'பிரசார் பாரதி, துார்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம், அதிக அளவில் செய்திகள் சேகரிக்கப்பட்டு, மக்களுக்கு தரப்பட வேண்டும்; இதுவே, மூன்று நிறுவனங்களின் செயல்திட்டமாகும்,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
துார்தர்ஷன் செய்திகளை, மொபைல் போன் மூலமாக தரும் வசதியை, டில்லியில் நேற்று துவக்கி வைத்த, அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: நாட்டில் ஏராளமான செய்தி சேனல்கள், பத்திரிகைகள் இருந்தாலும், சேனல்கள் அல்லது பத்திரிகைகளின் ஆசிரியர்கள் எதை விரும்புகின்றனரோ, அவையே செய்திகளாக வெளியாகின்றன. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான சம்பவங்கள் நிகழ்கின்றன; அவை எல்லாம், செய்திகளாக ஒளிபரப்பாவதில்லை.
போட்டி அடிப்படையில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் சர்ச்சையை கிளப்பும் செய்திகளுக்கே, தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், உண்மையான செய்திகளுக்கு எப்போதும், பற்றாக்குறையே உள்ளது. எனவே, உண்மையான செய்திகள் ஒளிபரப்பாவது, ஒரு போதும் தடைபடக் கூடாது. செய்திகளை பார்ப்போரும், டில்லியை மையமாகக் கொண்ட செய்திகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உலகளாவிய செய்திகள், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான செய்திகளை அறிந்து கொள்வதில், அதிக அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு, அருண் ஜெட்லி கூறினார்.
No comments:
Post a Comment