இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 28, 2013

பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின

   தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கியது. இந்த தேர்வு , மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கேள்வித்தாள் படித்து பார்ப்பதற்கு வசதியாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்வு மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வை தொடர்ந்து, தேர்வு மையங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி; வருமான வரிவிதிப்பில் மாற்றம் இல்லை - ப.சிதம்பரம் -

, 2013–2014–ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பட்ஜெட்டில், நேரடி வரி விதிப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வருமானவரி விலக்கு உச்சவரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெருவோர்களுக்கு 10 சதவீதம் வரி அதிகரிக்கப்படும். சிறு மற்றும் குடிசை தொழில்களுக்கு முதல் மூன்று ஆண்டுகள் வரிசலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 5 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்களுக்கு ரூ. 2000 தள்ளுபடி செய்யப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 26, 2013

பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை மறுநாள் ஆரம்பம்:ஏற்பாடுகள் தயார்

   தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை மறுநாள், துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர். தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும், தேர்வுத்துறை முழுவீச்சில் முடித்து, தயார் நிலையில் உள்ளது.கடந்த ஆண்டு பொதுத்தேர்வை, 7.56 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு, 49 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர்.

இவர்களுடன், தனித்தேர்வு மாணவர், 45 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். பள்ளி மற்றும் தனித்தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து, 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாளை மறுநாள் ஆரம்பம்:மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,044 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.கடந்த, 20ம் தேதி, தாலுகா தலைமையிடம் வாரியாக, கேள்வித்தாள் கட்டுகள், பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட மையங்களில், 24 மணிநேர போலீஸ் பாதுகாப்புடன், கேள்வித்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன

. 960 பறக்கும் படை:மாவட்டத்திற்கு, 30 பறக்கும் படை குழுக்கள் வீதம், 32 மாவட்டங்களிலும், 960 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பெரிய மாவட்டங்களில், குழுக்களின் எண்ணிக்கை, சற்று கூடுதலாக இருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட கலெக்டர், எஸ்.பி., - ஆர்.டி.ஓ., - சி.இ.ஓ., - டி.இ.ஓ., - தாசில்தார் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில், பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல், கணிதம் தேர்வுகளின் போது, இந்த குழுக்களுடன், கூடுதலாக அண்ணா பல்கலை பேராசிரியர் குழுவும், தேர்வை பார்வையிட உள்ளது. கல்வித்துறை இணை இயக்குனர்கள், மாவட்டங்களில் பார்வையிடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இணை இயக்குனருக்கும், ஒன்று அல்லது இரு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதேபோல், அனைத்து மாவட்டங்களும், அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தேர்வு முடியும் வரை, சம்பந்தபட்ட மாவட்டங்களில் இருந்து, தேர்வை சுமூகமாக நடத்த வேண்டும் எனவும், முறைகேடுகள் எதுவும் நடக்காதபடி கண்காணிக்க வேண்டும் எனவும், தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.‌-

மத்திய ரெயில்வே பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு 14 புதிய ரெயில்கள்

  ரெயில்வே பட்ஜெட்டில்¢ மொத்தம் 94 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 14 புதிய ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
1. சென்னை - காரைக்குடி வாராந்திர ரெயில்

2. சென்னை - பழனி தினசரி ரெயில்

3. சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் தினசரி ரயில

் 4. சென்னை - நாகர்சோல் ரெயில் (மகாராஷ்டிரா)

5. சென்னை - வேளாங்கண்ணி இணைப்பு ரெயில்

6. கோவை - மன்னார்குடி தினசரி ரெயில்

7. கோவை - ராமேஸ்வரம் வாரந்திர ரெயில்

8. சென்னை - பிகானீர் வாராந்திர எக்ஸ்பிரஸ்

9. நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரெயில்

10. புதுச்சேரி - கன்னியாகுமரி வாரந்திர ரெயில்

11. திருப்பதி - புதுச்சேரி வாராந்திர ரெயில்

12. சென்னை - ஹௌரா வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ்

13. பழனி - திருச்செந்தூர் பயணிகள் ரெயில்

14. சென்னை - திருப்பதி பயணிகள் ரெயில்

செப்., 30 தேதி அரசு விடுமுறை இல்லை

வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும், பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதில், ஆண்டு தோறும், செப்., 30ம் தேதி, வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விடுமுறையை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என, மத்திய அரசின் நிதித்துறை, மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று, வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பிற்காக, அறிவிக்கப்பட்ட, செப்., 30ம் தேதியை, அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை, வெளியிடப்பட்டுள்ளது.

Monday, February 25, 2013

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு

அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.ஆசிரியர் குழுவினர், பாடங்கள் சம்பந்தபட்ட பொருட்களுடன், பள்ளி வாரியாக நேரில் ஆஜராகி மாணவ, மாணவியருக்கு கண்காட்சி மற்றும் செய்முறை விளக்கங்களுடன், அறிவியலை கற்பிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை மேம்படுத்த, பல்வேறு வகையான யுக்திகளை கல்வித் துறை கையாண்டு வருகிறது.சிறப்பு வகுப்புகள், பாடங்களில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு பாடம் கற்பித்தல், பல்வேறு வகையான கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு பாடங்களை கற்பித்தல் என, பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்த வரிசையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், புதுமையான கற்பித்தல் திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.சென்னையைச் சேர்ந்த, "ஈவன்ட் எஜூ சிஸ்டம்' என்ற நிறுவனத்துடன் இணைந்து,

இத்திட்டத்தை முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40 பள்ளிகளில் செயல்படுத்தியது. பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு, 40 அறிவியல் உபகரணங்களைக் கொண்டு, பள்ளி வாரியாக சென்று மாணவ, மாணவியருக்கு, அறிவியலைப் பற்றி விளக்கியது.பயிற்சி குழுவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், ""காந்தத்தின் பண்புகள் என்றால், காந்தங்களின் வகைகளை காட்டி, அவற்றின் செயல்பாடுகளை விளக்குகிறோம். மலரின் பாகங்கள் எனில், மிகப்பெரிய மலரை, மாணவர்கள் முன் வைத்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும், தனித்தனியாக காட்டி விளக்குகிறோம். இதேபோல், பல கண்காட்சிகளை நடத்தும் திட்டங்கள் உள்ளன,'' என்றார்.இத்திட்டம் மாணவ, மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்ததாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த, தொடக்க கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Tuesday, February 19, 2013

TNPSC Group I prelims Tentative Answer Keys

குரூப் 1 தேர்வு கேள்வித்தாளின் உத்தேச விடைகள்

tnpsc.gov.in/anskeys/16_02_…

Tamil Nadu Public Service Commision- Group 2 Call Letters Download

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச் செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., "பகீர்' தகவல்

முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது.

சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான, தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர். உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன.

அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன. இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

Monday, February 18, 2013

எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு

பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசுப் பணிகளில் இந்த கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு இணையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கவனத்துடன் பரிசீலித்த பிறகு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் படிப்பு, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று உத்தரவிடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுப் பணி, பதவி உயர்வுக்கு இதை வேதியியல் படிப்புக்கு இணையான படிப்பாகக் கருத வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

TNPTF Gen.Secretary Mr.Muruga Selvarasan Speech About 20,21 Strike

Dir. of Govt. Examinations: SSLC March 2013 - Practical Examination Instructions

Private Schools Fee Determination Committee 2013-2014 - Questionnaire, Fee Format and Enquiry Notice

Friday, February 15, 2013

பிப்ரவரி 20,21 அகில இந்திய வேலைநிறுத்த ஏற்பாடு நோட்டிஸ

Pension- Contributory Pension Scheme- Employees contribution and Government contribution- Enhancement of rate of interest at the rate of 8.6 percent - Orders - Issued

TNPSC Group II Results

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரி 22-ல் நேர்காணல் B

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.)குரூப் 2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுகிறது. குரூப் 2 பிரிவுக்கு உள்பட்ட 3,631 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் 4-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 12- ல் நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மறு தேர்வு கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2-ன் கீழ் வருகின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

  பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 45 காசும் உயருகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த இரு வாரங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியானது.

குரூப் 1 தேர்விற்கு தயாராவது எப்படி?

அரசாணை எண் 23, மாற்றுத்திறனாளி,சிறைத்தேர்வர் பத்தாம்வகுப்பு செய்முறைத் தேர்வில் சான்றிதழில் PRACTICAL exempted என ஆணை வழங்குதல் சார்பு

Thursday, February 14, 2013

அரசு ஊழியர்களுக்கானஓய்வூதிய திட்ட வட்டி அதிகரிப்பு

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, ஓய்வூதியத் திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது. அதாவது, அந்தாண்டிற்கு பின் சேர்ந்தவர்கள் அனைவரும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.

இத்திட்டத்தின் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து, 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு இணையான தொகையை அரசும் வழங்கி, அந்த ஊழியரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி முதல், 8.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக, முன்தேதியிட்டு தற்போது, தமிழக அரசு உத்தரவிட்டு, இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.

"குரூப் 2 மறுதேர்வு முடிவுகள் 5 நாள்களில் வெளியாகும்'

குரூப் 2 மறு தேர்வுக்கான முடிவுகள் ஐந்து நாள்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 131 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 262 பேரில் ரேங்க் அடிப்படையில் வந்த 131 பேர் முதல்முறையாக கலந்தாய்வு அடிப்படையில் வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் நடராஜ் கூறியது: குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதில் ஒவ்வொருவரும் எந்தெந்தப் பணிகளில் சேர விருப்பமோ அதை தேர்ந்தெடுக்க உள்ளனர். வரும் 16-ம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வில் 25 பணியிடங்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 26 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று தகவல்களைத் தெரிவிக்கலாம். தேர்வாணைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நட்ராஜ். வியாழக்கிழமை நடைபெற்ற கவுன்சலிங்கில் 40-க்கும் மேற்பட்டோர் துணை ஆட்சியர் பதவியையும், 23-க்கும் அதிகமானோர் டி.எஸ்.பி., பதவியையும் தேர்ந்தெடுத்தனர்.

குரூப்-2 மறுதேர்வு முடிவுகள்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வின் வினாத்தாள் முன்பே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு நவம்பர் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்னும் 5 நாள்களில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்–1 முதல்நிலை தேர்வு: 25 காலி இடங்களுக்கு 1¼ லட்சம் பட்டதாரிகள் போட்டி -

  துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 முதல்நிலை தேர்வு  (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 1¼ லட்சம் பட்டதாரிகள் கலந்து கொள்கிறார்கள். புதிய பாடத்திட்டம் குரூப்–1 தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வுமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. குரூப்–1 தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களை கொண்டது ஆகும். தற்போது முதல்நிலை தேர்வில் புதிதாக ‘ஆப்டிடியூடு’ என்ற ஆய்வுத்திறன் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

முன்பிருந்த 200 பொது அறிவு கேள்விகளின் எண்ணிக்கை 150 ஆக குறைக்கப்பட்டு ஆப்டிடியூடு பகுதியில் இருந்து 50 வினாக்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதேபோல், மெயின் தேர்வில் முன்பு 2 பொது அறிவு தாள்கள் மட்டும் இருந்தன. ஒவ்வொன்றுக்கும் தலா 300 வீதம் மொத்தம் 600 மதிப்பெண். புதியமுறையில் கூடுதலாக ஒரு பொதுஅறிவு தாள் சேர்க்கப்பட்டு மொத்த மதிப்பெண் 900 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆங்கில மொழித்திறனை சேர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டமும் இணைக்கப்பட்டு உள்ளது.

புதிய முறையில், நேர்முகத்தேர்வு மதிப்பெண் 80–லிருந்து 120 அதிகரித்து இருக்கிறார்கள். முதல்நிலை தேர்வு நாளைமறுநாள் நடக்கிறது இந்த நிலையில், துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஒரு லட்சத்து 29 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் தகுதி உடையவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த லையில், புதிய பாடத்திட்டம், தேர்வுமுறை மாற்றத்துடன் கூடிய முதல் குரூப்–1 தேர்வு (முதல்நிலைதேர்வு) நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. 25 இடங்களுக்கு 1¼ லட்சம் பேர் போட்டி ஏறத்தாழ ஒன்றே கால் லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் 26 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொள்கின்றனர். மதுரை, சேலம், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தலா 5 ஆயிரம் பேரும், விழுப்புரத்தில் 5,500 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். குரூப்–1 முதல்நிலை தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்தார். வழக்கம்போல் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் எழுதுவது வீடியோவில் பதிவுசெய்யப்படும். அனைத்து மையங்களையும் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது

. ஒரே மாதத்தில் தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு பட்டியலின்படி, குரூப்–1 முதல்நிலை தேர்வு முடிவு அடுத்த மாதம் (மார்ச்) வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு மே மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதன் முடிவு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதம் நேர்முகத்தேர்வு நடத்தி ஆண்டு இறுதிக்குள்ளாகவே நியமன பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.