தேர்தல் அதிகாரி தகவல்
வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் தகவல்களை பதிவு செய்ய "டாப்லெட்" கருவியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இதற்கான முன்னோடித் திட்டம் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஜிபிஆர்எஸ் இணைப்புக் கொண்ட டாப்லெட் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
. இதன்படி, வீடுகளில் வாக்காளர்களிடம் பெறப்படும் தகவல்கள் அங்கேயே சரிபார்க்கப்படும் என சக்சேனா தெரிவித்துள்ளார். பிழையின்றி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் திட்டத்தின்படி, தமிழகத்தில் வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சேகரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமுள்ள வாக்காளர்களில் 4 கோடியே 26 லட்சம் பேரிடம் இந்த தகவல்கள் பெறப்பட்டு, 3 கோடியே 15 லட்சம் பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக சந்தீப் சக்சேனா தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment