க்ரூப் மெசேஜ்களுக்கு வாட்ஸ் அப்பில் புது வசதி
வாட்ஸ் அப் செயலி தனது வாடிக்கையாளர்களுக்கு சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாட்ஸ் அப் க்ரூப் பயன்படுத்துபவர்களுக்காக இந்த புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் இன்று முதலே கிடைக்கும். க்ரூப்ஸ் சேவையில் 4 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
1. க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்
அதாவது வாட்ஸ் அப் செயலில் ஒரு க்ரூப்பை நிர்வாகிப்பவர் அந்த க்ரூப் குறித்த ஒரு சிறிய விளக்கத்தை அதில் சேர்க்க முடியும். யாராவது புதிதாக குழுவில் இணைக்கப்பட்டால் அந்த டிஸ்க்ரிப்ஷன் சேட்டின் தலைப்பில் இடம்பெறும்.
க்ரூப் டிஸ்க்ரிப்ஷனைச் சேர்க்க ஒருவர் வாட்ஸ் அப் செயலியில் க்ரூப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் விளக்கத்தைச் சேர்க்கவேண்டும். குழுவின் பெயருக்குக் கீழ் இந்த விளக்கம் இடம் பெற்றிருக்கும்.
இவ்வாறு சேர்க்கப்படும் க்ரூப் டிஸ்க்ரிப்ஷனானது குழுவில் உள்ள அனைவருக்கும், குழுவில் இணைய அழைக்கப்படும் அனைவருக்குமே தெரியும்.
2. அட்மின் கன்டோர்ல்கள்:
வாட்ஸ் அப் குழுவின் அட்மினாக இருப்பவர்களுக்கு சில கூடுதல் கன்ட்ரோல் சலுகைகள் வழங்கப்படுகிறது. க்ரூப் செட்டிங்ஸில் இந்த சேவை இருக்கிறது. இதன் மூலம் குழுவில் இருப்பவர்களில் யாரெல்லான் க்ரூப் படம், டிஸ்க்ரிப்ஷன் ஆகியவற்றை மாற்றலாம் என்பதை அட்மின் நிர்ணயிக்க முடியும்.
3. க்ரூப் கேட்ச் அப் ஃபீச்சர்
க்ரூப் கேட்ச் அப் ஃபீச்சர் என்று ஒரு சேவை இருக்கிறது. இதன் மூலம் ஒரு க்ரூப்பில் உள்ள ஒருவர் சேட்களுக்கு இடையே தான் தவறவிட்ட மெசேஜ்களை படிக்க உதவும். இதற்காக சேட்டின் வலது மூலையில் @ சிம்பள் ஒன்று இருக்கும். அந்த @ குறியீட்டை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட நபரை மென்ஷன் செய்தோ அல்லது அவருக்கு பதில் அளிக்கும் வகையிலோ இடம்பெற்ற சேட்கள் அனைத்தையும் அவரால் படிக்க முடியும்.
4. பார்டிசிபன்ட் சேர்ச் ஃபீச்சர்
இப்படி ஒரு ஃபீச்சர் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் க்ரூப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட ஒரு நபரைத் தேடிப் பிடிக்கலாம். க்ரூப் இன்ஃபோ பேஜில் இருந்து க்ரூப்பில் இடம்பெற்றுள்ளவர்களைக் கண்டுபிடிக்க முடியும்.
இதுதவிர, க்ரூப்பை உருவாக்குபவர்களை அந்த க்ரூப்பில் இருந்து நீக்க முடியாத ஆப்ஷன், அதேபோல் ஒரு க்ரூப்பில் இருந்து விலகியவரை மீண்டும் மீண்டும் அதே க்ரூப்பில் இணைக்க முடியாதபடி பாதுகாப்பு அம்சம் ஆகியனவும் வாட்ஸ் அப்பின் புது அப்டேட்களாக உள்ளன
No comments:
Post a Comment