Friday, November 08, 2019
Wednesday, November 06, 2019
அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்து செய்யப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அமலில் இருந்த மூன்று பருவக் கல்வி முறையை ரத்து செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2012-ல் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டில் இருந்தும் 9, 10-ம் வகுப்புகளுக்கு 2013-14 ஆம் கல்வியாண்டில் இருந்தும் முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு 2019- 20 ஆம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும்,தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின.
இதற்கிடையே 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை அண்மையில் அறிவித்தது. இதற்கிடையே 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறையில், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாகப் பாட நூல்கள் வழங்கப்பட்டு வந்தன. நடப்புக் கல்வியாண்டு முதல் அவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே பாட நூலாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டிலேயே பொதுத்தேர்வு நடைபெறுவதால், அவர்களின் பாட நூல்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், 2020- 21 ஆம் கல்வியாண்டு முதல் 8-ம் வகுப்புப் பாட நூல்களை ஒன்றாக இணைத்து, ஒரே பாடநூலாக வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தொடர் இயக்கங்கள் மற்றும் தமிழக அரசின் முன்முயற்சிகள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 28.08.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டது 04.09.2019ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றலாம் எனவும் அறிவித்திருந்தது.
ஆனால் 03.09.2019 அன்று, விண்ணப்பப் பதிவேற்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விண்ணப்ப தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவே ஒத்திவைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 4.10.2019-ல் புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2019 என தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்புக்கு கோரிக்கை வந்துகொண்டிருப்பதால் TRB - பேராசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 வரை காலநீட்டிப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Tuesday, November 05, 2019
பள்ளிகள் உள்கட்டமைப்புக்கு நிதி திரட்ட தனி இணையதளம்
Sunday, November 03, 2019
கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் ஆய்வு: 5-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு
Friday, November 01, 2019
ஆசிரியா் தகுதித்தோ்வு:மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு
Thursday, October 31, 2019
5, 8ம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை
Wednesday, October 30, 2019
Tuesday, October 29, 2019
Saturday, October 26, 2019
பள்ளி மாணவர்களுக்கு டெங்குவை தடுக்க இயக்குனரகம் உத்தரவு
Friday, October 25, 2019
ஆதார் பதிவு முகாம் பள்ளிகளில் ஏற்பாடு
Thursday, October 24, 2019
Tuesday, October 22, 2019
மாணவர்களின் வருகை பதிவுக்கு புது செயலி
Monday, October 21, 2019
குரூப் 2: முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் திங்கள்கிழமை வெளியிட்டார்.
முதனிலைத்தேர்வு: முதனிலைத்தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. தமிழகத்தின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழுள்ள அலகுகள் -8, 9 ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
மாத இறுதியில் வெளியீடு: தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இந்த மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.
முதன்மை எழுத்துத் தேர்வு: முந்தைய மாற்றத்தின்படி, முதன்மைத் தேர்வானது ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ (டஹழ்ற்-அ) மட்டும் தனித்தாளாக, தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
அதாவது தமிழில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு செய்யும் பகுதியானது 100 அதிகபட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இந்தத் தேர்வில் தகுதிபெற 25 மதிப்பெண்கள் அவசியம் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே இரண்டாவது தாள் மதிப்பீடு செய்யப்படும். தகுதித் தேர்வு தரம் மாற்றம்: தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப் படிப்பிலிருந்து பத்தாம் வகுப்பு தரத்துக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பகுதியைத் தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் இரண்டாவது தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.
முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது இப்போது 300 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முதனிலைத் தேர்விலும் முதன்மை எழுத்துத் தேர்விலும் வெற்றிபெற வேண்டுமாயின் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.
குரூப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் ஏன்? குருப் 2 தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்ட விளக்கம்: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் தேர்வாணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே, தீவிரமாக விவாதித்து குரூப் 2 தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, அரசுத்துறைகளின் தேவைகளையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டன. பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Saturday, October 19, 2019
மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம்: அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க மத்திய அரசு உத்தரவு
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த, மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடா்பாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த மாணவா்களுக்கான காய்கறித் தோட்டங்களை உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் முறையான பயிற்சி ஆகியவை வழங்கப்படும். இதற்கு, ‘கிரிஷி விக்யான் கேந்திரா’ (அறிவியல் தோட்ட மையம்), தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து மையம், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத்துறையின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.
தோட்டத்துக்கான எல்லைச் சுவரை அமைப்பது, நிலத்தைச் சமப்படுத்துவது ஆகியவற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள்கள் வேலை) தொழிலாளா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும் காய்கறித் தோட்டத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, October 17, 2019
பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும், அதே வேளையில் அவா்கள் விரும்பினால் வசிப்பிடங்களுக்கு அருகில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட கல்வி இணைச்செயல்பாடு பாடப்பிரிவுகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.இவா்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், இரண்டாவது முறையாக 2017-ஆம் ஆண்டு ரூ.700-உம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டன. இதன்படி தற்போது ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியமாக பெற்று வருகின்றனா். கடந்த 8 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஊதிய உயா்வு வழங்கப்பட்டது.
தொகுப்பூதியம் குறைவு, பணி நிரந்தரம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பகுதிநேர ஆசிரியா்களின் எண்ணிக்கை 11,500 ஆகக் குறைந்துள்ளது.இருப்பினும் ஏழாவது ஊதியக்குழு அரசாணையின்படி 30 சதவீத ஊதிய உயா்வு, அரசு ஊழியா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் வழங்கப்படுவதைப்போல பண்டிகை போனஸ், பணியின்போது இறந்தவா்களுக்கு இழப்பீடு, பணி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்கள், மே மாத ஊதியம், பகுதிநேர பெண் ஆசிரியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக பகுதிநேர ஆசிரியா்களின் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்: ஆசிரியா்களுக்கு உத்தரவு
ஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் எளிதாக பாடங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வழியாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கணித, அறிவியல், ஆங்கில உபகரணப் பெட்டிகள், புத்தகங்கள், அகராதிகள், மடிக்கணினி, விளையாட்டு பொருள்கள், பயிற்சி கையேடுகள் உள்பட பல்வேறு வகையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம் துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது வகுப்பறைகளில் இத்தகைய உபகரணங்கள் பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர, பொதுமக்களின் பங்களிப்பில் பெறப்படும் தளவாடப் பொருட்கள் மற்றும் கல்விச்சீா் மூலம் கிடைக்கும் உபகரணங்கள் பள்ளிகளில் சரிவர பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி பாடம் கற்பித்தால்தான் மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும். மேலும், தேசிய அடைவுத் தோ்வுகளை எளிதில் எதிா்கொள்ள உதவியாக இருக்கும். எனவே, ஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். இவற்றை மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியா் பயிற்றுநா்கள், குறுவள மைய ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியா்கள் அவ்வப்போது கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.