இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 07, 2016

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றம்; கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது


அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனைத்து பருவங்களிலும் பாடத்திட்டம் புதிய தொழில் நுட்பத்துடன் மாற்றப்பட்டு உள்ளது. மார்க் போடும் கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாடத்திட்டம் மாற்றம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, ஏ.சி.தொழில் நுட்ப என்ஜினீயரிங் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி 4 வருடம் ஆகிவிட்டது. இதையொட்டி நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்பவும், மேல்நாட்டில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்தும் அதற்கு ஏற்றபடியும் என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கல்விக்குழுவின் அனுமதி பெற்ற பிறகுதான் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியும்.

கல்விக்குழு கூட்டம் இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் நேற்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் துணை வேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் இருந்து பி.இ., பி.ஆர்க். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-வது செமஸ்டர் முதல் 8-வது செமஸ்டர் வரை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவர்களில் ஏராளமானோர் வருகிற ஆகஸ்டு மாதம் என்ஜினீயரிங் படிப்பில் சேர உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த 4 கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து செமஸ்டர்களிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. கிரேடு முறையில் மாற்றம் மேலும் மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இப்போது கிரேடு முறை உள்ளது. அந்த கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஒரு வகுப்பில் செமஸ்டர் தேர்வில் அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்கள் பெறும் சராசரி மற்றும் கூடுதல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு தயாரிக்கப்படும். கிரேடு முறை வகுப்புக்கு வகுப்பு மாறும். செமஸ்டருக்கு செமஸ்டர் மாறும். இந்த புதிய முறை இந்த 4 கல்லூரிகளில் மட்டும்தான் முதலில் அமல்படுத்தப்படுகிறது. இந்த கல்வி வருடம்(2015-2016) சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

10ம் வகுப்பு மாணவர்கள் சுமார்


       தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கழகம் (என்சிஇஆர்டி) சார்பில் சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

            33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 7216 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2.77 லட்சம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 41% மாணவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் சரியாக பதிலளித்துள்ளனர். கணிதத்தில் 40% மாணவர்களும், அறிவியலில் 43% மாணவர்களும், சமூக அறிவியலில் 47% மாணவர்களும், இந்திய மொழிகளில் 53% மாணவர்கள் மட்டுமே சரியான பதில் அளித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் 500ல் 277 மாணவர்களும், அரசு பள்ளிகளில் 236 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 246 மாணவர்கள் மட்டுமே சிறந்தவர்களாக உள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

டி.ஆர்.பி.,அறிவிப்பு


வெள்ளத்தில் சேதமான சான்றிதழ்களுக்கு பதில், புதிய ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ்களை, பிப்., 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., அறிவித்துஉள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளில், மாற்று சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தோருக்கு டி.ஆர்.பி., புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தோர், டி.ஆர்.பி.,யின், http:/trb.tn.nic.in/ இணையதளத்தில், பிப்.,5ம் தேதி வரை, சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய தின்பண்டங்கள் பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு


பள்ளிகளிலும், பள்ளி அருகிலும் பாரம்பரியமான தின்பண்டங்களையே விற்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும், 'ஸ்நாக்ஸ்' வகைகளை தவிர்க்க, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.அதிக எடை, சோம்பல், சக்தி குறைவு, ரத்த சோகை மற்றும் சிவப்பணுக்கள் குறைவு போன்ற பல பிரச்னைகள், மாணவர்களிடம் காணப்படுகின்றன.

இதற்கான காரணங்கள் குறித்து, மத்திய அரசு ஆய்வு நடத்தியதில், குழந்தைகள் உட்கொள்ளும் உணவில் தான் பிரச்னை என்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, அனைத்து, சி.பிஎஸ்.இ., பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இமானுவேல் கடிதம் அனுப்பியுள்ளார்.அதன் விவரம்: பெரும்பாலான மாணவர்கள், வீட்டிலிருந்து, 'ஸ்நாக்ஸ்' மற்றும் மதிய உணவு கொண்டு வருவதற்கு பதில், கேன்டீனில் வாங்குகின்றனர். கேன்டீன்களில் சத்தில்லாத, கொழுப்பு சத்து நிறைந்த, பேக்கரி தின்பண்டங்கள் தான் விற்கப் படுகின்றன.எனவே, இதுபோன்ற தின்பண்டங்களை பள்ளிகளிலும், பள்ளிக்கு வெளியிலும் விற்க அனுமதிக்க கூடாது;

மாணவர்களும் இந்த உணவு பொருட்களை கொண்டு வரவோ, சாப்பிடவோ கூடாது. பாரம்பரிய உணவுகளான பயறு வகைகள், காய், கனிகள், அரிசி, கோதுமை, பார்லி உணவுகள் போன்றவற்றை, பேக்கரி பொருட்களுடன் சேர்க்காமல் சாப்பிட அறிவுறுத்த வேண்டும். மேலும், மாணவர்கள், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். காலை, மாலை வேளையில், சைக்கிள், நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டுகளை பழக வேண்டும்; தெம்பு தரும் விளையாட்டுக்களை விளையாட அனுமதிக்க வேண்டும்.பள்ளிகளில் உணவு மேலாண் கமிட்டி அமைக்க வேண்டும்; ஆரோக்கிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி, போட்டி, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'பொற்கிழி': தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு


அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தலில் வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'பொற்கிழி' வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே தமிழ் மொழி அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தல் தொடர்பான போட்டிகள் நடத்தவும், ஒவ்வொரு போட்டி யிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7,000 பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தர விட்டுள்ளது.

ஜன.,27, 28ல் போட்டிகல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு கள் ஜன.,27ல், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் ஜன., 28ல் , மாவட்டம் தோறும் கலெக்டரின் கூட்ட அரங்கில் நடக்கிறது. போட்டிக்கான தலைப்புகள், கூட்ட அரங்கில் வழங்கப்படும். நடுவர் களாக ஒன்பது தமிழாசிரியர்கள் இருப்பர். வெற்றி பெற்றவர் முடிவுகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் அறிவிப்பார்.விண்ணப்பிக்க அழைப்புஇதற்கான பரிசான பொற்கிழி, சான்றிதழ்களை அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி பெரியார் பிறந்த நாட்களில் சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன், அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் கற்றல் கையேடு


அரசு பள்ளி மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்களின் கற்றல் கையேட்டை, இணையதளத்தில் வெளியிட்டு, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரிகள் அசத்தியுள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் சதவீதம் குறைவாக உள்ளது. அவர்களுக்காக, கற்றல் கையேட்டை, தமிழக கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து, அரசு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

இந்த கையேடு, பல பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, புதிய புத்தகத்துக்காக காத்திருக்காமல், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகள், தங்களுக்கென, http://www.chiefeducationalofficer.in/ என்ற ஒருங்கிணைந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ளனர்.இதில், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான தகவல்களை, அவ்வப்போது பதிவேற்றம் செய்கின்றனர்.

தற்போது கற்றல் கையேட்டின், பிளஸ் 2 பாடங்களுக்கான, 'ஆன்லைன்' பிரதியை, அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதேபோல், பிளஸ் 2 தேர்வுக்கான, 'ப்ளூ பிரின்ட்' அட்டவணையையும் வெளியிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள், இணையதளத்தில் இருந்து பிரதி எடுப்பது எளிதாகி உள்ளது.

'ஒன் டிக்கெட்; ஒன் ஐ.டி.,' திட்டம் அறிமுகம் முன்பதிவில் பெயர் மாறினால் டிக்கெட் ரத்து


ரயில் பயணத்துக்காக, டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டும் போதாது; அதில் உள்ள பெயரும், டிக்கெட் பரிசோதகரிடம் காட்டும் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில், டிக்கெட் ரத்தாகி விடும்' என, ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.'

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விண்ணப்பத்தில், முழு பெயரை குறிப்பிடும் முறை விரைவில் அமல்படுத்தப்படும்' என, சில நாட்களுக்கு முன், ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களை, கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க, 'ஒன் டிக்கெட், ஒன் ஐ.டி.,' என்ற திட்டத்தை, புத்தாண்டு முதல், ரயில்வே வாரியம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது குறிப்பிடும் பெயரும், ரயில் பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டும் அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

வேறுபட்டிருந்தால், அந்த டிக்கெட் உடனடியாக ரத்து செய்யப்படும். இதனால், பயணம் செய்வோர் பாதிக்கப்படுவதுடன், அவர்கள் அபராதமும் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. '24 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பம் தர வேண்டும்' ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மும்பையில் இருந்து புறப்படும் ரயில்களில், பெயர் வேறுபாடு காரணமாக, தினமும், 10 டிக்கெட்டுகள் வரை ரத்தாகின்றன. இத்திட்டத்தால், கள்ள மார்க்கெட்டில் ரயில் டிக்கெட் வாங்குவோர், அதிகளவில் பிடிபடுகின்றனர்.

'டிக்கெட் முன்பதிவு செய்தவருக்கு பதில், அவருடைய தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மனைவி, மகன் அல்லது மகள் பயணம் செய்யலாம்' என, முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்கு, பயணத்துக்கு, 24 மணி நேரத்திற்கு முன், முன்பதிவு செய்தவர், அவருக்கு பதில், யார் பயணம் செய்யப் போகின்றனர் என்பதை குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். அப்போது தான், அந்த டிக்கெட்டில் வேறு ஒருவர் பயணம் செய்ய முடியும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

NMMS தேர்விற்கான வினாக்கள் 7-ம் வகுப்பு மூன்று பருவ புத்தகத்திலிருந்தும் இருந்தும், 8 வகுப்பு முதல் இரண்டு பருவ புத்தகத்திலிருந்தும் கேட்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்

IGNOU B.ed entrance result -2015

Click below

https://studentservices.ignou.ac.in/Openmat/BED2015/BEd_Entrance_Res2015.asp?_e_pi_=7%2CPAGE_ID10%2C4164919383

Wednesday, January 06, 2016

சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் 100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் ஓட்டம்


தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.

கடந்த 4ம் தேதி இந்த 5 மாவட்டங்களில் 40 ஆசிரியர்கள் திடீரென விடுப்பு எடுத்தனர். நேற்று முன் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பல இடங்களில் பணிக்கு வரவில்லை. இந்த விவகாரம் கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர். பலர் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சட்டரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், கடந்த 15-20 ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தவிர, போச்சம்பள்ளி அருள்சுந்தரம் என்பவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல் அடிப்படையில் போலி ஆசிரியர்களை பிடிக்க கூடுதல் தனிப்படைகள் அமைக்கவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசிக்கின்றனர்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரம் அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் தேதி வருகிற மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக ‘சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வருவார்கள்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டை சேதம் அடைந்ததாக கூறி 43 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 18 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அட்டை பிரிண்ட் செய்யும் பணி இன்று அல்லது நாளை முடிவடையும். புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்கள், விலாசம் மாற்றம், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை, தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். வாக்காளர் அட்டை: தற்போது கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களும் இ-சேவை மையங்களில் பணம் கட்டி கலர் படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.15 முதல் ரூ.20 வரை கட்டணம் செலுத்த வேண்டும். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பிரசாரம் செய்வதை கண்காணிக்க தேர்தல் ஆணையம் புதிய சாப்ட்ேவர் வாங்கியுள்ளது. இதன்மூலம் அவர்களின் தேர்தல் செலவுகள் கண்காணிக்கப்படும்.

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடுகின்றனர்; ஆனால், ஆங்கிலத்தில் தங்களின் இனிஷியலை எழுதுகின்றனர்' என, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குணமால் என்பவர், பள்ளி கல்வி முதன்மைச் செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதை பரிசீலித்த செயலகம், அனைத்து ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்து போடவும், இனிஷியலாக இருந்தாலும், அதையும் தமிழில் எழுதவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார். இனிஷியல் என்பது, தந்தை அல்லது கணவர் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக பெரும்பாலும் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்


மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர். இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.

இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில்,“வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம்.

இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

SSA ஜனவரி பயிற்சிக்கான அட்டவணை

Salem dist deeo order second term exam timetable

Tuesday, January 05, 2016

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா வங்கி.கிடைக்குமிடங்கள்


சென்னையில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.

காஞ்சிபுரம்- குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

திருவள்ளூர்- ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

கடலூர்-மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி,

விழுப்புரம்- பூந்தோட்டம் ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

தஞ்சை- மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி,

நாகப்பட்டினம்- சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி,

திருவாரூர்- அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி,

மதுரை- வடக்கு வெளிவீதி சேதுபதி மேல்நிலைப் பள்ளி,

தேனி- என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திண்டுக்கல்- பழனி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளியிலும்,

விருதுநகர்- த.பெ.ந.மகளிர் மேல்நிலைப் பள்ளி,

சிவகங்கை - மதுரை ரோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி,

திருநெல்வேலி - அரசு மேல்நிலை பள்ளியிலும் (ரத்னா திரையரங்கு எதிரில்),

தூத்துக்குடி- லசால் மேல்நிலைப் பள்ளி,

கன்னியாகுமரி- நாகர்கோவில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி,

வேலூர் - வெங்கடேஷ்வரா மேல்நிலைப் பள்ளி,

திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை மேல்நிலைப் பள்ளி,

சேலத்தில் மறவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி,

நாமக்கல் - ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளி,

தருமபுரி - அதியமான் அசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி,

கரூர் - கவுண்டம்பாளையம் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு     உயர்நிலைப் பள்ளி,

பெரம்பலூர் - வெங்கடேசபுரம் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி,

புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி,

கோவை - ராஜ வீதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

உதகை- குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி,

கிருஷ்ணகிரி - பெங்களூர் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,

அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திருப்பூர் - விஜயாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி

பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கற்றல் கையேடு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெறுவர்கள் தேர்ச்சி பெறவும், தேர்ச்சியின் விளம்பில் இருப்பவர் அதிக மதிப்பெண் பெறவும், அதிக மதிப்பெண் பெறுவர் முழு மதிப்பெண் பெறும் வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல், புவியியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு கற்றல் கையேடுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்கையேடுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்'சிடி'யாக வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் பயன் பெறும் வகையில் கல்வித்துறை சார்பில் www.chiefeducationalofficer.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் பயன் பெறும் வகையில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 'சிடி'யாக வழங்கிய கையேட்டை அனைத்து மாணவர்களும் புத்தகமாக மாற்றுவது என்பது காலதாமதமாகும். இதை தவிர்க்க இணைய தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த முகவரியில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். ஓரிரு நாளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் கையேடும் இணைய தளத்தில் வெளியிடப்படும்,” என்றார்.