இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 05, 2012

100% படிப்பறிவு கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும

   தமிழகத்தை 100 சதவீத படிப்பறிவு கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.

தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கி அமைச்சர் சிவபதி பேசியது:

தமிழகத்தில்தான் வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படுகிறது. இதனால், ஏழைக் குழந்தைகளும் லேப்-டாப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இலவசப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், கலர் பென்சில்கள் என படிப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

நல்ல ஆசிரியர்:

நல்ல ஆசிரியர் என்பவர் பாடத்தைப் புரியவைப்பதோடு மட்டுமில்லாமல் வாழ்வியலையும் புரியவைப்பவர். அடுத்தத் தலைமுறையினருக்கு அடித்தளம் அமைக்கும் சமூக விஞ்ஞானி அவர். அதுபோன்ற நல்ல ஆசிரியர்களுக்கு விருது வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோர் நிலையில் இருந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும். கண்டிப்போடு ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அவர்களைப் பெற்றோர்களாக மாணவர்கள் நினைக்க வேண்டும். சென்னை, திருச்சியில் உள்ள ஆசிரியர் இல்லங்களைப் புதுப்பிப்பதற்காக தலா ரூ.3 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்றார் அவர்.

பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா:

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பள்ளிகள், மாணவர்களுக்கு உதவும் வகையில் இ.எம்.ஐ.எஸ். (உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) என்ற முறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் குறித்த விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிப்பதைக் கண்காணிப்பதோடு, ஆசிரியர்கள் தங்களுக்குள் எழும் சந்தேகங்கள் தொடர்பாகவும் இணையதளத்தில் விவாதிக்கலாம் என்றார் அவர்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி:

தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து ஆசிரியர்களையும் போட்டித் தேர்வுகள் மூலமாக தேர்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியராகப் பணியாற்ற இப்போது பெறும் கல்வியியல் பட்டம் மட்டும் போதுமானதாக இல்லை. அவர்களது திறமையை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை வழங்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பணியிடை பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் வரவேற்றார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட மாநில கூடுதல் இயக்குநர் ஆர்.இளங்கோவன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.கோபால், அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குநர் அ.முகமது அஸ்லம், சென்னை மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி உள்ளிட்டோர் பேசினர்.

தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நன்றி கூறினார்.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், விருது பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்்

பணியில் இருக்கும் மகன் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு: உயர் நீதிமன்றம

  பணியில் இருக்கும் மகன் உயிரிழக்க நேர்ந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளராகப் பணியாற்றியவர் ரவிகுமார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந் நிலையில் அவர் கடந்த 2006-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் இறப்புக்குப் பின் வழங்க வேண்டிய பணப் பலன்கள் முழுவதையும் அவரது தாயார் மாரியம்மாளிடம் துறைமுக நிர்வாகம் வழங்கியது.

எனினும் குடும்ப ஓய்வூதியம் வழங்க மறுத்து விட்டது. தொழிலாளி ஒருவரின் மனைவியோ அல்லது அவரது மகன், மகள் மட்டுமே ஓய்வூதியம் பெறலாம். விதிகளின்படி தாயாருக்கு ஓய்வூதியம் வழங்க இயலாது என்று துறைமுக நிர்வாகம் கூறி விட்டது.

இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மாரியம்மாள் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டி. ஹரி பரந்தாமன், திருமணமாகாத மகன் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியம் பெறும் உரிமை தாய்க்கு உண்டு என்று தீர்ப்பளித்தார். குடும்ப ஓய்வூதியப் பலன்களை பெறும் உரிமை பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உறுதிப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, தனது மகனின் மாத ஊதியத்தை மட்டுமே சார்ந்து மனுதாரர் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென மகன் உயிரிழக்க நேரிட்டதால் இனி குடும்ப ஓய்வூதியம் மட்டுமே அவரது ஒரே வாழ்வாதாரம் ஆகும். மேலும், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டப்படி, வயதான பெற்றோரை பத்திரமாகப் பராமரிக்க வேண்டிய கடமை அவர்களின் பிள்ளைகளுக்கு உள்ளது.

இந்த வழக்கில் தனது தாயாரைப் பராமரித்து வந்த துறைமுகத் தொழிலாளியான மகன் உயிரிழந்து விட்டதால், தாயாருக்கு துறைமுக நிர்வாகம் குடும்ப ஓய்வூதியம் வழங்கியாக வேண்டும். இதுவரை வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதியப் பாக்கியை இன்னும் 6 வாரங்களுக்குள் மனுதாரருக்கு துறைமுகப் பொறுப்புக் கழகம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி 2012-2013ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் சார்பில் 2012-2013ம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்டப் படிப்புகள், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  

முதுநிலை பட்டப்படிப்புகளில், எம்.பி.ஏ (வணிக மேலாண்மை), எம்.எஸ்சி. (கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்), எம்.எஸ்சி. (சுற்றுச்சூழல் மேலாண்மை) என மூன்றுவித படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

முதுநிலை பட்டயப் படிப்புகளில் உணவு நுட்பவியல், உயிர்த் தகவலியல், மூலிகைப் பயிர் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதிக்காத பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், தாவர நல கண்காணிப்பு என 7 பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  

இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு ரூ.300-க்கான வரைவோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரில் ரூ.250- செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் செப்டம்பர் 7-ம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி் எண்கள் 0422-6611229. 94421 11048, 94421 11057, 94421 11058.

பாரதியார் பல்கலை: பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு

   கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் பி.எட்., தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை காண http://www.b-u.ac.in/bed_results2012jun/index.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்க்கு இயக்குநர் செயல்முறைகள்

சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்கிறது: அடுத்த வாரம் அறிவிப்ப

   சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது  என்றாலும் இந்தியாவில் எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றது.

மத்திய அரசும், பெட்ரோலிய பொருட்களுக்கு அளித்து வரும் மானியத்தை படிப்படியாக குறைத்து வருகிறது. தற்போது மத்திய நிதி அமைச்சகம் பெட்ரோலியத்துறைக்கு மானியம் அளிக்க போதுமான நிதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிந்ததும் அடுத்த வாரம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

அதன்படி டீசல் லிட்டருக்கு ரூ.5-ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4-ம் உயரும் என்று தகவல் வெளியானது. இப்போது சமையல் கியாஸ் விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 வரை உயருகிறது. ஆனால் மண்எண்ணை விலையில் மாற்றம் இருக்காது.

இதுபற்றி பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் அளிக்க நிதி அமைச்சகத்திடம் போதுமான நிதி இல்லாததால் மானியத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைவதற்காக காத்து இருக்கிறோம். கூட்டம் முடிந்ததும் விலை உயர்வு இருக்கும் என்றார். பெட்ரோல் - டீசல் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டாலும் சமையல் கியாஸ் விலை கடைசியாக 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது. தற்போது எண்ணை நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 கோடியும், கடந்த நிதியாண்டு வரை மொத்த இழப்பு ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 951 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, September 04, 2012

அறிவின் திருவே.... குருவே....: இன்று ஆசிரியர் தினம்

  மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவரின் வெற்றி, தோல்வியில், பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது. மாணவர்களை, சிறந்த மனிதராக மாற்றுவது ஆசிரியர் தான். வாழ்க்கை என்றால் என்ன, சமூகத்தில் மாணவரின் பங்கு ஆகியவற்றை ஆசிரியர்கள் தான் சொல்லித் தருகின்றனர்.

ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். எனவே, பொறுப்பை உணர்ந்து மாணவருக்கு ஆசிரியர், உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

எப்படி வந்தது:
சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால், பெருமை என கூறினார்.

ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.

ஏன் இந்த முரண்பாடு:
தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. இந்த உறவு, பள்ளிகளைத் தாண்டியும் தொடர வேண்டும். ஆசிரியர், மாணவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தாகத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி இன்றியமையாதது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல.

உங்கள் கடமை:
மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. தற்போது ஆசிரியர் ஆவதற்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். கல்விக்கு தான் அரசு, அதிக நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி, உண்மையில் கல்வியை வளர்க்க பயன்பட வேண்டும்.
கவுரவம்:
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.

370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

     தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 198 பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 139 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 24 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும், சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த ஓர் ஆசிரியரும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 6 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர்.

சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி இந்த விருதுகளை வழங்குகிறார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருதுக்குப் பரிசீலிக்கப்படுகின்றனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆசிரியர்களாக இருந்தால் அவரது பாடத்தில் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; தலைமையாசிரியர்களாக இருந்தால் பள்ளியின் செயல்பாடு கணக்கில் கொள்ளப்படும். தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களாக இருந்தால் அந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, கல்வித் தரம், கற்பித்தலில் பின்பற்றப்படும் புதிய உத்திகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்வார்கள். மாவட்ட அளவிலான குழுக்கள் இந்த ஆசிரியர்களின் பெயர்களைப் பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பும். இந்த ஆண்டு மொத்தம் 760 ஆசிரியர்களின் பெயர்கள் மாநில அளவிலான குழுவுக்கு அனுப்பப்பட்டன.

அதிலிருந்து 370 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு விரைவு பஸ்களில் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு

   அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி 30 நாள்களிலிருந்து 60 நாள்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4-ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: பஸ் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் 30 நாள்களுக்கு முன்பு முன் பதிவு செய்து கொள்ளும் வசதி, இப்போது 60 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் நீட்டிப்பு செய்துள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 8-ம் தேதி பயணிக்க விரும்பும் பயணி செப்டம்பர் 9-ம் தேதியே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் சென்னை புறநகரில் வசிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, முன்பதிவு செய்துள்ள பெருங்களத்தூர், மேல்மருவத்தூர் பகுதி பயணிகள் அந்தந்த இடங்களிலேயே பஸ்ஸில் ஏறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் இனி கோயம்பேடு பஸ் நிலையம் வரத் தேவையில்லை. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இப்போது இயங்கி வரும் 50 முன்பதிவு மையங்கள், வரும் காலங்களில் 300 மையங்களாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

8th std model Question paper

7th std model question papers

6th std 1st term blue print &model question papers

5th std 1term model Question paper&blue print

4th std 1term CCE blue print&model Question papers

3rd Std model question papers

CCE 2nd std SA Blue print &Question papers

CCE 1std SA Blue Print&Question papers

ஆசிரியர் தினம்: ஆளுநர் வாழ்த்து

  ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ரோசய்யா ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான ஆசிரியர் தினத்தில், ஆசிரியர் சமுதாயத்திற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், தொலைநோக்கு பார்வை உடையவர். ஆழ்ந்து படித்த கல்விறிவு கொண்டவர். சிறந்த குரு மற்றும் ராஜதந்திரி ஆவார். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த அவர் நாட்டின் உயரிய பதவிக்கு உயர்ந்தவர்.

ஆசிரியர்களுக்கு முன்னேற்றகரமான மனப்பாங்கு அவசியம். அவர்கள் அறிவுக் களஞ்சியமாக மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு முன் மாதிரியாகவும் திகழ வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பவராகவும், நண்பராகவும், தத்துவஞானியாகவும், நல்வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். மேலும்,  இன்றைய மாணவர்களை தைரியமிக்க, புதுமைகளை விரும்பக் கூடிய, நன்னடத்தை மற்றும் நற்குணமிக்க நாளைய இளைஞர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.

நாளைய சமுதாயத்தை உருவாக்கும் அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு நாம் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். இன்றைய நமது உயர்ந்த நிலைக்கு காரணமான ஆசிரியர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்வோம் என்றார் ஆளுநர்.

IGNOU B.ed Term End Exam December 2012 Application Form

பதவியுயர்வில் இடஒதுக்கீடு : அமைச்சரவை ஒப்புதல்

   அரசுப் பணிகளில் பதவி உயர்வின்‌போது, எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்திற்கு மத்திய அ‌மைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தினம் : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்த

செப்டம்பர் 4ம் தேதி ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா “ஆசிரியர் தின” வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் பிறந்து ஆசிரியராகப் பணி புரிந்து, தமது நற்சிந்தனையாலும், நல்லொழுக்கத்தினாலும் மிக உயர்ந்து நாட்டின் உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியினை வகித்து, ஆசிரியப் பணிக்கு பெருமை தேடித் தந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை “ஆசிரியர் தினமாக” ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் அனைவரும் கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறோம்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்கிற வள்ளுவர் வாக்கின்படி ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய ஒரு கருவி உண்டு என்றால் அது தான் கல்வி. அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என்றால் அது மிகையாகாது.

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக தம்மிடம் பயிலும் மாணவக் கண்மணிகளிடம் அன்பு காட்டி அரவணைத்து வழிகாட்டுவதன் மூலமே அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று சமுதாய வளர்ச்சிக்கு உதவிட முடியும் என்பதை அறிந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் அதன்படி செயல்பட்டு, ஆசிரியர் தொழிலுக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அப்பெருமகனார் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவச் செல்வங்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்பதே எனது பேரவா. மாணவச் சமுதாயம் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கி பார் போற்றிட வாழ உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்துகின்ற எண்ணற்ற திட்டங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தி சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்க வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் தலையாய கடமையாகும்.

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Monday, September 03, 2012

TamilNadu Postal Assistant Online Application

Enter your name,ID,DOB
Click Below
http://www.examinationonline.in/dop/

TEACHERS DAY- ARTICLE

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர

     சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, வரும், 28ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக, தற்போதைய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, அல்தாமஸ் கபீரை நியமிக்கும்படி, பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளே, தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த அடிப்படையில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, ஓய்வு பெறும் தலைமை நீதிபதியின் பரிந்துரையை கேட்கும் சட்ட அமைச்சர், அவர் பரிந்துரைத்த பெயரை, பிரதமரின் ஒப்புதல் பெற்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்.

தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள கபாடியா, புதிய தலைமை நீதிபதியாக, அல்தாமஸ் கபீரை நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.

அல்தாமஸ் கபீர், 2005ம் ஆண்டிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர், தன், 65வது வயது வரை, அதாவது, 2013, ஜூலை 18 வரை பதவியில் தொடர்வார்.