பகுதி நேர ஆசிரியர்களுக்கு, சம்பள உயர்வு வழங்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜக்கையன், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - ஜக்கையன்: பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவர்கள், தற்போது, மாதம், 7,700 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகின்றனர்; அதை, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.அமைச்சர்
செங்கோட்டையன்: மத்திய அரசின், சர்வ சிக் ஷ அபியான் திட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று நாட்கள், தலா, இரண்டு மணி நேரம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும்படி வலியுறுத்தினோம்; மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தமிழக அரசு, அவர்களின் இருப்பிடம் அருகே பணியமர்த்த, நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜக்கையன்: அவர்களுக்கு, மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை; அதை வழங்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: அதை வழங்கினால், அவர்கள் முழு நேர ஆசிரியர்களாகி விடுவர்.இவ்வாறு விவாதம் நடந்தது
No comments:
Post a Comment