இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 16, 2013

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் தொடர்பாக பரிசீலிக்கப்படுகிறது : நவநீதகிருஷ்ணன் தகவல்

  தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படாத நிலையில், இன்றைய சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை திருத்தி அமைக்க ஆர்.நட்ராஜ் தலைவராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. பாடத்திட்டத்தையும், தேர்வுமுறையையும் மாற்றுவது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் சி.ஷோபினி, சி.பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் திடீரென வெளியிட்டது. புதிய பாடத்திட்டத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ. என அனைத்து தேர்வுகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக பிரிவு அதிகாரி, உதவித்தொழிலாளர் ஆய்வாளர், உதவியாளர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப்-2 தேர்வு நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு என்றும், நேர்காணல் அல்லாத பணி இடங்களுக்கான தேர்வும் என்றும் 2 தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப்-2 தேர்வில் இருந்த மொழித்தாள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அடியோடு நீக்கப்பட்டது. 200 கேள்விகளும் பொதுஅறிவு பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூட்) என்ற புதிய பகுதிசேர்க்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல், லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் குரூப்-4 தேர்வில் மொழித்தாள் பகுதியில் கேள்விகளின் எண்ணிக்கை 100 -லிருந்து 50 குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக பொது விழிப்புத்திறன் என்ற புதிய பகுதியை சேர்த்துள்ளனர். குரூப்-4 தேர்வைப் போல அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் வி.ஏ.ஓ. தேர்வில் மொழித்தாள் கேள்வி எண்ணிக்கை 100-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக கிராம நிர்வாகம் மற்றும் ஆப்டிடியூட் பகுதிகளை சேர்க்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப பணிகளுக்கான அனைத்து தேர்வுகளிலும் குறிப்பிட்ட பாடத்துடன் கூடுதலாக பொதுஅறிவு பகுதியை சேர்த்து இருக்கிறார்கள். குரூப்-1 மெயின் தேர்வில் பொதுஅறிவு தாள்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

யு.பி.எஸ்.சி.யைப் போல டி.என்.பி.எஸ்.சி.யும் தமிழ்மொழியை புறக்கணிக்கும் வகையிலும் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, தற்போதைய பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வுமுறை மாற்றப்பட்டு பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சிவில் சர்வீசஸ் புதிய தேர்வுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போல அனேகமாக டி.என்.பி.எஸ்.சி.யும் புதிய பாடத்திட்டத்தை நிறுத்திவைக்கும் என்றே தெரிகிறது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, "புதிய பாடத்திட்ட பிரச்சினை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். அரசிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கப்படும்" என்றார். 

26 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள்: ஜெயலலிதா உத்தரவு

  தமிழகத்தில் 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை தோற்றுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   
     
   கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிப்போருக்கு இணையான சீரான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இப்போது அரியலூர், மங்களூர் (கடலூர் மாவட்டம்), காரிமங்கலம், பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் (ஈரோடு மாவட்டம்), குண்டடம் (திருப்பூர் மாவட்டம்), தளி, வேப்பனஹள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), வேப்பூர் (பெரம்பலூர் மாவட்டம்), நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு (சேலம் மாவட்டம்), ஜவ்வாதுமலை (திருவண்ணாமலை மாவட்டம்), திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), மல்லசமுத்திரம் (நாமக்கல் மாவட்டம்) ஆகிய 26 ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி வீதம் 26 மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக வரும் கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகள் செயல்படும்.

இந்தப் பள்ளிகளுக்கான சொந்தக் கட்டடம் கட்டும் வரை, இந்தப் பள்ளிகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கும். பணியிடங்கள் தோற்றுவிப்பு: 26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவிருக்கும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பணியிடம், ஏழு முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கம்ப்யூட்டர், உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகிய ஆசிரியர் பணியிடங்கள் தலா ஒன்று என 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர், நூலகர் பணியிடம், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், இரவு காவலாளி, தோட்டக்காரர் என ஏழு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாது

் பொருளாதார பட்டப்படிப்பு பெற்றவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுபவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கையேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் பதிவில் தவறா? 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

   பத்தாம் வகுப்பு மாணவர்கள், தங்களை பற்றிய விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதில் தவறு ஏற்பட்டிருந்தால், சரியான விபரங்கள் அளிக்க மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 27ல் துவங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், ஜாதி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன.

பதிவு பணி அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் நடந்தது. இந்நிலையில், சில மாணவர்கள் தவறுதலாக விபரம் தந்து விட்டதாக தேர்வுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மீண்டும் சரியான விபரத்தை பதிவு செய்ய மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பி உள்ளது.  இந்த பட்டியலில் தவறு இருந்தால் 25ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் கூறி ஆன்லைனில் திருத்தி கொள்ளலாம்.   தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெயர், ஜாதி, பிறந்த தேதி உள்ளிட்ட முழு விபரம் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் பெயர், ஜாதி, பிறந்த தேதி ஆகியவற்றில் உள்ள தவறுகளை திருத்தி கொள்ளலாம். பத்தாம் வகுப்பு சான்றிதழில் தவறான தகவல் பதிவு செய்யப்பட்டால் மாணவரின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே  இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.

Private Schools Fee Determination Committee 2013-2014 - Enquiry Notice for Apr-May'13 (Matric) and Grading of Schools

Friday, March 15, 2013

Tamil Nadu Public Service Commision- Departmental exam notification

Tamil Nadu Public Service Commision- Annual Planner -Revised syllabus

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் திருப்பூர

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் By திருப்பூர், First Published : 16 March 2013 03:10 AM IST  6 ஆவது ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைந்திடும் வகையிலான 3 நபர் குழு அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி கோரிக்கையை விளக்கினார். மாநில துணைத் தலைவர் ஜான்கிறிஸ்துராஜ் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 6 ஆவது ஊதிய மாற்ற முரண்பாடுகளைக் களைந்திடும் 3 நபர் குழுவின் அறிக்கையை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து முந்தைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வினை கைவிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக அரசு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மாத சந்தா தொகையினை ரூ.50 ஆகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


TNPTF Tiruppur Arpattam





சர்ச்சைக்குரிய யு.பி.எஸ்.சி. தேர்வு மாற்றங்கள் நிறுத்திவைப்ப

  நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு மற்றும் வலியுறுத்தல்களின் எதிரொலியால், யு.பி.எஸ்.சி. தேர்வில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. இதுதொடர்பான அறிவிப்பை இன்று மக்களவையில் வெளியிட்ட மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, யு.பி.எஸ்.சி. தேர்வு தொடர்பாக மார்ச் 5-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

முன்னதாக, யு.பி.எஸ்.சி. மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அண்மையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,), ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு, புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. வரும் கல்வியாண்டில் முதல், இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. யு.பி.எஸ்.சி., நான்கு மாற்றங்களை கொண்டு வரப்பட்டது. முதல் மாற்றத்தில், உயர்நிலைக் கல்வி, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் எனக் கூறப்பட்டது. இவ்விதி, இந்தி மொழிக்கு விதிக்கப்படவில்லை. இரண்டாவதாக, பட்டப் படிப்பில் விருப்பப் பாடமாக, தமிழ் இலக்கியத்தை பயின்றவர் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுத முடியும் என, கூறப்பட்டுள்ளது

. கணிதம், வரலாறு உள்ளிட்ட பிற முக்கிய பாடங்களுக்கு, தமிழ் இலக்கியம் விருப்பப் பாடமாக இருக்காது. அப்படியென்றால், கணிதம், வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், தமிழில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத முடியாத நிலை உருவாக்கப்பட்டது. மூன்றாவதாக, மாநில மொழிகளில் தேர்வெழுத, குறைந்தபட்சம், 25 மாணவர்கள் அந்த மொழியில் தகுதி பெற்றிருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளது. இவ்விதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிக்குப் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவதாக, ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெறுவது என்பதாகும். இம்மாற்றம், முழுக்க முழுக்க நகர்ப்புறங்களில், ஆங்கில வழியில் பயன்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். யு.பி.எஸ்.சி., செய்துள்ள மாற்றங்கள், இந்திய கூட்டாட்சிக்கும், பிராந்திய மொழிகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கும், பங்கம் விளைவிப்பதாக உள்ளது என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. எனவே, தாய் மொழியில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக, ஜனநாயகமற்ற முறையில், யு.பி.எஸ்.சி., கொண்டு வந்துள்ள மாற்றங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை ரூ. 2 குறைப்பு

பெட்ரோல் விலை இன்று ரூ. 2 குறைக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வருகிறது.

அரசாணை 61,சிறப்பு பணிக்கொடை 1984 திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிடுதல்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சிறப்பு ஓய்வூதிய பணிக்கொடை 2000 திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிடுதல் ஆணை.GO.62

Thursday, March 14, 2013

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது

. பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. இதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1 தேர்வுகளும் தற்போது நடந்து வருகின்றன. உயர்நிலைப் பள்ளிகளில் இந்த மாத இறுதியில் தேர்வு நடத்தப்படு கிறது. ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படும்

. அதன் பின்னர் மே மாதம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும்.பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை மே மாதம் முதல், 2வது வாரத்தில் வெளியிட பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. மே மாதம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1-ல் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி சனிக்கிழமை என்பதால் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெ

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம். 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பு


பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைகிறது : டீசல் விலை 50 காசுகள் வரை உயர வாய்ப்பு

- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உள்ள ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு 2 முறை பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை பிப்ரவரி மாதம் 16-ம் தேதி ரூ.1.50-ம் மார்ச் 2-ம் தேதி ரூ.1.40ம் உயர்ந்தது.

டீசல் விலையைப் பொறுத்தவரையில், ஏற்கனவே உள்ள நஷ்டத்தை ஈடு செய்வதற்கு மாதந்தோறும் 50 காசுகள் வரை படிப்படியாக விலை உயர்த்திக் கொள்ளலாம் என ஜனவரி மாதம் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இப்போது டீசல் விலையை லிட்டருக்கு 40 முதல் 50 காசுகள் வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்திருக்கின்றன. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புதிய விலை நிர்ணயம் நாளையோ அல்லது நாளை மறுநாளோ அமலுக்கு வரும்.

Wednesday, March 13, 2013

மார்ச் 2013 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவிருக்கும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சில திருத்தங்களை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மார்ச் 2013 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவிருக்கும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சில திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக வரும் 14.03.2013 முதல் 25.03.2013 வரை http://www.peps.tn.nic.in/sslc என்ற இணையதளத்தில் பெயர்பட்டியல் வெளியிடப்படுகிறது. அதை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளுமாறு  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில், மாணவர்களின் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, இனம், தேர்வு எழுதும் மொழி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் தக்க அறிவுரைகளின்படி செயல்பட்டு, திருத்தங்களை 14.03.2013 முதல் 23.03.2013க்குள் முடித்திடுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மாணவர்களின் புகைப்படம் ஏதேனும் விடுபட்டிருப்பின், அம்மாணவர்களின் புகைப் படத்தினை மேற்காண் தேதியில் online-ல்  பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் அனைத்து திருத்தங்களும் (Rectification), சேர்க்கைகளும் (Additions), நீக்கங்களும் (delections) ஆன்லைன் மூலம் திருத்தங்கள் மேற்கொண்டு, பின்னர் எந்த ஒரு திருத்தங்களும் விடுபடவில்லை என்பதற்கான சான்றினை அந்தந்த  மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.  

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: 28ம் தேதி முதல் 55 இடங்களில் நடக்கிறது

   பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், வரும், 28ல் துவங்கி, ஏப்., 14 வரை, 55 மையங்களில் நடக்கின்றன. கடந்த, 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதி வருகின்றனர். இதுவரை, மொழிப்பாட தேர்வுகள், இயற்பியல், பொருளியல் தேர்வுகள் முடிந்துள்ளன. இன்று, கணித தேர்வு நடக்கிறது. இந்நிலையில், வரும், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குவதற்கு, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்., 14ம் தேதிக்குள், அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணியில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, முதலில், மொழிப்பாட தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், படிப்படியாக, இதர தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கும். இம்முறை, 27ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிந்தபின், மறு நாளில் இருந்து, விடைத்தாளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டதற்குப் பின், "டேட்டா சென்டரில்' பாட வாரியாக, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடக்கும். இந்தப் பணிகள் முடிந்தபின், தேர்வு முடிவு தயாராகும். மே, 10ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வாணைய பாடத் திட்டங்கள் மாற்றம்: தமிழ்ப் பகுதி நீக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் பாடப் பகுதிகள் கடினமாக இருப்பதாகவும், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்துக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத் திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) இரவு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்திக்கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.

தற்போது புதிய பாடத்திட்டத்தின்படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப் 2 தேர்வில் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப் பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்திக் கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மாற்றங்கள் குறித்து தேர்வர்கள் கூறியது:

புதிய மாற்றங்களின்படி, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் தமிழ் மொழியில் இருந்து இனி கேள்விகள் அதிகம் இடம்பெறாது. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பொது அறிவு மற்றும் பிற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அதை தமிழ் மொழிப் பகுதியில் கேட்கப்படும் எளிதான கேள்விகளால் அதிக மதிப்பெண்கள் எடுத்து ஈடு செய்ய முடியும். சிந்தித்து விடை எழுதுதல், புத்திக் கூர்மையை சோதிக்கும் பகுதிகள் வரவேற்கத்தக்க அம்சங்களாகும். தமிழ் மொழிப் பகுதி நீக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர்.