இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, October 28, 2012

இலாகா மாற்றியமைக்கப்பட்ட அமைச்சர்கள்

சல்மான்குர்ஷித் -வெளியுறவுத்துறை.

வீரப்ப ‌மொய்லி- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.

பவன்குமார்பன்சல்: ரயில்வே.

‌ஜெய்பால் ரெட்டி- அறிவியல்,
தொழில் நுட்பம்.

ஆர்.பி.என்.சிங்- .உள்துறை (இணை அமைச்சர் )
இ.அகமது - வெளியுறவு (இணை அமைச்சர் )
புரந்தேஷ்வரி -வர்த்தகம் ஜிதின்பிரசாத்- ராணுவம் மற்றும் மனிதவள மேம்பாடு .

கே.சி. வேனுகோபால் - உள்நாட்டு விமான போக்குவரத்து (இணை அமைச்சர் )
ராஜிவ் சுக்லா ( பார்லிமென்ட் விவகாரத்துறை )
ஜோதிராத்தியா சிந்தியா - மின்சாரம்.கே.எச். முனியப்பா - சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்.
பி.எம். சோலன்கி -கம்பெனிகள் விவகாரம்.
ஜிதிதேந்திரா சிங் - இளைஞர் விவகாரம்- விளையாட்டு.

புதிய அமைச்சரவையில் பதவியேற்றவர்கள் விவரம் வருமாறு:

கேபினட் அமைச்சர்கள்:

1) ரஹ்மான்கான் (சிறுபான்மையினர் விவகாரம் )

2) தின்ஷாபட்டேல் (சுரங்கத்துறை )
3) அஜெய்மக்கான், (வீட்டுவசதி, ஊரக வறுமை ஒழிப்பு

) 4) பல்லம் ராஜூ, ( மனித வள மேம்பாட்டுத்துறை

5) அஸ்வினிகுமார் (சட்டம், நீதி )

6) ஹரீஷ்ராவத் (நீர்வளத்துறை )

7) சந்திரேஷ்குமாரி கடோஜ் (கலாச்சாரத்துறை )

தனிப்பொறுப்பு

1) மணீஷ்திவாரி (தகவல் ஒளிபரப்புத்துறை

2) சிரஞ்சீவி (சுற்றுலாத்துற )

இணை அமைச்சர்கள்:

1) சசி தரூர் (மனித வள மேம்பாட்டுத்துறை ).

2) கோடி குனில் சுரேஷ (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை

3) தாரிக் அன்வர் (வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை )

4) ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி (ரயில்வே )

5) ராணி நாரா (பழங்குடியினர் நலம்

6) அதிர் ரஞ்சன் செளத்ரி (ரயில்வே )

7) அபு- கசிம்கான் ‌சவுத்ரி (சுகாதாரம், குடும்ப நலத்துறை )

8) சர்வே சத்யநாராயணா (நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து

9) நினாங் எரிங், (சிறுபான்மையினர் நலம் )

10) தீபாதாஸ் முன்ஷி (ஊரக மேம்பாட்டுத்துறை

11) போரிகா பல்ராம் நாயக் (சமூக நீதி

12) கிருபாராணி கில்லி (தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை )

13) லால்சந்த் கட்டாரியா(ராணுவம்

புதிய மத்திய அமைச்சர்கள் விபரம

புதிதாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் விபரம் பின் வருமாறு :

கேபினட் அமைச்சர்கள்:

ரஹ்மான் கான், தின்ஷா பட்டேல், அஜய் மக்கான், பல்லம் ராஜூ, அஸ்வினி குமார், ஹரிஷ் ராவத், சந்திரேஷ்குமாரி கட்டோஜ்.

தனிப்பொறுப்பு: மனிஷ் திவாரி, சிரஞ்சீவி,சசி தரூர், சுரேஷ், தாரிக் அன்வர், ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி, ராணி நாரா, அதிர் ரஞ்சன் சவுத்ரி, அபுகசிம்கான் ‌சவுத்ரி,சர்வே சத்யநாராயணா, நினாங் எரிங், தீபாதாஸ் முன்ஷி, போரிகா பல்ராம் நாயக் , கிருபாராணி கில்லி, லால்சந்த் கட்டாரியா.

Saturday, October 27, 2012

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று நிறைவு 31 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்றுடன் முடிகிறது.அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.

இந்த வரைவு பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அக்டோபர் 7, 14, 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சிறப்பு முகாம் இன்றுடன் முடிகிறது.சிறப்பு முகாம் முடிந்தாலும் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தலுக்கான படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த ஆவணத்துடன் அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குசாவடி மையங்களில் வரும் 31ம் தேதி வரை வழங்கலாம்.

அதன்பின், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்துவார்கள். பின்னர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருவாய் திறன் உதவித்தொகை தேர்வு:விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் டிச.,30 ல் நடக்க இருக்கும் தேசிய வருவாய் திறன் உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில் (www.dge.tn.nic.in) பதவியிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவ.,9 க்குள், தலைமை ஆசிரியர்களிடம் தேர்வு கட்டணம் ரூ.50 செலுத்தி, பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2011-12 கல்வியாண்டில், 7 ம் வகுப்பு தேர்வில், எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீதம், பிற மாணவர்கள் 55 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் உதவித்தொகை மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தற்போது, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். பூர்த்தி செய்து வாங்கிய விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நவ.,12 க்குள், முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

TNPTF-செயர்குழு தீர்மானம்

Friday, October 26, 2012

ப்ளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணி நேற்று துவக்கம

ப்ளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி, நாமக்கல்லில் துவங்கியது. அக்டோபர் மாதம், ப்ளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாத்தில், நேற்று துவங்கியது.

அக்டோபர், 30ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 212 ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். 29ம் தேதி, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று, விடைத்தாள் மதீப்பீடு பணியை மேற்கொள்கின்றனர். இப்பணிகளை, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் ஆய்வு செய்தார். அப்போது, "விடைத்தாள்களுக்கு சரியான மதிப்பீடு வழங்க வேண்டும் என்றும், தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தினார்.தனித்தேர்வர்களின் விடைத்தாள் மதிப்பீடு பணி நடப்பதால், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டி.இ.டி., தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

டி.இ.டி. மறு தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி.இ.டி., மறு தேர்வு கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். கடந்த ஜுலை மாதம் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், சமீபத்தில் நடந்த மறுதேர்வு முடிவு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜுலையில் நடந்த தேர்வைவிட, இந்த தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாலும், வினாத்தாள் எளிதாக இருந்ததாலும் தேர்ச்சி சதவீதம் நன்றாக இருக்கும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி.இ.டி., முதல் தாளில் தேறிய 1,716 பேருக்கு மீண்டும் "சி.வி.,'

  ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716 பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு, இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு (சி.வி.,) நடக்கிறது. டி.ஆர்.பி., அறிவிப்பு:

டி.இ.டி., முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம் தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை, சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும், "ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வுக்கான புதிய விதிமுறையின்படி, டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண்கள், "வெயிட்டேஜ்' அடிப்படையில், 60 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் அடிப்படையில், 40 மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, 100 மதிப்பெண்களுக்கு, தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். அதன்படி, இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பிற்கு, 25 மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 என, 100 மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

இதனால், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில், 1,716 பேர் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஊர்ஜிதப்படுத்தவும், சான்றிதழ் நகல்களை பெறவும், இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் வருமாறு, டி.ஆர்.பி., அழைப்பு விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என, தெரிகிறது.

Group II Hall ticket.Exam on 4.11.12

பணி இலக்கு (job chart)அறிக்கையை ஒவ்வொருமாதமும் 5ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்

பணி இலக்கு (job chart)அறிக்கையை ஒவ்வொருமாதமும் 5ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்

Thursday, October 25, 2012

புதிய விதிமுறைபடி எம்.பி.பி.எஸ்., தேர்வு முடிவுகள்-Dinamalar news

  ""புதிய விதிமுறைபடி, எம்.பி.பி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதன்படி, எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒரு பாடத்தில் உள்ள, தலா இரண்டு தாள்களை சேர்த்து, குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என்ற நடைமுறைக்கு பதிலாக, எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளில், தனித்தனியாக, 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என, மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தை எதிர்த்து, இந்த ஆண்டும், மருத்துவ மாணவர்கள், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய விதிமுறையின்படி, எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படும் என, தெரிகிறது. இதுகுறித்து, இப்பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "தேர்வு விதிமுறைகளை மாற்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் உள்ளது. எனவே, மருத்துவ மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த ஆண்டும், புதிய விதிமுறைபடி, எம்.பி.பி.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,' என்றார்.

அரசு ஊழியருக்கு "லேப்டாப்': பி.எஸ்.என்.எல்., சலுகை

:பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல் 12.5 சதவீத தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது.இவை மூன்று மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. "டிஇசட் 100' -ரூ.10,999, "டிஇசட் 200' -ரூ.6499, "டிஇசட் 300' -ரூ.3999 என்ற விலையில் கிடைக்கிறது.

முதல் கட்டமாக டெராகாம் நிறுவன "டிஇசட் 200' மாடல்கள், பி.எஸ்.என்.எல்., முகவர் மூலம் விற்கப்படுகின்றன. இதனுடன், "3 ஜி டேட்டா கார்டு' -ரூ.2100, "கீ பேடு' -ரூ.800, "சிம்கார்டு' -150 என மொத்தம், ரூ.9,549 க்கு விற்கப்படுகிறது.அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 12.5 சதவீத தள்ளுபடியிலும் இவை வழங்கப்படுகின்றன. இச்சலுகை அக்., 31 ம் தேதி வரை உள்ளது. பொதுமக்கள், தள்ளுபடி இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசாவும் டீசல் 18 பைசாவும் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.0.30ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 0.18 ம் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரித்துக் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த விலை ஏற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, டீலர்கள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.49ம், டீசல் லிட்டருக்கு ரூ. 0.91ம் பெற்றுவருகிறார்கள்.

பெட்ரோல் விலை தில்லியில் வரிகள் நீங்கலாக லிட்டருக்கு (அண்மையில் 56 பைசா குறைக்கப்பட்ட பின்னர்) ரூ.67.90 ஆக உள்ளது. இது மும்பையில் 71 பைசா குறைக்கப்பட்ட நிலையில் லிட்டருக்கு ரூ.74.43 ஆகவும், கொல்கத்தாவில் 70 பைசா குறைக்கப்பட்ட நிலையில் லிட்டருக்கு ரூ.75.44 ஆகவும், சென்னையில் ரூ.71.48 ஆகவும் உள்ளது.

மீண்டும் உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்த பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 30 காசும், டீசல் விலை லிட்டருக்கு 18 காசும் உயர்கிறது. பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன் தொகை உயர்வதையடுத்து, பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 24, 2012

ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்.,சில் பதிய திட்டம் -Dinamalar news

திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு செய்யும் திட்டம், அடுத்தாண்டு துவக்கத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், பணிக்கு தாமதமாக வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் இருந்தும் தேர்ச்சி சதவீதம் குறையும்போது உண்மை நிலை குறித்து தெரிந்து கொள்ள முடியாமல் கல்வித்துறை தவிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் பதியும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வித்துறையினர் கூறியதாவது:

பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து உதவி தொடக்க கல்வி அலுவலருக்கும், அவரிடம் இருந்து தொடக்க கல்வி அலுவலருக்கும், பணிக்கு வந்துள்ள ஆசிரியர் விவரங்கள் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படும். அதை முதன்மை கல்வி அலுவலர், உயரதிகாரிகளுக்கு அனுப்புவார். சென்னையில் இருந்து கல்வித்துறை இயக்குனர், அவ்வப்போது ஆய்வு செய்வார். இத்திட்டம், கடலூர், தர்மபுரி மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றனர்.முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது,

""பல்வேறு பணிகளுக்காக மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர் விபரம் சேகரிப்பது வழக்கம். இம் முறை, எஸ்.எம்.எஸ்., திட்டத்துக்காக ஆசிரியர்கள் பெயர், முகவரி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. திட்டம் அமலாகும் முன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். அடுத்தாண்டு துவக்கத்தில், திருப்பூர் மாவட்டத்தில் அமலாகும் என தெரிகிறது,'' என்றார்.

2,895 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரத்து

ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, புதிய பட்டியலை தயாரிக்க, 30, 31 தேதிகளில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துகிறது. பள்ளிக் கல்வித் துறையில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, ஜூலை, 27ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதில், 1.5 லட்சம் பேர் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், சமீபத்தில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.
இதற்கிடையே, தேர்வில், 20க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் குறித்து, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. டி.ஆர்.பி., வெளியிட்ட விடை மட்டுமில்லாமல், வேறு விடைகளும், குறிப்பிட்ட கேள்விகளுக்கு பொருந்துவதாக கூறி, அதற்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என, மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கில், தேர்வுப் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், முதலில் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, டி.ஆர்.பி., 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ரத்து செய்துள்ளது. புதிய பட்டியலை தயாரிப்பதற்காக, 30, 31 தேதிகளில், 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

இதற்கு அழைக்கப்பட்டவர்களின் விவரங்கள், தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: ஒரு இடத்திற்கு, இரண்டு பேர் வீதம், 6,282 பேர், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் வருகின்றனர். இவர்களில், 3,063 பேர், ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டுள்ளனர். எனவே, அவர்கள், 30, 31ல் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க தேவையில்லை. பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ள, 3,219 பேர் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும். நவ., 10 தேதிக்குள், புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். தேர்வில், 23 கேள்விகளுக்கு, இரு விடைகள் சரியாக பொருந்துகின்றன. இதற்கு தகுந்தார்போல், விடைகளை மதிப்பீடு செய்து, புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் வெளியான, தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றவர்களில், எத்தனை பேர், அடுத்து வெளியாகும் புதிய பட்டியலில் இடம் பிடிப்பர் என, தெரியவில்லை.

இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "முதலில் தேர்வானவர்களில், பெரிய அள விற்கு எவ்வித பாதிப்பும் வராது' என, தெரிவித்தன. 3,219 பேர், புதிதாக, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக் கப்பட்டிருப்பதன் மூலம், முதலில் வெளியான தேர்வுப் பட்டியல், அப்படியே வர வாய்ப்பில்லை.

தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பளம் உயர்வு

எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகத்தின் கீழ், பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு, 15 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், 5,000 ஊழியர், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும், 1,500 ஊழியர்களுக்கு, 15 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள, 3,500 ஊழியர், பணியில் சேர்ந்து, சில ஆண்டுகளே ஆவதால், அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப் படவில்லை. 1,500 பேருக்கு, சம்பள உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கக பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் கபிலன், நன்றி தெரிவித்துள்ளார்.

தொகுப்பூதிய ஊழியர்களை, பணிவரன் முறை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசெயற்குழு கூட்டம்

நாமக்கல்லில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில பொருளாளர் மோசஸ் வரவு, செலவு கணக்குளை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வராசன் பேசினார்.

கூட்டததில், ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைந்து, மூன்று நபர் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர், 7ம் தேதி, மாநிலம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில துணைத் தலைவர் மலர்விழி, சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் மணிமேகலை, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நவ.,4ல் மீண்டும் குரூப் 2 தேர்வ

   தமிழகத்தில், காலியாகவுள்ள நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3, 631 பணியிடங்களுக்கு, குரூப் 2 தேர்வு, கடந்த ஆக., 12ல் நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்விற்கான வினாத்தாள் ஈரோட்டில் ஒரு தேர்வு மையத்தில் வெளியானது. வினாத்தாள் வெளியானதால், இத்தேர்வினை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.மீண்டும் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., இத்தேர்விற்கென, புதிதாக வினாத்தாள் தயாரித்துள்ளது.

இந்த வினாத்தாளின் படி, மீண்டும், நவ.,4ல் தேர்வு நடக்கும் என அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, செய்யுமாறு, கலெக்டர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வினாத்தாள் "அவுட்' ஆனதால், மீண்டும் அதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 6.40 லட்சம் பேருக்கு மட்டும், தேர்வு நவ., 4ல் நடக்கிறது. இதில், புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதகூடாது. ஆக., 12ல் நடந்த தேர்விற்கு இணையதளத்தில் "டவுன்லோடு' செய்த, ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை எழுதலாம், என்றார்

ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 2.1 லட்சம் பணியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் இன்னும் நிரப்பப்படாமல் 2.1 லட்சம் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. ஓட்டுநர், ரயில்வே நிலைய அதிகாரி, கார்ட், தொழில்நுட்ப கண்காணிப்பாளர், சமிக்ஞை ஆய்வாளர், பராமரிப்பு பணியாளர் உட்பட 90,0000 ரயில்வே பாதுகாப்பு பணியிடங்கள் உட்பட 2 லட்சத்து 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 2 லட்சத்து 60 ஆயிரமாக இருந்த காலிப் பணியிடம் தற்போது 2 லட்சத்து 10 ஆயிரமாக குறைந்துள்ளது என்று கூறியுள்ள மூத்த ரயில்வே அதிகாரி, இது அடுத்த ஆறு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் பாதுகாப்பான முறையில் பணியாளர்கள் நியமனம் நடைபெறுவதால், நியமன நடவடிக்கை சற்று தாமதமாகிறது என்றும் அவர் கூறுகிறார்.