இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, May 18, 2018

பி.இ. படிப்பு : முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரம் வெளியீடு


பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் வசதிக்காக முந்தைய ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2018) வெளியிடப்பட்டுள்ள இந்த விவரங்களில் 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில், தங்களுக்கு எந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மாணவர்கள் முன்கூட்டியே கணித்துக் கொள்ள முடியும்.

மேலும், ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் முன்னதாக இந்த கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 5 முதல் 10 பொறியியல் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் குறித்து வைத்துக் கொள்வது வசதியாக இருக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் ஏற்கெனவே கூறியுள்ளனர். அதாவது, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட மூன்று துறைகள் மற்றும் பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கான கட்-ஆப் குறைய வாய்ப்பு இல்லை எனவும் இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2 முதல் 3 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment