இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 08, 2016

8ம் வகுப்பு தேர்வு 'தத்கல்' விண்ணப்ப தேதி அறிவிப்பு


எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல் விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரலில் நடக்க உள்ள, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், மார்ச், 11, 12ல், 'ஆன்லைன்' மூலம் சிறப்பு அனுமதி தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான அரசு சேவை மையங்களின் முகவரி விவரம், தேர்வுத்துறையின், www.tndge.in என்ற, 'ஆன்லைன்' முகவரியில் தரப்பட்டுள்ளது.மார்ச், 12ம் தேதி மாலை, 5:00 மணி வரை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க உத்தரவு


முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரித்து அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியிருப்பதாவது:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மொத்த பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கு கடந்த ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களைக் கொண்ட முன்னுரிமை பட்டியலை தலைமை ஆசிரியர்கள் தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை தயாரித்து இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் அந்த பள்ளியில் இல்லாவிட்டால் அதற்கான அறிக்கை தர வேண்டும்.

தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விடுபட்டால் அதற்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது பள்ளிக்கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும் என, கூறப்பட்டுள்ளது.-

Monday, March 07, 2016

746 மெட்ரிக் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது:தமிழக அரசு


விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு  பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக  2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன.

இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரமில்லாத அனைத்துப் பள்ளிகளையும் 2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வலியுறுத்தி ``மாற்றம் இந்தியா'' அமைப்பின் இயக்குநர் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விவாதத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில், "746 பள்ளிகளிலும் படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே தாற்காலிக அங்கீகாரம் நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தொடர்புடைய 746 பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரமானது மேலும் நீட்டிக்கப்படாது என உறுதியளித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Sunday, March 06, 2016

SSLC hall ticket download from today

பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி துவங்குகிறது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இன்று(திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

Saturday, March 05, 2016

யாருக்கு ஓட்டளித்தோம் என காட்டும்இயந்திரம் செயல்படுவது எப்படி


யாருக்கு ஓட்டளித் தோம்' என, காண்பிக்கும், 'வி.வி.பி.ஏ.டி.,' இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி விளக்கம் அளித்தார்.தமிழக சட்டசபை தேர்தலில், 'வோட்டர்ஸ் வெரிபிகேஷன் பேப்பர் ஆடிட் ட்ரெயல்' எனப்படும், 'யாருக்கு ஓட்டளித்தோம்' என, அறியும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்கிறது. முதல் முறையாக, காஞ்சிபுரம் உட்பட 17 சட்டசபை தொகுதிகளில், இம்முறை செயல்பட உள்ளது.

இதற்காக, 'பெல்' நிறுவனம் தயாரித்துள்ள பிரத்யேக இயந்திரங்கள், காஞ்சிபுரம் தொகுதிக்கு வந்துள்ளன. அதாவது, 316 ஓட்டுச் சாவடிகளுக்கும், 397 இயந்திரங்கள் வந்துஉள்ளன. இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து, காஞ்சி புரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி கூறியதாவது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் தங்களின் ஓட்டுகளை பதிவு செய்கின்றனர்; அப்போது, 'வி.வி.பி.ஏ.டி.,' இயந்திரம் அருகிலேயே இருக்கும். வாக்காளர்கள் ஓட்டளித்தவுடன், இயந்திரத்தில் ஓட்டு விவரம் அடங்கிய சீட்டு, பதிவு செய்யப்பட்டு, அந்த இயந்திரத்திலேயே விழும். வாக்காளர்களுக்கு அந்தப் பதிவு செய்யப்பட்ட சீட்டு வழங்கப்படாது.

இயந்திரத்தின் வெளியில் உள்ள சிறிய திரையில், வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளித்தனர் என, காண்பிக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தாலுகா அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கு பி.எப்., வரி விலக்கு?


பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகள் குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிப்பாணை வெளியிட உள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லி.,யில் தாக்கல் செய்த, 2016 - 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழிலாளர்கள், பணி ஓய்வுபெறும் போது, திரும்பப்பெறும், பி.எப்., தொகை மீது வரி விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

அதற்கு, தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, பி.எப்., தொகையில், 60 சதவீதத்துக்கு கிடைக்கும் வட்டி மீது மட்டுமே வரி விதிக்கப்படும் என, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு மூத்த அதிகாரி ஒருவர், கூறியதாவது:பி.எப்., தொகையை திரும்பப் பெறும் போது, வரி விலக்கு பெறக்கூடிய தொழிலாளர் பிரிவுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பாணையை, மத்திய அரசு விரைவில் வெளியிடும். மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், வரிவிலக்கு பெறுவர்.இவ்வாறு அரசு அதிகாரி கூறினார்

Annamalai university exam timetable&application form

Click below

http://annamalaiuniversity.ac.in/dde/exam_timetable.php

பி.எப் நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை


வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லிமென்டில், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கூட்டத்தில் ஜெட்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பி.எப்., வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும், நிதியமைச்சகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், இது தொடர்பான அறிவிப்பை ஜெட்லி பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தலையிட்டின் மூலம், 60 லட்சம் ஊழியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

Friday, March 04, 2016

பிளஸ் 2 தேர்வு எழுத வராதவர்கள் விவரம் இன்டர்நெட்டில் பதிவேற்ற உத்தரவு


தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11ஆயிரத்து 45மாணவர்களும், 12ஆயிரத்து 148 மாணவியரும் என மொத்தம் 23ஆயிரத்து 193பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 66 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வர்களுக்காகவும், கண்காணிப்பு அலுவலர்களுக்காகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இதன்படி விடைத்தாளில் தேர்வர்கள் கடைசியாக எழுதிய வரியின் கீழ் தேர்வுத்துறை சார்பில் ரப்பர் முத்திரை இட வேண்டும்.

தேர்வு முடிந்த பின்பு அறை கண்காணிப்பாளர்கள் விடைத்தாள்களை தாமதமின்றி தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்து வர வேண்டும். தேர்விற்கு பயன்படுத்தப்படும் சுவர் கடிகாரம் நல்லநிலையில் இயங்கக்கூடியதாக இருக்கிறதா என்ற சரிபார்த்து கொள்ள வேண்டும். இதைப்பார்த்துத்தான் பெல்லடிக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் வருகை புரியாதோர் விபரங்களை பிற்பகல் 2 முதல் 5 மணிக்குள் www.tndge.in என்ற இணையத்தில் முதன்மைக் கண்காணிப்பாளரே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதள வசதி இல்லாத இடங்களில் தேர்வு மையத்தின் அருகில் உள்ள கணினி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மாணவர்கள் சில விடைகளை அடிக்க நேர்ந்தால் மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது என்று குறிப்புரையை பேனாவால் எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் கல்வித்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இ - சேவை' மையங்களில் பாட புத்தகங்களை 'ஆர்டர்' செய்யலாம்:வீட்டிற்கே 'டோர் டெலிவரி' செய்ய முடிவு


தமிழக அரசின் பாடநுால் கழக புத்தகங்களை, பெற்றோர், இனி நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டியதில்லை. அரசின், 'இ - சேவை' மையங்களில், புக் செய்தால், மாணவர்களின் வீட்டிற்கே இலவச, 'டோர் டெலிவரி' செய்யும் திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கியுள்ளது. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி பணிகள் கழகத்தின் சார்பில், சமச்சீர் கல்வி புத்தகங்கள், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த புத்தகங்களைத் தான், அரசு பள்ளிகள் முதல், தனியார் மெட்ரிக் பள்ளிகள் வரை, மாணவர்களுக்கு வழங்கி பாடம் நடத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பாட புத்தகங்களை வாங்க, சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை மையம், பள்ளிகளில் உள்ள பாடநுால் வினியோக மையத்தில் காத்து நிற்க வேண்டும். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாடநுால் கழகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெற்றோரை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்க, அருகிலுள்ள இ - சேவை மையங்களுக்கு சென்றால், அங்கு பாடநுால் கழக புத்தக இருப்பு மற்றும் விலை விவரம் வழங்கப்படும்.

அதன்படி, புத்தக இருப்புக்கு ஏற்ப, தேவையான பாட புத்தகங்களை அதற்குரிய பணம் செலுத்தி, 'புக்' செய்யலாம். இந்த பதிவுக்கு, இ - சேவை மையத்தில் ரசீது வழங்கப்படும்; பின், வீட்டு முகவரிக்கே புத்தகம் அனுப்பி வைக்கப்படும். இது குறித்து பாடநுால் கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும், எந்த இ - சேவை மையத்திலும், முன்பதிவு செய்யலாம். பாடநுால் கழகம் நிர்ணயித்த விலையை மட்டுமே கொடுத்து, ரசீது பெற்றுக் கொள்ளலாம். கூரியர் மூலம் இலவச டெலிவரி கிடைக்கும். கூரியருக்கோ, பதிவு செய்வதற்கோ கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. மாணவர்கள், தங்களது பள்ளி பெயரை சொல்ல வேண்டுமென்ற அவசியமும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

வகுப்பறையில் 'மேப்' மாட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


அரசு பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, வகுப்பறையில் கண்டிப்பாக வரைபடங்கள் மாட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல் ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, வகுப்பறை சுவர்களில் வரைபடங்களை மாட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, புவியியல் வரைபடங்கள், அரசின் சார்பில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களை, வகுப்பறைகளில் கண்டிப்பாக, மாணவர்கள் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதிலுள்ள இடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டுமென, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

வரைபடத்துடன் கற்றுத் தராத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Thursday, March 03, 2016

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது

அதன் விவரம்:

1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.

2. துண்டுத்தாள், விடைக்குறிப்பு வைத்திருப்பதை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தால், உடனடியாக மாணவரை வெளியேற்ற வேண்டும். துண்டுத்தாளை, மாணவர் பெயர் விவரத்துடன் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர் விடைக்குறிப்பை பயன்படுத்தாவிட்டால், மறு நாள் தேர்வு எழுதலாம். துண்டுத்தாளை பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வுக்கான விடைத்தாள் நிறுத்தம்செய்யப்படும். ஓர் ஆண்டு அல்லது அடுத்து வரும், இரண்டுபருவ தேர்வுகளுக்கு தடை விதிக்கப்படும்.

3. ஒரு மாணவரை பார்த்து மற்றொரு மாணவர் எழுதினால், உடனேவெளியேற்றப்படுவார். பார்த்து எழுதியதற்கு சாட்சி இருந்தால், அந்த மாணவர் அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் அல்லது, ஓர் ஆண்டுக்கு, குறிப்பிட்ட பாடத்தைஎழுத முடியாது.

4.மாணவர் முழுவதுமாக காப்பியடித்தது தெரிந்து,தவறு நிரூபிக்கப்பட்டால், அனைத்து தேர்வுகளையும் எழுத முடியாது. அடுத்து வரும், இரண்டு பருவ தேர்வுகள் ரத்துசெய்யப்படும்.

5. அறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மாணவர் காப்பியடித்து, அது சாட்சியுடன் நிரூபிக்கப்பட்டால், அடுத்து வரும் தேர்வுகளை எழுத முடியாது.

6.விடைத்தாளை எடுத்து சென்றாலோ, கிழித்து விட்டாலோ, அந்த தேர்வு முழுவதையும் எழுத முடியாது.

7.ஆள்மாறாட்டம் செய்து நிரூபிக்கப்பட்டால்,நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது.

8.தன்னை தேர்ச்சி பெற செய்யும்படி, தேர்வு தாளிலோ, கடிதம் மூலமோ தேர்வுத்துறை அலுவலகத்துக்கோ, அல்லது தேர்வுத்துறை அதிகாரிகளுக்கோ கடிதம் எழுதினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

9. தேர்வுத்துறை அதிகாரிகள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவரை காப்பியடிக்க விடாமல் தடுத்து, அவர்களை தேர்வு மையத்துக்கு வெளியே அனுப்பிய பின், தேர்வு மையத்திற்கு வெளியே, அதிகாரிகள், ஆசிரியர்களை மாணவர் மிரட்டி,திட்டினால், அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும்.

10.மாணவர் வினாத்தாளை வெளியே, ‘லீக்’ செய்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

11. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் தர மறுத்தால், அந்த பருவத்தின் தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படும்.

12.விடைத்தாள் திருத்தத்தில், காப்பியடித்தது தெரிய வந்தால், அந்த மாணவர் இரண்டு பருவ தேர்வுகளை எழுத முடியாது.

13.விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள்தேர்வு எழுத தடைவிதிக்கப்படும்.

14.விடைத்தாளில் பெயர், ‘இனிஷியல்’, அல்லது ரகசிய குறியீடு இட்டால், தேர்வு முடிவுகள் ரத்தாகும்.

15.வினாத்தாளில் விடை குறிப்பிட்டு பிற மாணவருக்கு கொடுத்தால், கொடுத்த மாணவரின் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.

TNPSC VAO exam official key answer

Click below

http://www.tnpsc.gov.in/answerkeys_28_02_2016.html

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு


மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த விருதை பெற, 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாநிலத்தில், 22 பேருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களே, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தமிழகத்தில் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர், மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மார்ச், 15க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

Wednesday, March 02, 2016

தேர்வு கட்டுப்பாட்டு அறை திறப்பு

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ந்தேதி முதலும் நடைபெற உள்ளன. தேர்வுகள் குறித்து மாணவர்கள், தேர்வு எழுதுபவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். எனவே 8012594114, 8012594124, 8012594125, 8012594126 ஆகிய தேர்வு கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பெண்ணுக்காக மாணவர்கள் எழுதிய விடைகளை அடித்தால் ஓராண்டு தடை


கூடுதல் மதிப்பெண்ணுக்காக உடனடி தேர்வு எழுதும் வகையில் பிளஸ் 2 தேர்வில் எழுதிய விடைகளை அடிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்குகின்றன.

இம்முறை மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்கல்விகளில் சேர மாணவர்கள் சிலர் விடைகளை எழுதிவிட்டு அடிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பதை தேர்வுத்துறை கவனத்தில் கொண்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு விடைகளை எழுதிவிட்டு அதை அடிக்கும் மாணவர்கள் 2 பருவ தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைகளை அடிப்பதன் மூலம் பெயிலாகி உடனடி தேர்வு எழுத முடியும் என்பதால் மாணவர்கள் சிலர் அந்த முறையை கடைபிடித்து வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்த கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கான மதிப்பெண் மேம்பாட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 01, 2016

'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை'


அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சங்க பிரதிநிதிகளை அழைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சு நடத்தினார்

.அப்போது, 'தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; அதற்கு முன், 7,000 ரூபாய் சம்பளத்தை, 12 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; பள்ளி வேலை நாட்களை உயர்த்த வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பதில் அளித்தபோது, 'நீங்கள் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தில் பணியாற்றுவதால், உங்களை நிரந்தரம் செய்யும் திட்டம், தற்போதைக்கு இல்லை; ஊதிய உயர்வு குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, டில்லி சென்று, மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசிய பின் முடிவு செய்யப்படும்' என, கூறியுள்ளார்

அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு


பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை 1974 ஜன., 1 ல், அரசு செயல்படுத்தியது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும் ரூ.10 வசூலிக்கப்பட்டது. பணியின்போது இறந்தால், ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன்பின் 2006 பிப்ரவரியில் ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.

இதற்காக மாதந்தோறும் ரூ.30 வசூலிக்கப்பட்டது.அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் 10 ஆண்டுகளுக்கு பின் பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக ஊதியத்தில் ரூ.60 பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பிப்., 1 முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியும் ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.