வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தி வெளியிடும் நோக்கில் வாக்காளர் பட்டியலோடு அலுவலர்கள் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தினர். தொகுதியில் இடம் பெயர்ந்தோர் விபரம், இறந்தவர் விபரம், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பட்டியலில் இடம் பெற்றோர் என விபரங்களை சேகரித்தனர்.
இப் பட்டியல் கடந்த 15 ல் வெளியிடப்பட்டது.வெளியான பட்டியலில் திட்டமிட்டு தி.மு.க., ஓட்டுகள் நீக்கப்பட்டதாகவும், உயிரோடு உள்ளவர்களையும் இறந்தவர் பட்டியலில் சேர்த்திருப்பதாக கூறி தி.மு.க., தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.இதையடுத்து வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்க கட்டாயம் இறப்பு சான்று பெறவேண்டும் அல்லது வாரிசு சான்று மற்றும் இறப்பை உறுதி செய்யும் சான்று இருந்தால் மட்டுமே வாக்களர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் இணைப்பு: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி மாவட்டங்களில் 50 முதல் 70 சதவீத அளவிற்கே முடிந்துள்ளது.
புதிய வாக்களர்கள் பலர் ஆதார் எண் இணைக்க வில்லை. எனவே, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மீண்டும் வீடு, வீடாக சென்று ஆதார் எண் பெற வேண்டும். அதாவது குடும்பத்தலைவர், குடும்பத்தலைவி ஆதார் எண் இருந்தால் அதனை வைத்து அவர்களது வீட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் ஆதார் எண் பெற்று இணைக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்கள், இறந்தோர் பட்டியலை உறுதி செய்ய சான்று பெறும் பணியில் ஈடுபட உள்ளனர்.
No comments:
Post a Comment