்பணிகள் துவக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும், துவக்கம் முதல் மேல்நிலை வரை, நான்கு நிலைகளிலும் தலா ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்படுகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு, தலா நான்கு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மாநில அளவில் ஒரு குழுவும், மாவட்ட அளவில் ஒரு குழுவும், பள்ளிகளை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக்கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வியாளர்களை உறுப்பினர்களாகக்கொண்ட குழு, அமைக்கப்படுகிறது.

மாநில அளவிலான குழுவிற்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், தொடக்கக்கல்வி இயக்குனர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலை) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுவினர், பள்ளியின் கட்டமைப்பு, செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை, அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு செய்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், புதுமைப்பள்ளி தேர்வுக்கான ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளன.தேர்ந்தெடுப்பது எப்படி?புதுமைப்பள்ளி விருதுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு நிலையிலும், தலா மூன்று பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட ஆய்வுக்குழுவினர், மாநில கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். மாநில ஆய்வு குழுவினர், அதில் ஒரு மாவட்டத்துக்கு, ஒவ்வொரு நிலையிலும் சிறந்த ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர்.

புதுமைப்பள்ளி விருதாக பெறும் பரிசுத்தொகையை, பள்ளிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறைகளை மேம்படுத்தி நவீனப்படுத்துதல், வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், ஆங்கில வாசிப்பு பயிற்சி, யோகா பயிற்சி வழங்குதல், கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்குதல், பள்ளி நுாலகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி பட்டியல் தயாரிப்பு கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, அவ்வப்போது பட்டியல் எடுத்து வருகிறோம். மேலும், அடிப்படை வசதிகள் முதல், மாணவர் சேர்க்கை வரை, உள்ள பள்ளிகளையும் கண்காணித்து வருகிறோம். அரசுப்பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தவே, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு உரிய பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் தயாரித்துள்ளோம். இதைத்தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பள்ளி மாணவ ர்களுக்கு விடுமுறை சிறப்பு வகுப்பு


அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கி உள்ள நிலையில், நாளை முதல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிச., 23 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும், ஜன., 2 முதல் பள்ளிகள் செயல்படும். இன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து, நாளை முதல், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என, பல பள்ளிகள் அறிவித்துள்ளன. பொதுத் தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் விருப்பப்படும் சில அரசு பள்ளிகளில் மட்டும், சிறப்பு வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Saturday, December 23, 2017

ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி


வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில், நான்கு நாட்கள் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' எனும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், செப்., 7 - 15 வரை, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

இதில், தொடக்கக் கல்வித் துறையில், பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்றனர். நீதிமன்றம் தலையிட்டு, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. அப்போது, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு இணையாக, விடுமுறை நாட்களில், பணி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தற்போது, இரண்டாம் பருவத் தேர்வு முடிவடைந்து, ஜன., 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, டிச., 27 - 30 வரை, கணினி பயிற்சி வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.ஆசிரியர்களின் தேவைக்கேற்ப, வகுப்பறைகள் மற்றும் பயிற்சிகளை வழங்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Friday, December 22, 2017

ஈரோடு தொடக்ககல்வி அலுவலரின் செயல்முறைகள்

ஆந்திராவை பின்பற்றி தமிழக டெட் தேர்வில் விரைவில் மாற்றம்


தமிழகத்தில் டெட் (டி.இ.டி) தேர்வு மூலம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த தேர்வு கடந்த 2012ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் வினாத்தாள் 1 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி பாடத்திட்ட புத்தகங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணிதம், அறிவியல் என குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்து, அந்த பாட ஆசிரியராக செல்வார்கள்.

அவ்வாறு செல்லும் அவர்கள், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தாமல், கற்பித்தலில் ஆர்வம் குறைவாகவே இருக்கும். இதனால் மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். எனவே இவற்றை தடுக்க டெட் தேர்வில் மாற்றம் கொண்டுவர பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஆசிரியர் தகுதித்தேர்வில் மேற்கண்ட அம்சங்கள் தவிர வகுப்பறைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, ஒவ்வொரு மாணவனுக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகள், அவற்றை புரிந்து கொண்டு அவனிடம் ஆசிரியர் அணுகும் முறை, கற்பித்தல் மற்றும் மாணவனின் கற்றல் திறனை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

இதனை அப்படியே தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் முனைப்புகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக தமிழக கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்களுடன் கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் திரட்டப்படும் தகவல்களுடன் ஆந்திராவில் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் தமிழக டெட் தேர்வில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.