காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் இணையதளம், ஜூன் மாதம் முதல் செயல்பட துவங்கும்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
காணாமல் போகும் குழந்தைகள் குறித்த தகவல்களை அளிப்பதற்காக, www.koyapaya.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், காணாமல் போன குழந்தைகளின் படங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றலாம்; இதை, போலீசார் மற்றும் இதற்கென அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மட்டுமே செய்ய முடியும்.
காணாமல் போனவர்களை, உலகம் முழுவதும் உள்ளோர், இந்த தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்; அவர்கள் கொடுக்கும் தகவலின் படி, காணாமல் போனவர்களை மீட்க, போலீசார் நடவடிக்கை எடுப்பர். இந்த இணையதளம், முதற்கட்டமாக ஆங்கிலத் தில் வெளியாகிறது. அடுத்து, இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில், மொழிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். மேலும், 'டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களுடன் இணைப்பு வசதி யும் ஏற்படுத்தப்படும். காணாமல் போகும் குழந்தைகள் குறித்து, பத்திரிகை, 'டிவி', 'கேபிள் டிவி' போன்றவற்றில் அறிவிப்பு வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
* நாட்டில், ஆண்டுக்கு, ஒரு லட்சம் குழந்தை கள் காணாமல் போகின்றனர்.
* குக்கிராமங்கள், கிராமப்புறங்களில் காணாமல் போகும் குழந்தைகள் குறித்து, பெரும்பாலானோர் போலீசில் புகார் அளிப்பதில்லை.
No comments:
Post a Comment