ஒத்தி வைக்கப்பட்ட மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை, விரைவில் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், அரசு ஊழியர்கள் உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஆண்டு தோறும் சீருடை பணியாளர் அல்லாத அரசு ஊழியர்களுக்கான தடகளம், கூடைபந்து, கையுந்து பந்து, டென்னிஸ், கபடி, மேஜைபந்து போட்டிகள் மே, ஜூனில் நடப்பது வழக்கம். மாவட்டந்தோறும், 60க்கு அதிகமான அரசு ஊழியர்கள் பங்கேற்பர்.
இந்தாண்டுக்கான கூடை பந்துக்கான போட்டி மதுரையில், மே 15 முதல் 17 வாலிபால் போட்டிகள், மே 19 முதல் 21 வரை தஞ்சாவூரிலும் நடப்பதாக இருந்தது.அந்த நாட்களில் மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதை தொடர்ந்து போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் இன்றுவரை போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்படாமல் உள்ளது.
தற்போது கோடை விடுமுறை என்பதால், ஜூன் முதல் வாரத்திற்குள் போட்டிகளை நடத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
No comments:
Post a Comment