இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, June 05, 2013

எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் 7-ந்தேதி வெளியீடு

எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஆண்டுகளைபோல இந்த வருடமும் கடுமையான போட்டி நிலவுகிறது. 18 அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்கள், 10 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 3000 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

இதையடுத்து ரேண்டம் எண் நாளை மறுநாள் (7-ந்தேதி) வெளியிடப்படுகிறது. விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரேண்டம் எண் கொடுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிளஸ்-2 மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 10-ந் தேதி அன்று முடிவு வெளியாவதால் அதன் பிறகு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார். என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் 12-ந் தேதி வெளியாவதால் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் 13 அல்லது 14-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tuesday, June 04, 2013

மாவட்ட கல்விப்பிரிவுகளில் தலைமை பணியிடங்கள் காலி

   கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என, தலைமை பணியிடங்கள் பல, காலியாக கிடப்பதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் வரை காலியாக இருந்தது. இந்த நிலையில், சிவகங்கை, விருதுநகர், நெல்லை உட்பட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களும் (எஸ்.எஸ்.ஏ., திட்டம்) கடந்த வாரம் ஓய்வு பெற்றனர். மதுரை மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் உட்பட, 17 கல்வி அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன் ஓய்வு பெற்றனர்.

இதனால், 35 முதன்மை கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன. தவிர, 6 இணை இயக்குனர்கள் பணியிடங்களும், நூலகம் உட்பட 3 இயக்குனர் பணியிடங்களும் காலியாக உள்ளன. தலைமையிட பணியிடங்கள், காலியாக உள்ளதால், உத்தரவுகளை செயல்படுத்துவதில், தேக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் மிக முக்கியமானவை. உத்தரவுகளை, செயலாக்கம் செய்வதில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது, 14 வகை அரசு நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், வழிநடத்தும் அதிகாரிகள் இல்லாததால், இப்பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு மாவட்ட அதிகாரி ஓய்வு பெறும் போது, உடனே அந்த பணியிடத்தை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நிர்வாகி கூறினர்.

தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப் பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன

. புதிதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில் சேரும் போது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கே, அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் வேலை வாய்ப்பு தரும் கல்வி படிப்புகள் மட்டுமே உள்ளன. இதனால், தனியார் கல்லூரிகளை நாடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில், பி.ஏ., - இதழியல் மற்றும் தொடர்பியல், பாதுகாப்பு துறை படிப்பு, பி.எஸ்சி., - எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நுண்ணுயிரியல், விசுவல் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ். டபிள்யூ., - சமூக சேவை உள்ளிட்ட, 398 புதிய பாடப்பிரிவுகளை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய பாடப்பிரிவுகளுக்கு அரசாணை, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழக அங்கீகாரத்தை பெற்ற பின், ஜூன் இறுதி வாரம் முதல் மாணவர் சேர்க்கை துவங்கும். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலர், பிரதாபன் கூறியதாவது:

வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய பல அரிய படிப்புகள், அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளிலேயே வழங்கப்படுகின்றன. வசதி படைத்த மாணவர்கள், இக்கல்லூரிகளில் எளிதில் சேர்ந்து விடுகின்றனர். ஏழை மாணவர்களுக்கு, இப்படிப்புகள் எட்டாக்கனியாகி விடுகிறது. அரசு கல்லூரிகளில், இப்படிப்புகளை துவங்குவதன் மூலம், ஏழை மாணவர்கள் பயன் பெற முடியும். இவ்வாறு, பிரதாபன் கூறினார்.

என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவ–மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் இன்று (புதன்கிழமை) ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யப்படுகிறத

ு. 1.89 லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் 553 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு புதிதாக 11 என்ஜினீயரிங் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்றிருப்பதால் கூடுதலாக 3,300 இடங்கள் கிடைக்கும். என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ்–2 கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மார்க் கணக்கிடப்படுகிறது. 200–க்கு எடுத்த கணிதம் மதிப்பெண் 100–க்கும் இதேபோல் இயற்பியல் மதிப்பெண் 50–க்கும், வேதியியல் மார்க்கும் 50–க்கும் மாற்றப்படும். அதன் அடிப்படையில் 200–க்கு எத்தனை மதிப்பெண் என்பது தெரிய வரும். ஒரே கட் ஆப் மார்க் வந்தால்... ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மார்க் பெறும்போது யாருக்கு முன்னுரிமை என்ற கேள்வி எழுகிறது. அந்த நேரத்தில் கணித மதிப்பெண்ணும் அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண்ணும் ஒருவேளை அதுவும் இணையாக இருக்கும்பட்சத்தில் (அப்போது வேதியியல் மதிப்பெண் சமமாகத்தான் இருக்கும்) பிளஸ்–2 நான்காவது பாடத்தில் உள்ள மதிப்பெண்ணை பார்ப்பார்கள்.

அந்த மதிப்பெண்ணும் சமமாக இருப்பின் பிறந்த தேதியை பார்ப்பார்கள். அதாவது யார் சீனியரோ அவர் கவுன்சிலிங்கிற்கு முதலில் அழைக்கப்படுவார்கள். பிறந்த தேதியும் ஒரே தேதியாக இருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும். ரேண்டம் என்பது, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் 10 இலக்க எண் ஆகும். ரேண்டம் நம்பர் மதிப்பு அதிகமாக உள்ளவர் கவுன்சிலிங்கிற்கு முதலில் அழைக்கப்படுவார்கள். இன்று ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு அந்த வகையில், இந்த ஆண்டு என்ஜினீயரிங் விண்ணப்பித்துள்ள மாணவ–மாணவிகளுக்கு ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த், துணைவேந்தர் எம்.ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் ரேண்டம் நம்பர் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் என்று தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வு இரு வண்ணங்களில் விண்ணப்பம் அரசு பள்ளிகள் மூலம் விநியோகம

் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 2 வண்ணங்களில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை, 1 ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்நிலையில், தேர்வுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொளி தலைமை வகித்தார். இணை இயக்குநர் சேதுராமன் வர்மா, துணை இயக்குநர் பூபதி ஆகியோர் ஆலோசனை அளித்தனர்.  திருச்சி உட்பட 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 66 மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் குழப்பமின்றி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பவது. திட்டமிட்டபடி தேர்வை சிறப்பாக நடத்துவது. தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டிஇடி) வரும் 17ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது.  கல்வித்துறை அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, குழப்பத்தை தவிர்க்கும் வகையில் புது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி, வழக்கமாக மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும். இனி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத பகுதிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். அதேபோல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு தனித்தனி விண்ணப்பங் களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக இரண்டு வண்ணங்களில் விண்ணப்பம் அச்சிடப்பட்டு, விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

3rd to 6th std girls scholarship detail XL form

பிற்பட்டோர்,மிகவும் பிற்பட்டோர் உதவித் தொகை வழங்க கூடுதல் விபரம் கோருதல் சார்பு

Monday, June 03, 2013

12ம் வகுப்பு விடைத்தாள் நகல்

12ஆம் வகுப்பு மார்ச் பொது தேர்வு எழுதியவர்களில் நகல் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை கீழ்க்கண்ட பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டு உள்ளது
Subject Code Subject Name Candidates are allowed to apply for revaluation/re-totalling for the following subjects ONLY

007 Chemistry From 29.05.2013 to 01.06.2013 ONLY @ dge.tn.nic.in

009 Biology From 01.06.2013 to 04.06.2013 ONLY @ dge.tn.nic.in

011 Botany From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in

013 Zoology From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in

005 Physics From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in

041 Mathematics From 03.06.2013 to 06.06.2013 ONLY @ dge.tn.nic.in

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 4 பாட விடைத்தாள் இணையத்தில் வெளியீடு

பிளஸ் 2 கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய, நான்கு பாடங்களின் விடைத்தாள் நகல்கள், இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. நாளை வரை, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது. நகல்: பிளஸ் 2 தேர்வில், பல்வேறு பாடங்களுக்கு, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள், தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களின் விடைத்தாள் நகல் கேட்டுதான், அதிகளவில், விண்ணப்பித்துள்ளனர்.

வேதியியல் பாட விடைத்தாள் நகல், ஏற்கனவே, www.examonline. co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கடந்த, 2ம் தேதி, உயிரியல் பாட விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டது. நேற்று, இயற்பியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய, நான்கு பாடங்களின் விடைத்ததாள் நகல்களை, மேற்கூறிய இணைய தளத்தில், தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள், நாளை வரை, பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம். இதர பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள், ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மறு மதிப்பீடு: வேதியியல் பாடத்தில், மறு மதிப்பீடு கோரி, 1,200க்கும் அதிமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து, மறு மதிப்பீடு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, 150 ஆசிரியர்கள், மறு மதிப்பீடு செய்யும் பணிக்காக, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: "தத்கல்' முறையில் 6, 7-ல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு உரிய நேரத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் "தத்கல்' திட்டத்தின் கீழ் ஜூன் 6, 7 தேதிகளில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் மேற்கண்ட நாள்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.85-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000-ம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட சலான் மூலம் தேர்வுக் கட்டணத்தை ஜூன் 8-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

ஆன்-லைனில் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்திசெய்தவுடன் Confirmation copy என்பதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் மீண்டும் ஒரு புகைப்படத்தை ஒட்டி, அதன்மீது விண்ணப்பதாரர்கள் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அந்த விண்ணப்பதோடு, தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலான், மதிப்பெண் சான்றிதழ் நகல், ரூ.40-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களோடு கூடிய விண்ணப்பத்தை ஜூன் 14, 15 ஆகிய இரண்டு நாள்களில் சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

  பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மே 28-ந் தேதி தமிழக அரசாணை 145-ல் புதிதாக பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த கவுன்சிலிங்கின்போதும் அமுல்படுத்தப்படும்.

மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், டிரான்ஸ்பர் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்றார். அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் தரப்பில் சிலர் எதிர்ப்பும், வரவேற்பு உள்ளது. பள்ளிகளில் செக்ஸ் புகார்களை தடுக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு வரவேற்க கூடியது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

SSLC துணைத் தேர்வெழுத - இன்று (03.06.2013) முதல் விண்ணப்பிக்கலாம்

SSLC துணைத் தேர்வெழுத Online மூலம் 03.06.2013 முதல் 05.06.2013 விண்ணப்பிக்கவும், தேர்வு கட்டணம் : ஒரு பாடத்திற்கு ரூ.125/-, தேர்வுகள்24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்.                  ஜுன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல், உடனடித் தேர்வுகள், ஜுன் 24ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை நடக்கும்.          மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையடுத்து, அதற்கான மதிப்பெண் பட்டியல், ஜுன் 20ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

பள்ளி மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடமும், தனித் தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், ஜுன் மற்றும் ஜுலை மாதம் நடக்குமூ உடனடி தேர்வில் பங்கேற்கலாம்.   www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக, உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜுன் 3 முதல் 5ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதற்கான தேர்வுக் கட்டணத்தை ஜுன் 6ம் தேதிக்குள், SBI வங்கியின் ஏதேனுமொரு கிளையில் செலுத்த வேண்டும்.             

பத்தாம் வகுப்பு மார்ச் தேர்வை தனித்தேர்வாக எழுதி, மீண்டும் தோல்வியடைந்தவர்கள், விண்ணப்பத்தை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் ஜுன் 10ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உடனடித் தேர்வுகள், ஜுன் 24ம் தேதி முதல் ஜுலை 1ம் தேதி வரை நடக்கும்.

Govt. of Tamil Nadu - Textbooks Online - Std. IX trimester

Sunday, June 02, 2013

சிறப்பு ஆசிரியர் நியமனம்: பதிவு மூப்பு சரிபார்த்துக் கொள்ளலாம்

  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆசிரியர் காலிப்பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்படும் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு பட்டியலை சம்பந்தப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் சரிபார்த்துக்கொள்ளுமாறு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை சிறப்பு ஆசிரியர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு கீழ்நிலை, மேல்நிலை உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் அல்லது உடற்கல்வி ஆசிரியர் பட்டப்படிப்பு(பி.பிஎட்) படித்திருக்க வேண்டும். இசை ஆசிரியர் பணிக்கு, இசையில் பட்டப்படிப்பு அல்லது சங்கீத பூஷன்அல்லது சங்கீத வித்வான் தகுதியுடன் இசையில் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தையல் ஆசிரியர் பணிக்கு தொழில்நுட்ப தையல் ஆசிரியர் அல்லது ஆடை வடிவமைப்பில் பட்டக்கல்வி (டி.டி.சி. டெய்லரிங்) பயின்றிருக்க வேண்டும். ஓவிய ஆசிரியர் பணிக்கு தொழில்நுட்ப ஓவிய ஆசிரியர் அல்லது ஓவியத்தில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு அல்லது மாமல்லபுரம் அரசு சிற்பக் கல்லூரியால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  

இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ட வயது வரம்பு 18 (1.7.2013 நிலவரப்படி) ஆகவும், அதிகபட்சம் 57 வயதாகவும் இருக்கலாம். சிறப்பு ஆசிரியர்கள் தங்கள் பதிவு மூப்புப் பட்டியலை திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றார்.

Saturday, June 01, 2013

எஸ்எஸ்எல்சி தேர்வு மறுகூட்டலுக்கு : 7ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுகூட்டலுக்கு பாட வாரிய தனித்தனியாக வரும் 7ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகளில் தேர்வுதாள் மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இரு தாள்கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) ஸீ305ம், ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) தலா ஸீ205ம் மறுகூட்டல் கட்டணமாகும். தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் விண்ணப்பத்தை தேர்வர் சரியாக பூர்த்தி செய்த பின்னர், அதற்கான விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு மற்றும் வங்கி செலுத்து சீட்டு ஆகியவற் றை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த செல்லானை கொண்டு அருகில் உள்ள கோர் பாங்கிங் சேவை வசதி உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் செல்லானில் குறிப்பிட்டுள்ள தொகையை அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை 6 என்ற பதவிப் பெயரில் செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் கமலா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்காக 5 புதிய பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு தொடங்குகிறது

, சிறுபான்மையினருக்காக 5 புதிய பல்கலைக்கழகங்களை மத்திய அரசு தொடங்குகிறது. 5 புதிய பல்கலைக்கழகங்கள் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கே.ரகுமான்கான், டெல்லியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பல்வேறு பிற அமைச்சகங்களைப் போன்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமும் 5 பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் நலன்தான் இந்தப் பல்கலைக்கழகங்களை தொடங்குவதின் நோக்கம். சிறுபான்மையினருக்கு கல்வி வழங்கத்தான் இந்த 5 பல்கலைக்கழகங்களையும் எங்கள் அமைச்சகம் தொடங்குகிறது. இந்த பல்கலைக்கழகங்கள் எந்த மதத்தினையும் மையமாகக் கொண்டிருக்காது.

Friday, May 31, 2013

ஆசி ரியர் தகுதித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள

் திருப்பூர் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமசிவம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் தலித் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பதற்கும், வெற்றி பெறுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. இதில் உளவியல், ஆங்கிலம், கணிதம், தமிழ், அறிவியல், உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த பயிற்சி வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) காலை 10 மணிக்கு பல்லடம் காவல்நிலையம் எதிரே ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள அம்பேத்கர் பயிற்சி மையத்தில் தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 9659368665, 9965386569, 9443937063 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர்ப்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை தலித், பழங்குடி பிரிவு மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது. (நன்றி: தீக்கதிர் நாளிதழ் 31.05.2013)