இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 12, 2013

குரூப் 2, 4 தேர்விலும் மாற்றம் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4, 2 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநில அளவில் முதன்மை பணிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி முதல் இளநிலை உதவியாளர், தட்டச்சர் வரையிலான அனைத்து பணிகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை டிஎன்ப¤எஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான 72 பக்க புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேற்று இரவு வெளிய¤டப்பட்டது.இதில் குறிப்பாக எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப் 4 பணியிடங்கள், விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது குரூப் 4 தேர்வில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதிக்கும், 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது.புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழை மட்டும் நன்றாக படித்து விட்டு தேர்வுக்கு செல்பவர்களின் நிலைமை சிக்கலாகி உள்ளது.இதேபோல விஏஒ தேர்வுக்கும் ஏற்கெனவே குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் தான் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது விஏஒ தேர்வுக்கு 150 வினாக்கள் (225 மதிப்பெண்கள்) பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகியவற்றிற்கும், 50 வ¤னாக்கள் (75 மதிப்பெண்கள்) கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள் ளது.

பொதுத்தமிழ் பகுதிக்கு இதுவரை 100 வினாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.குரூப் 2 தேர்வு நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகள் எழுத வேண்டு¢ம். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரு தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது. குருப் 2 தேர்விலும் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இடம் பெற்று வந்த பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக குரூப் 1 முதல் குரூப் 7 வரையிலான தேர்வுகள், விஏஒ தேர்வு, தொழில்நுட்ப தேர்வுகள் 1, 2 ஆகிய 10 தேர்வுகளுக்கு 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிட்டது.

ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநிலங்களில் பணியில் சேர்பவர்கள் கூட அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்., கணக்கு விபரம் கோரும் அரசு கடிதம

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 4 வகை கட்டணம் வலியுறுத்தல

  "அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்" என, வலியுறுத்தி, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணயக்குழு தலைவரிடம், மனு கொடுத்தனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகள், நேற்று, டி.பி.ஐ., வளாகத்தில் திரண்டனர். கட்டண நிர்ணய குழு அலுவலகம் முன் திரண்ட அவர்கள்,
"அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்" என வலியுறுத்தி, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலுவிடம், மனு அளித்தனர். சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறுகையில், "தற்போது, பல வகைகளில், கட்டணங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இதை மாற்றி, 1 முதல், 5ம் வகுப்பு வரை, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய்; 6, 7, 8 வகுப்புகளுக்கு, 20 ஆயிரம்; 9, 10 வகுப்புகளுக்கு, 25 ஆயிரம்; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 30 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்க வேண்டும்" என்றார். மனுக்களை பெற்றுக் கொண்ட சிங்காரவேலு,

"சட்டத்திற்கு உட்பட்டு, உரிய கட்டண உயர்வை அளிப்பேன்" என தெரிவித்தார். கட்டண உயர்வு கோரிக்கை மனுவை, கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வனிடமும், பள்ளி நிர்வாகிகள் அளித்தனர். ்

பள்ளிக்கூடங்கள் பற்றிய ஆய்வு விபரங்கள்

  ஆர்.டி.இ., எனப்படும் 14 வயதுக்குட்பட்ட ‘அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வி சட்டம்’, 2010 ஏப்.1ம் தேதி செயல்பாட்டுக்கு வந்த பின் , 2012 செப்., வரை இச்சட்டத்தின் கீழ், புதிதாக 3,34,340 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சேர்ந்துள்ளன, என இது குறித்த ஆய்வு நடத்திய ‘எகனாமிக் சர்வே’ தெரிவித்துள்ளது. இது தவிர, தேசிய அளவில் 2,80,000 பள்ளிகளில் கட்டட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் 12,46,000 ஆசிரியர்கள் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் சர்வே தெரிவிக்கிறது.

2011 -2012 கணக்கின் படி, 10 கோடியே 50 லட்சம் மாணவர்கள் ‘மதிய உணவு திட்டத்தின்’ கீழ் பயனடைகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 11, 2013

திறந்தநிலை பல்கலை.யில் புதிதாக உயிரியல், வேதியியல், இயற்பியல் பட்டப் படிப்புகள்: துணைவேந்தர் சந்திரகாந்தா தகவல்

் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் புதிதாக பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய படிப்புகள் தொடர்பாகவும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

மொழியியல், மொழிபெயர்ப்பு படிப்புகள், மேலாண்மை தொடர்பான போலீஸ் நிர்வாகம், ஃபேஷன் டிசைன் மற்றும் பெண்கள் படிப்பு ஆகியவற்றில் முதுநிலைப் படிப்புகள் புதிதாகத் தொடங்கப்படும். அக்குபஞ்சர் தொடர்பாக இளநிலைப் பட்டப்படிப்பும்,  ஆங்கிலத்தில் எழுதுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி ஆகியவற்றில் முதுநிலை பட்டயப் படிப்பும், கனரக வாகனங்கள் பராமரிப்பில் டிப்ளமோ படிப்பும் புதிதாக வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்ப்பு

   மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் முறையாக அறிவிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியானது, ACPIN-ன் குறியீட்டு கணக்கின் படி 8% ஆக இருக்கும் எனவும், ஜனவரி 2013 முதல் கணக்கீட்டு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துவக்கப் பள்ளி மாணவர் வாசிப்புத்திறன் குறைவு: இணை இயக்குனர் ஆய்வில் அதிர்ச்சி

"துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை, ஏப்ரல் மாதத்துக்குள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2004ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்வழிக் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், குறிப்பிட்ட சில பள்ளிகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, 2007ம் ஆண்டு முதல், அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளிகளிலும், செயல்வழிக் கற்றல் முறை, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் முறை பின்பற்றப்படுகிறது. இம்முறையின் கீழ், மாணவர்கள், தாங்களாகவே முன்வந்து பாடம் கற்க வேண்டும். தேர்வு, புத்தகம் எதுவும் இல்லை. புத்தகப் படிப்பு இல்லாததால், மாணவர்களது வாசிப்புத் திறன் படிப்படியாக குறையத் துவங்கியது. இந்நிலையில், சென்ற ஜனவரி மாதம் தொடக்க கல்வித் துறை இணை இயக்குனர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வல்லம் ஒன்றியத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன், வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிக்கப்படுத்த, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் மாதத்திற்குள், மாணவர்களது வாசிப்புத் திறன் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடக்க கல்வித் துறை இணை இயக்குனர் உத்தரவையடுத்து, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள், துவக்கப் பள்ளிகளுக்கு அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து, மாணவர்களது வாசிப்புத் திறன் குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

"செயல்வழிக் கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. எனினும், 2007ம் ஆண்டு முதல் புத்தகமும் வழங்கப்படுகிறது. அதனால், ஆறு ஆண்டுகளாக துவக்கப் பள்ளியில் இரட்டை வழிக் கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. இது, துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, செயல்வழிக் கற்றல் முறையில், மாணவர்களுக்கு புத்தகம், தேர்வு கிடையாது. பள்ளி ஆசிரியர்களாக பார்த்து, தேர்வு நடத்திக் கொள்ளலாம். குறைந்த மதிப்பெண் பெற்றாலும், அடுத்தடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுப்பப்படுவர். புத்தகம், தேர்வு இல்லாததால், மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் வெகுவாக குறைந்தது. அதனால், ஐந்தாம் வகுப்பு பின், உயர்நிலை வகுப்பு செல்லும் மாணவர்கள், பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. இச்சூழலில், வரும் ஏப்ரல் மாதத்திற்குள், மாணவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும் என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாசிப்புத்திறன் மேம்படுத்தாத வகுப்பு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருகின்றனர். அப்போது, எந்த முறையை வேண்டுமானாலும் பின்பற்றி, மாணவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும் என, தெரிவிக்கின்றனர். இணை இயக்குனர், செயல்வழிக் கற்றல் முறையை பின்பற்றி, மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டுமென உத்தரவிடுகிறார். ஆனால், மாவட்ட அதிகாரிகளோ, எந்த முறையை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்கின்றனர். இந்த உத்தரவுகள், துவக்கப் ஆசிரியர்களை குழப்பமடையச் செய்துள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Friday, March 08, 2013

விடைத்தாள் திருத்துவதில் தவறு - ஆசிரியர்களுக்கு அபராதம்

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை, அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை, திருத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூலியும் வழங்கப்படுகிறது. மாணவர்களின், எத்தகைய பதில்களுக்கு, எவ்வளவு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது, "ஆன்சர் - கீ" முறைப்படி, மதிப்பெண் வழங்கப்படுகிறது

. சில நேரங்களில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. உதாரணமாக, மதிப்பெண்ணை கூட்டுவதில் தவறு, மதிப்பெண் அளிக்க மறந்து விடுவது, தவறுதலாக அதிக மதிப்பெண் போட்டு விடுவது போன்ற தவறுகளை ஆசிரியர்களும் செய்வதுண்டு. அத்தகைய தவறுகளுக்கு, ஆசிரியர்களை பொறுப்பேற்க செய்யும் வகையில், ஒவ்வொரு தப்புக்கும், ஒவ்வொரு விதமான தண்டனை, அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சம், 15 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், விடைத்தாளை திருத்திய ஆசிரியருக்கு, எச்சரிக்கை மட்டும் கொடுக்கப்படும். 15 மதிப்பெண் முதல், 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், தவறு செய்த ஆசிரியருக்கு, அதிகபட்சம், 1,000 ரூபாய் அபராதமும், கண்டன நோட்டீசும் அளிக்கப்படும்.

மொத்தம், 30 மதிப்பெண் முதல், 50 மதிப்பெண் வரை வித்தியாசம் இருப்பின், அந்த ஆசிரியரின் பணிப்பதிவேடுகளில், அவரின் தவறான செயல் குறிப்பிடப்படும். அதற்கும் மேல் தவறு செய்தால், ஆசிரியருக்கு வழங்கப்படும், ஊக்கத்தொகை நிறுத்தப்படும். இவ்வாறு, ஒவ்வொரு படியாக தண்டனை மற்றும் அபராத அட்டவணையை, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

218 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை நடுநிலைப்பள்ளித் தலைமையாசிராக நிலையுயர்த்தி ஆணை இயக்குனர் உத்தரவ

யுபிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் (Optional 1)யில் முதல் தாள், இரண்டாம் தாளும், (Optional 2)யில் முதல் தாள், இரண்டாம் தாள் என மொத்தம் 2000 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் இது பழைய முறையாகும்.

முதல் தாளில் மொத்தம் 300 மதிப்பெண்களும், இரண்டாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், முன்றாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும்,  நான்காம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும், ஜந்தாம் தாளில் 250 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வின் மூலம் மொத்தம் 1,800 மதிப்பெண்களுக்கும், ஆளுமைத் தேர்வின் மூலம் 275 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். இந்த புதிய முறையை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 07, 2013

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நவநீதகிருஷ்ணன் நியமனம்!

  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக (டி.என்.பி.எஸ்.சி) ஆர்.நட்ராஜ் இருந்து வந்தார். இந்த நிலையி்ல் புதிய தேர்வாணைய தலைவராக நவநீதகிருஷ்ணன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் 21ல் தொடக்கம்!

  தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது.அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் ஆளுநர் ரோசைய்யா உரையாற்றினார். இதன் மீதான விவாதம் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இதையடுத்து தேதி குறி்ப்பிடப்படாமல் பட்ஜெட் கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையி்ல், பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 2013-14ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து,  சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும். முதலில் பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெறும். அதன்பிறகு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படும். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். புதிய சட்டமசோதாக்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, March 06, 2013

UPSC 2013 Preliminary Examination Notification

Important Dates

Opening Date for Registration: 5 March 2013

Closing Date for Registration: 4 April 2013

Civil Services Preliminary Exam Date: 26 May 2013

The experts of Jagranjosh.co, have come up with IAS Exam 2013 Preparatory PDF Package for the students preparing for UPSC Civil Services IAS Exam. The examination will be held on 26 May 2013.

* Eligibility

Criteria Age Limit The candidate applying for the examination should be between the age 21 years and 30 years on August 2013. He/she must have been born not earlier than 2nd August, 1983.

*Educational Qualification

The candidate must possess a degree of any of Universities incorporated by an Act of the Central or State Legislature in India or other educational institutions established by an Act of Parliament or declared to be deemed as a University under Section-3 of the University Grants Commission Act, 1956, or possess an equivalent qualification.

*Application Fee

The candidates are required to pay fee of Rs. 100/- (Rupees Hundred only) either by remitting the money in any Branch of SBI by Cash, or by using net banking facility of State Bank of India/ State Bank of Bikaner& Jaipur/Sate Bank of Hyderabad/State Bank of Mysore/ State Bank of Patiala /State Bank of Travancore or by using Visa/Master Credit/Debit Card. The candidates belonging to Female/SC/ST/PH are exempted from payment of fee.

*How to Apply All the candidates are required to apply online through the website http://www.upsconline.nic.in the detailed instructions for filling up online applications are mentioned in the link below.

பங்கேற்போர் திறனை கண்டறிய சிவில் சர்வீசஸ் தேர்வில் புது மாற்றம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்வகையில் , மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான, அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற நிர்வாக பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இதில், முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு என நடத்தப்பட்டு வருகிறது.முதல் நிலை தேர்வில் வெற்றிபெறுபவர்கள்தான், முதன்மை தேர்வுக்கு தகுதி பெற முடியும். முதன்மை தேர்வில், பொதுப்பாடத்திற்கு கூடுதலாக முக்கியத்துவம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது பாடம் பிரிவில், நான்கு தாள்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும், தலா, 250 மதிப்பெண்கள் உண்டு. இது தவிர, இரண்டு விருப்ப பாடங்களுக்கு தேர்வு இருக்கும். இதற்கு, தலா, 250வீதம் மதிப்பெண் வழங்கப்படும்கட்டுரை மற்றும் ஆங்கிலம் தாளிற்கு ஏற்கனவே உள்ளபடி, 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பிரதான தேர்விற்கான மொத்த மதிப்பெண், 1,800 ஆகும். யு.பி.எஸ்.சி., அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில், சிவில் சர்வீஸ் தேர்வில், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில், தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு உள்ள திறன், சமூக -பொருளாதார இலக்குகளை அடையும் விஷயங்களில் புரிந்துணர்வு ஆகியவற்றை கண்டறியும் வகையில், இத் தேர்வு அமையும். இம் மாற்றத்திற்கு, பிரதமர் அலுவலகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்ததும் , இது நடைமுறைக்கு வருகிறது.சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு,மே 26ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும்

  பிப்ரவரியில் நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்தாண்டு கணினி மூலம் 11 தேர்வுகளை நடத்தினோம்.

அடுத்த கட்டமாக மடிக்கணினி, ஐபேட் மூலம் தேர்வு நடத்த திட்டமிட்டு வருகிறோம். நவம்பர் 4ம் தேதி குரூப்&2 தேர்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான நேர்காணல் முடிந்தது. 7ம் தேதி (இன்று) 1,426 பேருக்கு பதவி ஆணை வழங்க உள்ளோம். இதில் 14 பேர் நகராட்சி கமிஷனர்கள். குரூப்&4ல் 1,400 காலி பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கவுள்ளோம்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விஏஓ தேர்வுகளில் தேர்வான அனைத்து தேர்வர்களுக்கும் ஒருவாரத்தில் பணி ஆணை வழங்கப்படவுள்ளது. குரூப்&1 முதல் நிலைத் தேர்வு கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்றது. இதற்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு கருத்துகள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தி ல் வெளியாகும். அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடக்கும்.குரூப்-1 உள்பட அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள 10,500 பணியிடங்களுக்கு இந்தாண்டு தேர்வு நடத்தப்படும். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தாண்டும், அடுத்த ஆண்டும் அதிகமானோர் ஓய்வு பெற உள்ளனர்.டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விஏஓ தேர்வு எழுதுவோர் கிராம நிர்வாகத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதால், அதுபற்றி 24 கேள்விகள் இடம் பெறும் வகையில் வினாத்தாள் அமைக்கப்படும்.

அனைத்து பிரிவு தேர்வுகளுக்கும் வினாக்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கணினி மூலம் வினாத்தாள் நட்ராஜ் மேலும் கூறுகையில்,வினாத்தாள் வெளியானது தொடர்பான பிரச்னை தற்போது இல்லை. அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கணினி மூலம் வினாத்தாள் அனுப்ப தயாராகி வருகிறோம். தேர்வு நடைபெறும் நேரத்துக்கு 15 நிமிடத்துக்கு முன்னதாக கணினியில் வினாத்தாளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். தனி பாஸ்வேர்ட் அளித்து அதை சிறிது நேரத்துக்கு முன்பு எடுப்பது பற்றி ஐஐடி பேராசிரியர்களுடன் விவாதித்து வருகிறோம். அதற்கு தேவையானது அதிகளவு கணினிகள். தற்போது தேர்வு நடக்கும் கல்லூரிகளில் 30 ஆயிரம் கணினிகள் மட்டுமே உள்ளன. நடப்பாண்டில் குரூப்-1, குரூப்-2, குரூப்&-, விஏஓ உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றார்.

IGNOU B.ed Assignments

TNPSC Group II.240 posts Notification

Tuesday, March 05, 2013

அறிவியல், கணித தேர்வுகளை இயக்குனர்கள் கண்காணிக்க உத்தரவு

வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை, கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.கடந்த முதல் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. தமிழ் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று, ஆங்கிலம் முதற்தாள் தேர்வு நடக்கிறது. நாளை, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.கணிதம், அறிவியல் பாடங்களில், மாணவர் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடத்தப்படுகிறது.

எனவே, இந்த பாடங்கள் மட்டும், "டம்மி' பதிவு எண்களைக் கொண்டு, தேர்வு நடத்தப்படுகிறது. இந்த முக்கிய தேர்வுகள், வரும் 11ம் தேதி முதல், நடக்கின்றன.இயற்பியல் தேர்வு, 11ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி, கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வும், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வும் நடக்கின்றன. 25ம் தேதி, "பயோ-கெமிஸ்ட்ரி' தேர்வு நடக்கிறது. இதுபோன்ற தேர்வுகளை, வழக்கமாக, இணை இயக்குனர்கள், நேரடியாக கண்காணிப்பர்.இந்த ஆண்டு, கல்வித்துறை இயக்குனர்களும், நேரடியாக சென்று, முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த உத்தரவை, அமைச்சர் பிறப்பித்தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, கல்வித்துறை இயக்குனர்கள் அனைவரும், முக்கிய பாட தேர்வுகளை கண்காணிக்க, பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.