இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, November 12, 2015

வி.ஏ.ஓ.: 813 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரி 14-ல் தேர்வு


கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும். விஏஓ பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) விண்ணப்பிக்கலாம்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு...தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந்தும் என்பதால் மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இது குறித்து குறிப்பிட வேண்டும். எவ்வாறு பணி நியமனம்? எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 300. எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்ட விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ரூ.17 ஆயிரம் ஊதியம்: கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியில் சேருவோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் நிலையில், சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன் பிறகு வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

Wednesday, November 11, 2015

முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு அட்டவணை தயாரித்த பின்னும் முன்பதிவு செய்யும் முறை அமல்


ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது. இந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120–லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது. இரண்டு அடுக்கு ஏ.சி. அல்லது முதல் வகுப்புக்கு ரூ.100–லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது.

பயணக்கட்டணம் பிடித்தம் இதைப்போல 3 அடுக்கு ஏ.சி., ஏ.சி.சி., 3ஏ வகுப்புகளுக்கு ரூ.90–லிருந்து ரூ.180 ஆக உயர்கிறது. மேலும் 2–ம் வகுப்பு படுக்கை வசதிக்கு ரூ.60–லிருந்து ரூ.120 ஆகவும், 2–ம் வகுப்பு பயணிகளுக்கு ரூ.30–லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுகிறது. ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யப்படும் பயணிகளுக்கு 25 சதவீத பயணக்கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதைப்போல 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்யும் பயணிகளுக்கு, 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கே கட்டணம் திருப்பியளிக்கப்படும்.

முன்பதிவு செய்யப்படாத 2–ம் வகுப்பை பொறுத்தவரை, ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்யும் போது ரூ.15 பிடித்தம் செய்யப்படுவதே வழக்கத்தில் இருந்தது. இது இன்று முதல் ரூ.30 ஆக உயர்த்தப்படுகிறது. ஆர்.ஏ.சி. டிக்கெட் இதைப்போல காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்போர், ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பாக ரத்து செய்தால் கூட (பிடித்தம் போக) பணத்தை திரும்ப பெறலாம். அதற்கு பின் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது. இந்த புதிய விதிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால் ரெயில்வே பயணிகளின் மோசடிகள் குறைந்து உண்மைத்தன்மை ஊக்குவிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய நடைமுறை ரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு அட்டவணை (சார்ட்) தயாரித்த பின்னும், முன்பதிவு செய்யும் முறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறைப்படி ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பிருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி ஒவ்வொரு ரெயிலும் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே வழக்கமான அட்டவணை தயாரிக்கப்படும். இதில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது முதல் இட ஒதுக்கீடு அட்டவணை என அழைக்கப்படும். மீண்டும் முன்பதிவு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னரும், அந்த ரெயிலில் இடம் இருந்தால் மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.

ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் இணையம் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி ரெயில் புறப்படுவதற்கு ½ மணி நேரத்துக்குமுன் நிறுத்தப்பட்டு, 2–வது இட ஒதுக்கீடு அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணை ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர் மூலம் வழங்கப்படும். இந்த புதிய வசதியால் ரெயில்கள் காலியாக செல்வது தவிர்க்கப்படுவதோடு, ரெயில்வேக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி


மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறு தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 1.1.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் நிதி பிடித்தம் செய்து, ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தி உள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுநாள் வரை ஒரு பைசா கூட ஓய்வு ஊதிய திட்டத்தில் பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை ஒரு புறம் நீடித்து வருகிறது. இந்நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட சந்தாதாரர்களுக்கு கணக்குகளை பராமரிக்க, கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசின் ஓய்வு ஊதிய துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி மத்திய கணக்கு பதிவு முகமைக்கு (சி.ஆர்.ஏ) வந்துள்ள உத்தரவில், கணக்கு துவங்குவதற்கு ரூ.50 ம், ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.190 ம், ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் ரூ.4 ம், ஓய்வு ஊதிய நிதி மேலாளர்களுக்கும் கணக்கு பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், 1.1.04 க்கு முன்பே பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கணக்குளை பராமரிக்க, பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வதில்லை. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பானது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குமுறுகின்றனர்.

   தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணை நிர்வாகி பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:

புதிய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும், ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது, புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தையே நடைமுறை படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை இதுவரை நிறைவேற்றாததால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய கட்டண அறிவிப்பானது, மேலும் அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது. இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் சாதிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப ஓய்வு ஊதியம், மற்றும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்க முன்வர வேண்டும், என்றார்.

பி.எட்., பாடத்திட்டத்தில் குளறுபடி ஆசிரியர்கள், மாணவர்கள் புகார்


பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.

இதில் குளறுபடிகள் உள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்கள் கூறியதாவது: பி.எட்., படிப்பில், எந்த அளவுக்கு கற்றுத் தரப்படுகிறதோ, அதற்கேற்ப அவர்களால், மாணவர்களுக்கு திறமையாக பாடம் நடத்த முடியும். ஆனால், தற்போதைய புதிய பாடத்திட்டத்தில், முக்கிய பாடங்களை நீக்கியுள்ளனர். குறிப்பாக, வாசித்தல் பயிற்சி, நுாலக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் முக்கியம். அதில், நுாலக மேலாண்மைப் பாடம் நீக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடத்தை, எப்படி கற்று தர வேண்டும் என, ஓராண்டு படிப்பில், இரண்டு தாள்கள் இருந்தன. பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டான பின், அது ஒரு தாளாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், 'புராஜெக்ட்' செய்தல், 'சார்ட்' தயாரித்தல் என, ஆசிரியர் பயிற்றுவித்தலுக்கு, தேவைப்படாத பாடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் இருந்து, இந்த பாடத்திட்டம் மாறுபடுகிறது. கல்வி கமிட்டியை கூட்டாமலேயே, இது தயாரிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'அரசின் ஒப்புதலுடன் பாடத்திட்டத்தை வெளியிட்டு உள்ளோம்; அரசு மாற்றச் சொன்னால், மாற்றப்படும்' என்றனர்.

கனமழை குறித்து பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்

Monday, November 09, 2015

CPS ல் அடுத்த ஆப்பு ரெடி. CPS கணக்கு பராமரிப்புக்கான கட்டணங்கள் மத்திய அரசு அறிவிப்பு. திண்டுக்கல் எங்கெல்ஸ்.

பி.எப் வட்டி 24ம் தேதி நிர்ணயம்?

��TNPTF MANI��

பிஎப் வட்டி விகிதம் 24-ம் தேதி நிர்ணயம்?

  

நடப்பு நிதி ஆண்டில் செய்யப்படும் பி.எப். டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் வரும் 24-ம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இபிஎப்ஓ-ன் 209-வது இயக்குநர் குழு சந்திப்பு 24-ம் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு நிதி ஆண்டு களுக்கான (2013-14 மற்றும் 2014-15) வட்டி விகிதம் 8.75 சதவீதமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. அதனால் பி.எப். மீதான வட்டியும் குறைக்கப் படும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது.

கடந்த முறை ரிசர்வ் வங்கி 0.50 சதவீதம் வட்டி குறைப்பு செய்தவுடன், சிறிய சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் பிஎப் டெபாசிட் களுக்கான வட்டியை தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையிலான குழு தன்னிச்சையாக முடிவு செய்யும். இக்குழுவின் முடிவு நிதி அமைச்சகத்தின் ஒப்பு தலுக்குப் பின் அரசாணையாக வெளியாகும்.

Sunday, November 08, 2015

பணி நிரவலில் 'பணம்:' ஆசிரியர்கள் புகார்


தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணி நிரவல் என்ற பெயரில், துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, 3 முதல், 5ம் தேதி வரை பணி நிரவல் இடமாறுதல் நடந்தது. பகுதி நேர பாடப் பிரிவுகளில், காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில், விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆசிரியரும், 70 கி.மீ., நீண்ட துாரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:

பகுதி நேர ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வில், அருகிலுள்ள இடம் ஒதுக்க, ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளனர். மாதம், 7,000 சம்பளம் பெற்று, கடனில் தவிக்கும் ஆசிரியர்களிடம், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

STFI demands

Click below

https://app.box.com/s/bzpz3xhwqxyg2vjrjbxqxk4gkzgxuuk6

Saturday, November 07, 2015

தீபாவளி 'லீவு': பள்ளிகளுக்கு அனுமதி


தீபாவளி பண்டிகை, 10ம் தேதி செவ்வாய் கிழமை, கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இருநாள் வார விடுமுறை உள்ள நிலையில், நடுவில் ஒருநாள், திங்கள் மட்டும், வேலை நாளாக இருக்கிறது.எனவே, திங்கள் கிழமையும் விடுமுறை அறிவித்தால், வெளியூர் சென்று, பண்டிகையை கொண்டாடுவோருக்கு வசதியாக இருக்கும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கோரிக்கை வந்தது.

இதுகுறித்து, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு எடுத்துக் கொள்ளுமாறு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வேலுார், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், திங்கள் மற்றும் புதன் கிழமைகள், உள்ளூர் விடுமுறையாக அறிவித்து உள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை போன்ற நகரங்களில், செவ்வாய் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், புதன் கிழமை அன்று, அரசு பள்ளி ஆசிரியர்கள், பண்டிகை கால விடுப்பு எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள் கூறுகையில், 'பள்ளிகளில், மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களுக்கு மட்டுமே, பண்டிகை கால விடுப்புக்கு அனுமதி அளிக்க முடியும். ஏனென்றால், இரண்டு பங்கு ஆசிரியர் இல்லாவிட்டால், உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேநேரம், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், அதை தடுக்க முடியாது; பள்ளிக்கு விடுமுறை தான்' என்றனர்

மாணவர்களுக்கு உதவும்'மொபைல் ஆப்' வெளியீடு


பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'டிஜிட்டல் இந்தியா'வை, நனவாக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும், 'மொபைல் ஆப்'களை நேற்று அறிமுகப்படுத்தியது. டில்லி, விஞ்ஞான் பவனில் நேற்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான, 'சாரன்ஷ்' மென்பொருளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டது;

இது, குழந்தைகளின் கல்வி அறிவு மேம்பாட்டை, பாடவாரியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவில் பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்ய, பெற்றோருக்கு உதவி செய்யும். தவிர, மாணவர்கள், இணையதளத்தில் இருந்து பாடங்களை பெற உதவும், எண்ணற்ற, 'மொபைல்' செயலிகள், இணையதளம் சார்ந்த இயங்கு தளங்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி பேசியதாவது: பள்ளிக் கல்வியில் வெளிப்படைத் தன்மையையும், புதிதாக கற்கும் வாய்ப்புகளையும், குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவதில், மனிதவள மேம்பாட்டுத் துறை ஆர்வமாக உள்ளது. மாணவர்களின் தேர்வுச் சுமைகளை குறைக்க, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, புதிய திட்டங்கள் தீட்டி வருகிறோம்.

வரும் ஆண்டில், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். மாநில அரசு களின் உதவியால், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு கழிப்பறை அமைத்து தரும் திட்டம், நனவாகி வருகிறது. இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

புதிய கல்விக்கொள்கை வரைவும் விளக்கமும்.திரு செ.நடேசன்

Click below

http://suzhalvilakku.blogspot.in/2015/11/blog-post.html?spref=fb&m=1

Friday, November 06, 2015

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சரிபார்க்க வாய்ப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், தகவல்களைத் திருத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 2 கோடியே 82 லட்சத்து 49ஆயிரத்து 651 ஆண்கள், 2 கோடியே 84 லட்சத்து 28 ஆயிரத்து 472 பெண்கள், 3 ஆயிரத்து 719 திருநங்கைகள் என 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. அதன் தகவல்களை இணையதளம். செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, தானியங்கி குரல் கேட்பு(ஐ.வி.ஆர்.எஸ்.) மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதி செய்து தரப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறுவது ஆகியவற்றுக்காக 22 லட்சத்து 81 ஆயிரத்து 392 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வரும் ஜனவரி 1- ஆம் தேதியன்று நிலவரப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்களும், ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் படிவம் 6 மூலமாக பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பித்தனர். EASY போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததால், மொத்தமுள்ள 22.81 லட்சம் விண்ணப்பதாரர்களில் 7 லட்சம் பேர் தங்கள் விண்ணப்பங்களில் செல்லிடப்பேசி எண்களை அளித்திருந்தனர்.

அந்த 7 லட்சம் பேருக்கும் அவர்களின் விண்ணப்பம் குறித்த தகவல்கள், செல்லிடப் பேசி குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் 4 கட்டங்களாக பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு கட்டத்துக்கும் விண்ணப்பம் வரும்போது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தரப்படும். அந்த வகையில் டேட்டா பதிவு, சரிபார்த்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலருக்கு விண்ணப்பத்தை அளித்தல், சரிபார்த்தல் பணி நிறைவு, விண்ணப்பத்தின் மீது தேர்தல் நடத்தும் அதிகாரி இறுதி உத்தரவு பிறப்பித்தல் ஆகிய 4 கட்டங்களும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பம் கொடுக்கும்போது செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்காத பழைய வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அவர்களும் EASY செல்லிடப்பேசி செயலி, இணையதளம், ஐ.வி.ஆர்.எஸ் 044-66498949, குறுஞ்செய்தி வழியாக அனுப்புவோர் எஸ்.எம்.எஸ்., (ஆர்.எம்.என். -ஸ்பேஸ்- வாக்காளர் அடையாள அட்டை எண்- ஆகிய தகவலை 1950 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

நாளை முதல் நடவடிக்கை: வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மக்களே முன்வந்து கொடுப்பதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெயர் சேர்ப்புக்கான 6-ஆம் எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விவரங்கள் அடங்கிய சுருக்கப் பட்டியல் 9-ஆம் எண் படிவத்திலும், பெயரை நீக்க 7-ஆம் எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் 10-ஆம் எண் விண்ணப்பத்திலும், விவரங்களைத் திருத்துவதற்கான 8-ஆம் எண் விண்ணப்பங்களைக் கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் அனைத்தும் 11-ம் எண் விண்ணப்பத்திலும், வாக்காளர் பட்டியல் பதிவை இடமாற்றுவதற்கான 8ஏ எண் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் சுருக்கப் பட்டியல் விவரங்கள் அனைத்தும் 11ஏ எண் விண்ணப்பத்திலும் இடம்பெற்றிருக்கும். மேலும், http: 104.211.228.47ApptrackingEmatixGrid.aspx. என்ற இணையதள இணைப்பிலும் காணலாம். ஏதாவது திருத்தங்கள் செய்ய நேர்ந்தால், தகுந்த ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியை அணுகலாம் என்று தனது அறிவிப்பில் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

டிஸ்லெக்சியா' மாணவர்கள்: ஆசிரியர்களுக்கு பயிற்சி


கற்றல் குறைபாடுள்ள, 'டிஸ்லெக்சியா' மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.தமிழகத்தில், தமிழ் வழியில் படிக்கும், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், 10 முதல், 15 சதவீதம் பேருக்கு, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் குறைபாடு உள்ளது.

இந்த மாணவர்கள் அறிவிலும், உடல் நலனிலும் மற்ற மாணவர்களை விட, நல்ல முறையில் இருந்தாலும், பாடங்களை புரிந்து படித்தல், மனப்பாடம் செய்தல் போன்றவற்றில் திணறுகின்றனர். அவர்களுக்கு, சரியான முறையில் பாடம் கற்பித்தால், எந்த குறைபாடும் இன்றி, மற்ற மாணவர்களை விட, ஒரு படி மேலே படிக்க முடியும். எனவே, இத்தகைய மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை 'டிஸ்லெக்சியா' சங்கம் சார்பில், இன்று சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகர்., வாணி மகாலில் இந்த பயிற்சி வகுப்பு நடக்கிறது. சென்னை, ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள், சிறப்புக் கல்வியாளர் ஹரிணி மோகன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.-

ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு


ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம், 12ம் தேதி முதல், இரு மடங்காக உயருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றபின், ரயில்வே துறையில், வருவாயை பெருக்கும் முயற்சியில், ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை, ரத்து செய்வதற்கான காலக்கெடு மற்றும் கட்டணத்தை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு முடிவு செய்தார்.

இதன்படி, புதிய விதிமுறைகளை, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

* ரயில் புறப்படுவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்தால், ஒவ்வொரு பயணிக்கும், குறைந்தபட்சம், 60 ரூபாய் முதல் அதிகபட்சம், 240 ரூபாய் வரை டிக்கெட்டின் கட்டண தொகைக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும்

* ரயில் புறப்படுவதற்கு முன், 48 முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டண தொகையில், 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்

* ரயில் புறப்படுவதற்கு முன், 12 முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், 50 சதவீத கட்டணம் திரும்பப் பெறலாம்

* ரயில் புறப்படுவதற்கு முன், நான்கு மணி நேரத்திற்குள் ரத்து செய்யும்போது, கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது

* ஆர்.ஏ.சி., மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும ்போது, அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம், ௩௦ ரூபாய், இனி, இரு மடங்காக பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்பட்ட பின், 30 நிமிடம் வரை டிக்கெட்டை ரத்து செய்யலாம். இதற்கு முன், இரண்டு மணி நேரமாக இருந்தது.இந்த விதிமுறைகள், 12ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

Aadaar students enrollment form

Click below

https://app.box.com/s/139zgxwzgwys5zvx7z6ga950tsk5y2dl

Cleanliness drive nov 1-15th

Click below

https://app.box.com/s/eo1dk7sp8haulvd0cjm7d0355kxyp2zq