இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 23, 2013

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

   மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்.எஸ், எம்.டி, எம்.சி.எச், எம்.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் இன்று அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும்  என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை tnhealth.org. , tn.gov.in என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Draft Syllabus For XI & XII

Wednesday, May 22, 2013

அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு

  பிளஸ் 2 மாணவர்களுக்கான, மதிப்பெண் பட்டியல், வரும், 27ம் தேதி வழங்கவுள்ள நிலையில், அதன் பின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்போர், அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை மட்டுமே அனுப்ப வேண்டும் என, கால்நடை பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:

கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப உள்ளிட்ட இளநிலை பட்ட படிப்புகளில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் உள்ள, 18 மையங்களில், கடந்த, 13ம் தேதி துவங்கி, வரும், 31ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜூன், 3ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை, 600 ரூபாய்; ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 300 ரூபாய். வரும், 27ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளன. எனவே, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்போர், பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பலாம்.

ஆனால், அதன் பிறகு, 3ம் தேதிக்குள் அனுப்புவோர், அசல் மதிப்பெண் பட்டியல் நகலை இணைத்து, பல்கலைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பஸ் "பாஸ்' தாமதமின்றி வழங்க உத்தரவு

  கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ல் பள்ளிகள் துவங்குகின்றன. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு பஸ் "பாஸ்' வழங்குவது தாமதமாகிறது. சில பள்ளிகளில் ஒரு மாதம் வரை கூட "பாஸ்'வழங்காத நிலை கடந்த ஆண்டு இருந்தது. இந்த கல்வியாண்டில் இதே நிலை நீடிக்காமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆலோசனை:

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் பள்ளிகள் துவங்குவதற்கு முன்னரே தலைமையாசிரியர்கள், போக்குவரத்து கழக அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்ட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களிடம் இருந்து போட்டோ சேகரித்து விண்ணப்பத்தில் ஒட்டி அனுப்ப தாமதம் ஏற்படுவதால், இம்முறை பள்ளியிலேயே பாஸ்போர்ட் அளவு போட்டோ எடுக்கப்படும். பள்ளி துவங்கும் நாள் அன்றே விண்ணப்பங்களை வழங்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பள்ளி துவங்கிய சில நாட்களுக்குள், 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பஸ் "பாஸ்' வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 87 நாட்கள் அவகாசம்

ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் தகுதி தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு சுமார் 3 மாத அவகாசம் இருக்கும் நிலையில், இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த 2099ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் சேர தமிழகத்தில் தகுதி தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, முதல் முறையாக 22 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். ஆனால் 2 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். இதையடுத்து, அக்டோபர் மாதம் 14ம் தேதி மீண்டும் தகுதித் தேர்வு நடைபெற்றது.தமிழகத்தில் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கு விண்ணப்பித்திருந்த 88 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றனர்.  6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை.இதையடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது, ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.

இந்த ஆண்டு தகுதித் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், இந்த ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு கிட்டத்தட்ட மூன்று மாத அவகாசம் இருக்கிறது. இதையடுத்து தகுதித் தேர்வை சந்திக்க இப்போதே பலர் ஆயத்தமாகி வருகின்றனர். தகுதித் தேர்வு மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வாய்ப்பு இருப்பதால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்களும் களம் இறங்கி உள்ளன.

TIRUPUR NORTH UNION ENGLISH medium schools 2013-14

ஆத்துப்பாளையம்
செல்லம்மாள் காலனி
அனுப்பர்பாளையம்
அய்யங்காளிபாளையம்
பாண்டியன்நகர்
கணக்கம்பாளையம்
பூலுவபட்டி
பிச்சம்பாளையம்புதூர்
குருவாயூரப்பன்நகர்
சாமுண்டிபுரம்
பெருமாநல்லூர்
போயம்பாளையம்
சமத்துவபுரம்
கேத்தம்பாளையம்
அரங்கநாதபுரம்
சிறுபூலுவபட்டி
குமார்நகர்
புதுராமகிருஷ்னபுரம்
நெசவளர்காலனி
பத்மாவதிபுரம்
பாலமுருகன்நகர்
எஸ்.வி.காலனி
குமரானந்தபுரம்
பாப்பநாயக்கன்பாளையம்
டி.என்.கே.புரம்

Tuesday, May 21, 2013

Tamil Nadu Public Service Commision- Departmental Exam Hall Ticket

TET paper I notification


TET papar 2 advertisement


பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு அட்டவணை

ஜூன் 19 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
ஜூன் 20 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள் ஜூன் 21 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 22 - சனிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 24 - திங்கள்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்
ஜூன் 25 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷின் அண்ட் டயட்டிக்ஸ்
ஜூன் 26 - புதன்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
ஜூன் 27 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல் ஜூன் 28 - வெள்ளிக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்
ஜூன் 29 - சனிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), தட்டச்சு
ஜூலை 1 - திங்கள்கிழமை - தொழில்பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல்.

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 19-ல் தொடக்கம்

  பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வியாழக்கிழமைமுதல் (மே 23)  திங்கள்கிழமைவரை (மே 27) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7.04 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் பள்ளி மாணவராகவோ, தனித்தேர்வர்களாகவோ எழுதி தேர்ச்சிப் பெறாதவர்களும், வருகை தராதவர்களும் இந்த சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம்.

அனைத்துப் பாடங்களிலும் தோல்வியுற்றவர்கள்கூட இநதத் தேர்வை எழுதலாம். சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வியாழன் முதல் திங்கள் வரை அனைத்து நாள்களிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான எஸ்.பி.ஐ. சலானையும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். தேர்வுக் கட்டணம்: தேர்ச்சி பெறாத ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலம் மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை மாணவர்கள் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும

். இந்த எண்ணைப் பயன்படுத்தியே தங்களது சந்தேகங்களைத் தீர்க்கவோ, தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ, ஹால் டிக்கெட்டைப் பெறவோ முடியும். அதேபோல், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகலெடுத்தும் விண்ணப்பதாரர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்? பள்ளி மாணவர்கள் உடனடித் தேர்வுக்கான c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​  எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மே 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வை தனித்தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​ விண்ணப்பம் மற்றும் எஸ்.பி.ஐ. சலானை அவர்களின் மாவட்டத்துக்குரிய அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

Monday, May 20, 2013

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு * பள்ளிக் கல்வி இயக்குனர் தகவல

: ""பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் தேவராஜன் கூறினார். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, மாறுதல் "கவுன்சிலிங்', முதன் முதலில் "ஆன்லைனில்', நேற்று துவங்கியது. மதுரை இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் எட்டு பேருக்கு, பணிமாறுதல் உத்தரவுகளை, தேவராஜன் வழங்கினார். அவர் கூறியதாவது:

"கவுன்சிலிங்கில்' பங்கேற்க மாநில அளவில், இதுவரை 20,203 பேர், விண்ணப்பித்துள்ளனர்; அவை "ஆன்லைனில்' பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம், 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு, விரைவில் வெளியாகும். தற்போது, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மாணவர்களுக்கு சிறப்பு கட்டணம், விரைவில் வழங்கப்படும். பெரும்பாலான பள்ளிகளில், இக்கட்டணத்தை செலவிடாமல், 6 லட்ச ரூபாய் வரை வைத்துள்ளனர்; இதுகுறித்து தகவல் சேகரிக்கப்படும். ஆசிரியர்களுக்கு, "உண்மைத் தன்மை சான்று' வழங்குவதில் ஏற்படும் தாமதம், தவிர்க்கப்படும்.

முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவின்படி, பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 6 ம் வகுப்பில், ஆங்கில வழிக் கல்வியை துவங்கலாம். ஆண்டுதோறும், மத்திய அரசு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திற்கு (ஆர்.எம்.எஸ்.ஏ.,), நிதி ஒதுக்குவதால், 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்; இந்த ஆண்டு நிதி கிடைக்காததால், மாநில அரசே முதற்கட்டமாக, 50 பள்ளிகளை தரம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிதி கிடைத்தால், மேலும் 50 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். இலவச கட்டாய கல்வி திட்டத்தில், பள்ளிகளில் ஒதுக்கீடு செய்துள்ள, 25 சதவீத இடங்கள் குறித்து, வருவாய் மற்றும் பள்ளி கல்வி அலுவலர் குழுவினர் விசாரிக்கின்றனர். ஆசிரியர்கள் மீது எழும் பாலியல் புகார்கள், 50 சதவீதம் வரை, முன்விரோதம் அடிப்படையில் உள்ளன; புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தமிழ் வழி ஒதுக்கீட்டில் 120 முதுகலை பணியிடம்

   கடந்த டிசம்பரில், 2,300க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை. தற்@பாது, இதில், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடங்களில், 120 இடங்களை நிரப்ப, வரும், 23, 24 தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய ஏழு இடங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு, 3,200 பேர் அழைக்கப்பட்டு உள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல்

அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் மாறுதலுக்கான கவுன்சலிங் நேற்று நடந்தது. இதில், 900 பேர் புது இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங் நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது. 32 மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களில், 'ஆன்லைன்' மூலம் நடந்தது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று காலை, மாவட்டத்துக்குள்ளே பணி இட மாறுதல் பெறுவதற்கும், பிற்பகல், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு செல்பவருக்கான கவுன்சலிங் நிகழ்ச்சி நடந்தது. இதில், 390 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்கு உள்ளேயும், 510 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேயும் புதிய இடங்களை தேர்வு செய்துள்ளனர். புது இடத்துக்கான மாறுதல் உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 2½ லட்சம் விண்ணப்பங்கள் தயார் 31–ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது

  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. வருகிற 31–ந்தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2,881 காலி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கான போட்டித்தேர்வு ஜூலை மாதம் 21–ந் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற இருக்கிறது. தேர்வுக்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. விண்ணப்ப விநியோகம் 31–ந் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கடைசி தேதி விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். ஜூன் 14–ந்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பக்கூடாது. தற்போது 2012–2013–ம் ஆண்டுக்கான காலி இடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்மையில் சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியும், ஒரு பள்ளிக்கு தலா 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடம் வீதம் 100 பள்ளிகளுக்கும் புதிதாக 900 பணி இடங்களுக்கு அனுமதி வழங்கியும் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணை தேர்வுக்கு முன்பாக வரும்பட்சத்தில் அந்த காலி இடங்களும் இந்த தேர்வுடன் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, May 19, 2013

ஜூன் முதல் வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள்

ஜூன் முதல் வாரத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 மாணவர்களுக்காக இந்த ஆண்டு மொத்தம் 93 லட்சத்து 78 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 80 சதவீத புத்தகங்கள் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளன. தாவரவியல், விலங்கியல் போன்ற சில பாடங்களுக்கான புத்தகங்கள் மட்டும் இன்னும் தயாராகவில்லை. கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், அவை தனியார் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  வரும் கல்வியாண்டின் (2013-14) முதல் பருவத்தில் மொத்தம் 5.34 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இவற்றில் தற்போது 78 சதவீத புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 விற்பனைக் கிடங்குகளிலும், அரசுப் பள்ளிகளுக்கான இலவசப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு புத்தகங்கள

  ்: இந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்காக 67 லட்சத்து 76 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 100 சதவீத புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மொத்தப் புத்தகங்களில் 51 லட்சத்து 70 ஆயிரம் புத்தகங்கள் இலவசப் புத்தகங்கள் ஆகும். 16 லட்சத்து 6 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கான புத்தகங்கள் ஆகும். முதல் பருவப் புத்தகங்கள்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் 98 சதவீதம் அச்சிடப்பட்டுள்ளன. 6, 7, 8, 9 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவப் புத்தகங்கள் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அச்சிடப்பட்டுள்ளன. பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும் வருகிற 25-ஆம் தேதிக்குள் அச்சிடப்பட்டுவிடும். மே 30-ஆம் தேதிக்குள் இவை அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு பள்ளி திறக்கும்நாளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, May 17, 2013

இளநிலை ஆய்வாளர் வேலை டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. * கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 3ம் தேதி, போட்டித்தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணைய தளம் (தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண) வழியாக விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

* மேலும், கூட்டுறவு சங்கங்களில், 13, "சூப்பர்வைசர்' பணிகளை நிரப்பவும், மேற்கண்ட தேதிகளுக்குள் விண்ணப்பிக்கலாம். * வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில், 18, "ஸ்டோர் கீப்பர் - கிரேடு - 2' பணியிடங்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில், 2, "ஸ்டோர் கீப்பர்' பணியிடங்களுக்கும், விண்ணப்பிக்கலாம். அனைத்து தேர்வுகளும், ஆகஸ்ட், 3ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும்.

* "ஆப்ஜக்டிவ்' முறையில், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். இத்துடன், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

புத்தகம் விலை உயர்வ

கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது. புத்தக விலை உயர்வு விவரம் வகுப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (பழைய விலை அடைப்புக்குறிக்குள்)
2–ம் வகுப்பு – ரூ.65 (ரூ.60)
3–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)
4–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)
5–ம் வகுப்பு – ரூ.100 (ரூ.80)
6–ம் வகுப்பு – ரூ.105 (ரூ.80)
7–ம் வகுப்பு – ரூ.140 (ரூ.100) 8–ம் வகுப்பு – ரூ.165 (ரூ.100)

தனியார் அச்சகங்களுக்கு வேண்டுகோள் இதற்கிடையே, ஒன்றாம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை (தமிழ் நீங்கலாக) அச்சிட விரும்பும் தனியார் அச்சகங்களிடம் இருந்து மாநில பொது பள்ளிக்கல்வி வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தனியார் அச்சகங்கள் வருகிற 24–ந் தேதிக்குள் 2 பிரதி வரைவு புத்தகங்களை சமர்ப்பிக்குமாறும் பள்ளிக்கல்வி வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

9–ம் வகுப்புக்கு முப்பருவமுறை புத்தகங்கள் அறிமுகம் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரம் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு

  பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாடப்புத்தகங்கள் கிடைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு 9–ம் வகுப்பு மாணவர்களுக்கும் முப்பருவமுறையில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இலவச பாடப்புத்தகம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்–2 படிக்கும் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கின்ற மாணவ–மாணவிகள் கட்டணம் செலுத்தித்தான் புத்தகங்களை வாங்க முடியும். பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் அச்சகங்கள் மூலமாகவும் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வெளியிடும் பாடப்புத்தகங்களை வாங்கவே மாணவ–மாணவிகளும், பெற்றோரும் விரும்புகிறார்கள்.

5½ லட்சம் புத்தகங்கள் அச்சடிப்பு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 3–ந்தேதி திறக்கப்பட உள்ளன.