இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 06, 2017

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை வெளியீடு; 'ரெப்போ' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை


நடப்பு, 2017 - 18ம் நிதியாண்டின், முதல் நிதிக் கொள்கையை, ரிசர்வ் வங்கி நேற்று(ஏப்.,6) வெளியிட்டது. அதில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வங்கிகள் பெறும் கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம், மாற்றமின்றி, 6.25 சதவீதமாக தொடரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதத்தில் இருந்து, 7.4 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜூலை - ஆக., மாதங்களில், 'எல்நினோ' தாக்கத்தால், தென்மேற்கு பருவமழை குறைந்து, உணவு பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என, உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், புதிய, ஜி.எஸ்.டி., வரி, ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையால், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் அடிப்படையில், நிதிக் கொள்கை வெளியிடப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

3 மாத சலுகையை திரும்ப பெற ஜியோ-வுக்கு டிராய் அறிவுறுத்தல்


மூன்று மாத சலுகையை திரும்ப பெற ஜியோ-வுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் அதனை ஏற்றுக்கொண்டு டிராய் அறிவுறுத்திய படி அச்சலுகை திரும்ப பெறப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தற்போது பொது சேமநலநிதியாக மாற்றம்.... இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்...

Click below

http://www.agae.tn.nic.in/onlinegpf/

வெயிட்டேஜ் முறையில் மாற்றம் இருக்காது : அமைச்சர் செங்கோட்டையன்


ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வி குறித்த தகவலை வழங்க புதிய இணையதளத்தை தொடங்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

Wednesday, April 05, 2017

*_TNPTF NEWS :_* தொடக்கக் கல்வி - செயல் திட்ட வழிக் கற்றல் மூலமாக நடு நிலைப் பள்ளிகளில் கற்றல் திறனை வலுபடுத்துவதற்காக சார்ந்த வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது -நாள் 28/03/2017


இன்ஜினியரிங் கவுன்சிலிங் அறிவிப்பு 10 நாளில் வெளியாகும்


தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சலிங் நடைபெறும் தேதிகள் தொடர்பான அறிவிப்பு 10 நாளில் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்காக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்கிறார்கள். பொறியியல் கவுன்சலிங் 2017ல் பங்கேற்கும் கல்லூரிகள் பட்டியல், கவுன்சிலிங் தேதிகள் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பதை சமர்பிப்பதற்கு ஜூன் 4ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண், ஜூன் 22ம் தேதி மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து ஜூன் 24ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், 27ம் தேதி பொதுப்பிரிவினருக்கும் கவுன்சலிங் தொடங்கியது. இந்த ஆண்டும் அதே தேதிகளில் கவுன்சலிங் நடைபெற வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெயில் தாக்கம்: பள்ளிகளுக்கு முன்கூட்டியே லீவு


கோடை வெயிலின் உச்சத்தால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது. சமச்சீர் கல்வியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தம் நடந்து வருகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கும், தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற மாணவர்களுக்கு, ஏப்., 29 வரை தேர்வு நடத்தி, அதன்பின், விடுமுறை அறிவிக்க, திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டம் : ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், முன்கூட்டியே கோடை விடுமுறை விட, தனியார் பள்ளிகள் திட்டமிட்டன. பல பள்ளி வளாகங்களில், 'வர்தா' புயலால், மரங்கள் விழுந்து, நிழல் இல்லாமல், வெட்ட வெளியாக காணப்படுகின்றன. இதனால், வகுப்பறைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது. அதேபோல், பெரும்பாலான மாவட்டங் களில், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதையும் சமாளிக்க முடியாமல், பள்ளி நிர்வாகங்கள் அவதிப்படுகின்றன. இந்த காரணங்களை பள்ளிகள் முன் வைத்ததால், கோடை விடுமுறையை முன்கூட்டியே விட,கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

தேர்வுகள் : எனவே, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், ஏப்., 14க்குள் விடுமுறையை அறிவிக்க முடிவு செய்து, தேர்வுகளை விரைவுபடுத்தியுள்ளன. பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று முன் தினம் தேர்வுகள் துவங்கின. ஏப்., 21ல், தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படுகிறது. தொடக்க பள்ளிகள் தவிப்பு : தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். இதனால், ஏப்., 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில்,

''கோடை வெயிலை கருதி, தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் சிறார்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை விட, அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த பள்ளிகள், பெரும்பாலும் கிராமங்களில் இருப்பதால், மாணவர்கள் கோடை வெயிலில், நீண்ட துாரம் வந்து செல்வது தவிர்க்கப்படும்,'' என்றார்.

விளையாட்டு போட்டிகளுக்கு 3 மாதம் கெடு : ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி


பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளை, மூன்று மாதத்தில் முடிக்க, கல்வித்துறை கெடு விதித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு, விளையாட்டு மேம்பாட்டிற்காக, ஆண்டுக்கு, 90 கோடி ரூபாய்க்கும் மேல், நிதி ஒதுக்குகிறது. பள்ளி மாணவர்களின் விளையாட்டுக்கு மட்டும், 20 கோடி கிடைக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு, ஜூன் துவங்கி, டிசம்பர் வரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். வரும் கல்வியாண்டில், விளையாட்டு போட்டிகளை, ஆக., மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, உடற்கல்வி இயக்குனர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. இருக்கும் ஆசிரியர்களை, 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்'களாகவும், அலுவலக பணிகளை செய்வோராகவும், தலைமை ஆசிரியர்கள் மாற்றி விடுகின்றனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில், கூடுதல் நேரம் ஒதுக்கி, பயிற்சி அளித்து, அவர்களை போட்டிக்கு தயார் செய்கிறோம். பல நேரங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானங்கள், பள்ளி மாணவர்களின் பயிற்சிக்கு கிடைப்பது இல்லை. அப்படியும், மண்டலம் முதல், மாநிலம் வரையில், பல கட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறோம்.

பள்ளி துவங்கிய, மூன்று மாதத்திற்குள் அனைத்து போட்டிகளை முடிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்குள், மாநில போட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது எப்படி; ஆசிரியர் காலியாக உள்ள இடங்களில் பயிற்சி கொடுப்பது யார்; மைதானங்கள் கிடைக்காத பிரச்னைக்கு முடிவு என்ன என்றெல்லாம், கல்வி அதிகாரிகள் யோசிக்கவில்லை. போட்டிகளுக்கு பின், பரிசு கொடுக்கும் விழாவுக்கு, 'பந்தாவாக' வரும் அதிகாரிகள், மைதானத்தில் பயிற்சி அளிக்கும் போது வந்தால், மாணவர்கள், ஆசிரியர்களின் நடைமுறை சிக்கல்கள் தெரியும். இதை மனதில் கொண்டு, போட்டிக்களுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி


பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின், கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தை அரசு நீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இரு ஆண்டுகளுக்கு முன், தொடர் போராட்டம் நடத்தினர்.

2016, சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,19ல், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அமைக்கப்பட்டு, ஓர் ஆண்டை தாண்டிய நிலையில், இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குழுவின் ஆயுட்காலம் முடிவதும், பின், ஆயுள் காலத்தை நீட்டிப்பதும் வழக்கமாக உள்ளது. வழக்கம் போல், டிச.,25ல், குழுவின் ஆயுட் காலம் முடிந்தும், நீட்டிக்கப்படவில்லை.

இது குறித்து, செய்தி வெளியானதும், குழுவின் ஆயுட்காலத்தை, மூன்று மாதங்கள் நீட்டித்து, மார்ச், 7ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அவகாசமும் முடிந்து, 11 நாட்கள் ஆகிறது. இன்னும், நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை; குழுவின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. அதனால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு தொடருமா அல்லது அப்படியே கிடப்புக்கு போகுமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.

விடிவு கிடைக்குமா?

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 2003 முதல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலானது. இதில், 4.55 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களில், ஓய்வு பெற்றோர், இறந்தோர், 6,000 பேர். அவர்களுக்கு இன்னும் பணப்பலன் கிடைக்கவில்லை

* திட்டம் அமலான பின், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பங்களிப்பு தொகை வசூலிக்கப்பட்டது. அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.

வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?


வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.

‘ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம் என்று கூறியுள்ளது. ‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில் வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாக கருதப்பட்டு, ‘ஆதார்’ எண் பெற தகுதி உடையவர்கள் என்று ஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இவர்களுக்கு மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , விளையாட்டு விடுதியில் 7,8,9,11 ஆகிய வகுப்புகளில் சேர , விண்ணப்பம் சென்று சேர வேண்டிய இறுதி நாள் 20/4/17





Tuesday, April 04, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மூலம் ரூ.33½ கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்கு கிடைத்தது


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6–ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த மாதம் 23–ந் தேதி கடைசி நாள் ஆகும். பிளஸ்–2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேரும், பி.எட் படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ரூ.33½ கோடி வருமானம் தற்போது மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. பரிசீலனைக்கு பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிச்சீட்டு தயாரித்து இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எத்தனை தேர்வு மையங்களை அமைப்பது என்றும் தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவத்துடன் தேர்வு கட்டணமாக ரூ.500–ஐ வரைவோலையாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ரூ.250–ஐ வரைவோலையாக அனுப்ப சலுகை வழங்கப்பட்டது. மொத்த விண்ணப்பதாரர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆவர். இவர்கள் மூலம் ரூ.3½ கோடி வருமானம் கிடைத்தது. இவர்களை தவிர 6 லட்சத்து 257 பேரின் விண்ணப்பம் மூலம் ரூ.30 கோடியே 1 லட்சத்து 28 ஆயிரத்து 500 வருமானமாக கிடைத்தது. மொத்தத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.33½ கோடி வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை:கால்நடை மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி


கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது என்றும், பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை

கால்நடை மருத்துவ படிப்பில் சேர வழக்கம் போல பிளஸ்–2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கால்நடை மருத்துவம் மற்றும் உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேர 380 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல கலந்தாய்வு மூலம் நடைபெறும்.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பி பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப முறை முழுக்க முழுக்க ஆன்லைன் கிடையாது. இந்த படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது. வழக்கம் போல பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தரவரிசை பட்டியல்

மேலும் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த ஆய்வில் 1007 என்ஜினீயரிங் கல்லூரிகள், 542 மேலாண்மை கல்லூரிகள், 535 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 316 மருந்தியல் கல்வி நிறுவனங்கள், 200 பல்கலைக்கழகங்கள் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 600 கல்வி நிறுவனங்கள் பங்கு பெற்றன.

பல்கலைக்கழகங்களுக்கான மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 38–வது இடத்தை பெற்றது. ஆனால் மாநில அளவில் 4–வது இடத்தை பிடித்தது. மேலும் கல்வி மற்றும் கல்வி கற்றலுக்கான சூழல்களை வழங்கிடும் விதத்தில் தேசிய அளவில் 6–வது இடத்தையும், மாநில அளவில் 2–வது இடத்தையும் பிடித்து இருக்கிறது.

முதல் இடம்

இந்தியாவில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்கள் 14 உள்ளன. அந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது.

இவ்வாறு துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் இனி பெண்கள் 'ராஜ்யம்'


பெரும்பாலான 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம்பெற்றுள்ளனர். மேலும் பெயர், முகவரி என, அனைத்திலும் குளறுபடியாக உள்ளது.இதில் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்து 'ஸ்மார்ட்' கார்டு ஏப்., 1 முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான 'ஸ்மார்ட்' கார்டுகளில் கணவர் இருந்தும் மனைவிகளே குடும்பத் தலைவராக இடம் பெற்றுள்ளனர்.

மேலும் ஆதாரில் உள்ள விபரங்களே பதியப்பட்டுள்ளதால், பல குளறுபடிகளும் அரங்கேறியுள்ளன. குடும்பத் தலைவராக இடம்பெற்ற பெண்களுக்கு அவரது தந்தை ஊரின் முகவரியே உள்ளது. இதனால் பலரது கார்டுகளில் பெயர், மாவட்டம், தாலுகாக்கள் மாறியுள்ளன. ஏராளமான எழுத்து பிழைகளும் உள்ளன. இதுகுறித்து கேட்ட கார்டுதாரர்களிடம் வழக்கம்போல் 'எங்களுக்கு ஒன்றும் தெரியாது,' என கூலாக, வழங்கல்துறை அலுவலர்கள் பதிலளித்து வருகின்றனர். கார்டுதாரர்கள் கூறுகையில், ' கணவர் வெளிநாட்டில் இருந்தால் (அ) இறந்தால் தான் குடும்பத் தலைவராக மனைவி இடம் பெறுவர். ஆனால் கணவர் ஊரில் இருந்தும் 'ஸ்மார்ட்' கார்டில் குடும்பத் தலைவராக பெண்கள் புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர்,' என்றனர். வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' கார்டுகள் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டதால் ஏராளமான தவறுகள் உள்ளன.

ரேஷன்கார்டுகள் வழங்கும் பணி முழுவதும் கணினிமயமாகி விட்டது. இதனால் நாங்கள் திருத்தம் செய்ய முடியாது. 'ஆன்லைன்' மூலம் தான் 'ஸ்மார்ட்' கார்டில் திருத்தம் செய்ய முடியும். விரைவில் அதற்கான உத்தரவு வரும் என, எதிர்பார்க்கிறோம், என்றார்.

லேட்' ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


சில நாட்களுக்கு முன், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுடன், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாடிய, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலர், காலையில் ஏதேனும் ஒரு பள்ளியில் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்; பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர் மீது, '17 ஏ' சட்டத்தின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை நேர பிரார்த்தனை கூட்டங்களில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பங்கேற்றால் மட்டுமே, தாமதமாக வரும் ஆசிரியர்களை அடையாளம் காண முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'நீட்' நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி


மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன்(ஏப்.,5) முடிகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 7ல், நடக்கிறது. இதற்கான, 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 1ல் முடிந்தது. இந்தத் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க, தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. அதனால், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்று(ஏப்.,5) வரை நீட்டிக்கப்பட்டது.

இன்று நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், ஆன் லைன் பதிவுகள் நிறுத்தப்படும். 'தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தால், வரும் கல்வி ஆண்டில், மருத்துவச் சேர்க்கையில் சிக்கலை தவிர்க்கலாம்' என, கல்வியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

TNPTF ஊதியக்குழுவிடம் வைத்த கோரிக்கைகள்

Click below

https://app.box.com/s/q44k6gwhazlt9b4nmhf61yw414cjyk3m

பாரத ஸ்டேட் வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை கட்டணம் உயர்வு : வாடிக்கையாளர்கள் அதிருப்தி


பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம் என்று பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

காசோலைகளை பொறுத்தவரையில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நிதியாண்டில் 50 காசோலைகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படும். 25 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.75 மற்றும் சேவை வரி பெறப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது. 50 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு சேவை வரி நீங்கலாக ரூ.150 கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட சேவைகளை அளிப்பதற்கு ரூ.20 கட்டணமாக பெறப்படும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் புதுக்கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் மாதாந்திர சராசரி இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Monday, April 03, 2017

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி ஒதுக்கீடு


இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவச மற்றும் கட்டயாக கல்வி உரிமை சட்டத்தில் ஒவ்வொரு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.
அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 8–ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கல்வி கட்டணம்

இதற்கான கல்வி கட்டணம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? என்று கேட்டு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி 2015–16–ம் ஆண்டுக்கு தமிழக பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டணம் ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிதியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையும், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடக்க பள்ளிகள் இயக்குனரகமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் வழங்க உள்ளது. மாவட்டம் வாரியாக பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியை வழங்கும்.