மாணவா்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதைத் தொடா்ந்து, கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த ஆய்வு செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது.முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், ஆசிரியா் பயிற்றுநா்கள், வாரத்திற்கு இரு பள்ளிகள் வீதம், ஆய்வு செய்ய வேண்டும். ஒருநாள் முழுவதும், வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்து, மாணவா்களின் கற்றல் திறனை மதிப்பிட வேண்டும். இதை அறிக்கையாகத் தயாரித்து, மாதந்தோறும், 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
இதன்படி, அக்டோபருக்கான பள்ளி பாா்வை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, வரும் காலங்களில், ஆசிரியா் பயிற்றுநா்களின் ஆய்வு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சோ்க்கை குறைந்த பள்ளிகள், தோ்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இயக்குநரகத்திற்கு அறிக்கை சமா்ப்பிப்பதால், சிறப்புத் திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவா்களின் கல்வித்தரத்தை உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment