Tuesday, May 06, 2014
Monday, May 05, 2014
வீட்டுக் கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?
வீட்டுக் கடன் மீதான முதல் தவணை பிடித்தம் என்பது அவருக்கு கடன் தொகை வழங்கிய மாதம் முதல் பதினெட்டாவது மாதம் அல்லது அவர் புது வீட்டில் குடியேறும் முதல் மாதம் தொடங்கும். இவற்றுள் எந்த மாதம் முன்பு வருமோ அந்த மாதம் தொடங்கும். வட்டி கணக்கீடு என்பது அவர் முதல் தவணை பெற்ற நாளில் தொடங்கும். அதிக பட்ச கடன் தவணை பதினைந்து ஆண்டு. அதிகபட்ச வட்டித் தவணை ஐந்தாண்டு.
அதாவது 180 + 60 தவணைகள். பணிக் காலம் குறைவாக உள்ளோரும் குறுகிய காலத்தில் கடனைச் செலுத்தி வட்டியைக் குறைத்துக்கொள்ள விரும்புவோரும் தவணைக் காலத்தைச் சுருக்கிக் கொள்ளலாம். ஒரு பணியாளர் பத்து லட்சம் ரூபாய் கடன் பெறுவதாக வைத்துக் கொள்வோம். இவருக்கு முதல் தவணையாக ரூபாய் ஐந்து லட்சம் ஜனவரி 2014-ல் வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணை அக்டோபர் 2014-ல் வழங்கப்படுவதாகவும் கொள்வோம். கடன் பிடித்தம் ஜூலையில் தொடங்கும். மாதத் தவணை ரூபாய் 10 ஆயிரம். கடன் தொகை, தவணை எண் மற்றும் வட்டி வீதம் ஆகியவை மாறும்போது தக்க மாற்றங்களுடன் மேற்கண்ட முறையில் வட்டியைக் கணக்கிடலாம். அதிகபட்சமாக அறுபது தவணைகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும். பணிக்காலம் குறைவாக உள்ளவர்களுக்கு வட்டியை அவர்களது பணிக்கொடையில் (Death cum Retirement Gratuity) பிடித்தவும் செய்யவும் கூடும். வட்டியைச் செலுத்திய பின் வீட்டுப் பத்திரம் முதலானவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். கடன் தொகைப் பிடித்தம் முடியும்வரை, கடன் மற்றும் வட்டித் தொகைக்குக் காப்புறுதி செய்து பிரீமியத் தொகை செலுத்தி வர வேண்டும். -
கட்டுரையாளர், ஓய்வுபெற்ற அரசு அதிகா
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு திங்கள்கிழமை (மே 5) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 23 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்குச் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு படிப்புகளில் சேரலாம். பத்தாம் வகுப்புக்குப் பிறகு 2 ஆண்டு ஐடிஐ படிப்பு முடித்த மாணவர்களும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். நேரிலும், அஞ்சல் மூலமாகவும், இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150 செலுத்தியும், அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் ரூ.150லிக்கான கேட்பு வரைவோலை எடுத்து, சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில், ரூ.15லிக்கான அஞ்சல் வில்லையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். தமிழகம் முழுவதும் 32 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 4 அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளும், சிறப்புப் பயிலகங்களும் உள்ளன.
Sunday, May 04, 2014
Saturday, May 03, 2014
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு
அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1.9.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்ளுதல் தொடர்பாக கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘உபரி ஆசிரியர்கள் உபரி பணியிடங்கள் தொடர்பான விபரங்களை வரும் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் ஜூன் 18-ல் திறப்பு
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதே போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அடுத்த வாரம் தொடங்கி மே 20ம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது.
கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து கலை கல்லூரிகளிலும் ஜூன் 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 18ம் தேதி தொடங்கும். ஜூன் மாதம் தான் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறினர்.
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்
திருப்பூரில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் நேற்று வழங்கப்பட்டன. மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண் ணப்பங்களை வாங்கி சென்றனர். விண்ணப்பங்கள் வினியோகம் தமிழ்நாட்டில் உள்ள கல்லூ ரிகளில் என்ஜினீயரிங் படிப் புக்கான இளநிலை பொறியி யல் கலந்தாய்வு விண்ணப் பங்கள் மாணவர்களுக்கு நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்பூர் பல்லடம் ரோட் டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 2-வது நுழைவுவாயிலில் பி.இ. கலந்தாய்வுக்கான விண் ணப்ப வினியோக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9.30 மணி முதல் விண்ணப்பங்கள் வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. 20-ந்தேதி வரை இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கே மாணவர் கள் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் குவிந்தனர். 10 மணி முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பங்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். முதல் கட்டமாக மையத் துக்கு 3 ஆயிரம் விண்ணப் பங்கள் வந்திருந்தன. நேற்று ஒரே நாளில் 700-க்கும் மேற் பட்ட விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தது. இதில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பை சேர்ந்தவர் களுக்கு ரூ.250 -க்கும், பி.சி. வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ரூ.500-க்கும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது. வருகிற 20-ந்தேதி வரை விண் ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்குச் சீட்டு தரவில்லை: ஆசிரியர் கூட்டணி புகார்
வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களாக பணியாற்றிய 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு இதுவரை வழங்கப்படவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புகார் எழுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பூர் வட்டாரக் கிளைத் தலைவர் மணிகண்ட பிரபு, பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கீழ் 180 பள்ளிகளில் 1,200 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில், மக்களவைத் தேர்தலுக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் கடந்த ஏப்ரல் 11 முதல் 24-ஆம் தேதி வரை 14 நாள்களாக வீடுதோறும் பூத்சிலிப் விநியோகம் செய்தனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பணியை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றுவதற்காக தபால் வாக்குச்சீட்டு (போஸ்டல் ஓட்டு) இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும், தேர்தல் தினத்தில் வழங்கப்படவேண்டிய மதிப்பூதியமும் இன்னும் வழங்கப்படவில்லை. இதற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் அதிருப்தியை தெரிவித்துகொள்கிறது என்று தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை தினமான வரும் 16-ஆம் தேதி காலை 8 மணி வரை தபால் வாக்குப் பதிவு செய்வதற்கு கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம
்25 சதவீதம்:
ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், ஆரம்பநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு), உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, ஒதுக்க வேண்டும். இந்த பிரிவில் சேரும் குழந்தைகளுக்கான கல்விச் செலவை, மத்திய அரசு ஏற்கிறது. இந்த பிரிவின் கீழ், மாணவர்களை சேர்க்க, தனியார் பள்ளிகள், ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த ஆண்டு, 20 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த போதும், அவர்களுக்கான கல்வி கட்டணம், இதுவரை, பள்ளிகளுக்கு வழங்கவில்லை. இதனால், இந்த ஆண்டு, ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கை, பெரிய அளவில் நடக்காது என, தெரிகிறது. ஆர்.டி.இ., பிரிவின் கீழ், மாணவர் சேர்க்கை நடத்த, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், ஏற்கனவே அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 25 சதவீத இடங்கள் விவரத்தை, நேற்று முன்தினமே, அறிவிப்பு பலகையில், பள்ளிகள் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு பள்ளியும், அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட வில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பிருந்தே, விண்ணப்பம் வழங்க வேண்டும். ஆனால், பல மாதங்களுக்கு முன்பே, மொத்த இடங்களையும், பள்ளிகள் நிரப்பிவிட்டன.
அட்டவணையை காணோம்:
ஒருசில பள்ளிகள், ஆர்.டி.இ., கீழ், மாணவர் சேர்கை நடத்த ஆர்வம் காட்டினாலும், அதற்குரிய வழிகாட்டுதலை, இயக்குனரகம் வெளியிடவில்லை. ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பம் வழங்குவதற்கான காலக்கெடு, நேற்று முதல், 9ம் தேதி வரை உள்ளது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில், பொதுநல வழக்கு ஒன்று தாக்கலானது. அதில், நேற்று முதல், 18ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஏற்ப, பழைய அட்டவணையில் மாற்றம் செய்து, புதிய அட்ட வணையை, இயக்குனரகம் வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை வரை, புதிய அட்டவணை வெளியிடவில்லை. இயக்குனரகத்தின், இந்த அமைதி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும், பெரிய தனியார் பள்ளிகளுக்கு, சாதகமாக அமைந்துள்ளது.
திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு
கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டம் அமல்படுத்தியபின் ஆசிரியர் தகுதித் தேர்வை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திய நிலையில் 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றுவிட்டனர். 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 5 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பல்வேறு வழக்குகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. யாருக்கு வேலை கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் காலங்களில் மற்ற போட்டித் தேர்வுகளை போல அதிக மதிப்பெண் பெறுவோர்க்கு ஆசிரியர் பணி வழங்கும் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும். யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதல் மதிப்பெண் பெறுவோர்க்கு வாய்ப்பு வழங்குவது போல பணிநியமனம் வழங்கினார் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும். அதே போல ஆசிரியர் தேர்வு வாரியமும் தேர்ச்சி பட்டியல் தயாரித்து பணி நியமனம் வழங்க பரிசீலனை செய்ய ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Wednesday, April 30, 2014
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்: தமிழக அரசு உத்தரவ
தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க முடியும். அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம் பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்
தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது
. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க முடியும். அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம் பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
. இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5 கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை www.tndte.gov.in இணையதளத்திலிருந்து ஜூன் 20-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 15 ஆகும்.
தர வரிசைப் பட்டியல் முறையில் விஏஓ தேர்வு முடிவு: நவநீதகிருஷ்ணன்
் குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே, விஏஓ தேர்வு முடிவுகளும் தர வரிசைப் பட்டியல்படி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார். திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்த விஏஓ தேர்வை எழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விஏஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது, குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறையே பின்பற்றப்படும். அதாவது, தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்கள் மற்றும் தர வரிசையைத் தெரிந்து கொள்ளும் வகையில் முடிவுகள் வெளியிடப்படும். இதன் மூலம் இட ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்பதை அவர்களாகவே தெரிந்து கொள்ள முடியும். கடந்த முறை 5,566 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுத 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 11 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது என்றார்.
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு
தேர்வுத்துறை இயக் குனர், தேவராஜன் அறிவிப்பு: இன்றைய தேதியில், 12 வயது, 6 மாதங்களை பூர்த்தி செய்தவர்கள், நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிவித்துள்ள, சிறப்பு மையங்களுக்கு, நேரில் சென்று, விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 125 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். முழுமையான விவரங்களுக்கு, தேர்வுத் துறை இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.
புதிய வெயிடேஜ் முறை அறிமுகம் - TNTET மூலம் ஆசிரியர் பணி தேர்விற்கு-நீதிமன்றம் உத்தரவு புதிய வெயிடேஜ் முறை அறிமுகம
Paper II க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி?
மாதிரி வழிமுறை
12 ஆம் வகுப்பில் 84% எனில் அதற்கு வெயிட்டேஜ் 8.4.
இளநிலைப் பட்டப்படிப்பில் 58% எனில் 58/100 * 15 = 8.7.
பி . எட். இல் 71% எனில் 71/100 * 15 = 10.65
TNTET இல் 90 எனில் 90/150 * 60 = 36.
எனவே மொத்தமாக.. 63.75
Paper I க்கு வெயிடேஜ் மதிப்பெண் கண்டுபிடிப்பது எப்படி ?
மாதிரி வழி முறை
(+2 % mark * 15)/100+(dted % mark *25)/100+(TNTET mark*60)/150= உங்கள் வெயிடேஜ்.