பிளஸ் 2 மாணவர்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.
பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில் இருந்து நேரடி பதிவிறக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து மாணவர்களே நேரடியாக தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.
No comments:
Post a Comment