இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 20, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 2½ லட்சம் விண்ணப்பங்கள் தயார் 31–ந்தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது

  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. வருகிற 31–ந்தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2,881 காலி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கான போட்டித்தேர்வு ஜூலை மாதம் 21–ந் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற இருக்கிறது. தேர்வுக்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. விண்ணப்ப விநியோகம் 31–ந் தேதி தொடங்குகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கடைசி தேதி விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். ஜூன் 14–ந்தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பக்கூடாது. தற்போது 2012–2013–ம் ஆண்டுக்கான காலி இடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது. அண்மையில் சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியும், ஒரு பள்ளிக்கு தலா 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடம் வீதம் 100 பள்ளிகளுக்கும் புதிதாக 900 பணி இடங்களுக்கு அனுமதி வழங்கியும் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணை தேர்வுக்கு முன்பாக வரும்பட்சத்தில் அந்த காலி இடங்களும் இந்த தேர்வுடன் சேர்த்து நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, May 19, 2013

ஜூன் முதல் வாரத்துக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள்

ஜூன் முதல் வாரத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 மாணவர்களுக்காக இந்த ஆண்டு மொத்தம் 93 லட்சத்து 78 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 80 சதவீத புத்தகங்கள் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளன. தாவரவியல், விலங்கியல் போன்ற சில பாடங்களுக்கான புத்தகங்கள் மட்டும் இன்னும் தயாராகவில்லை. கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், அவை தனியார் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்துப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  வரும் கல்வியாண்டின் (2013-14) முதல் பருவத்தில் மொத்தம் 5.34 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இவற்றில் தற்போது 78 சதவீத புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 விற்பனைக் கிடங்குகளிலும், அரசுப் பள்ளிகளுக்கான இலவசப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு புத்தகங்கள

  ்: இந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்காக 67 லட்சத்து 76 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 100 சதவீத புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மொத்தப் புத்தகங்களில் 51 லட்சத்து 70 ஆயிரம் புத்தகங்கள் இலவசப் புத்தகங்கள் ஆகும். 16 லட்சத்து 6 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கான புத்தகங்கள் ஆகும். முதல் பருவப் புத்தகங்கள்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்கள் 98 சதவீதம் அச்சிடப்பட்டுள்ளன. 6, 7, 8, 9 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவப் புத்தகங்கள் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அச்சிடப்பட்டுள்ளன. பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும் வருகிற 25-ஆம் தேதிக்குள் அச்சிடப்பட்டுவிடும். மே 30-ஆம் தேதிக்குள் இவை அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு பள்ளி திறக்கும்நாளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, May 17, 2013

இளநிலை ஆய்வாளர் வேலை டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. * கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 3ம் தேதி, போட்டித்தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணைய தளம் (தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண) வழியாக விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

* மேலும், கூட்டுறவு சங்கங்களில், 13, "சூப்பர்வைசர்' பணிகளை நிரப்பவும், மேற்கண்ட தேதிகளுக்குள் விண்ணப்பிக்கலாம். * வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில், 18, "ஸ்டோர் கீப்பர் - கிரேடு - 2' பணியிடங்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில், 2, "ஸ்டோர் கீப்பர்' பணியிடங்களுக்கும், விண்ணப்பிக்கலாம். அனைத்து தேர்வுகளும், ஆகஸ்ட், 3ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும்.

* "ஆப்ஜக்டிவ்' முறையில், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். இத்துடன், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

புத்தகம் விலை உயர்வ

கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது. புத்தக விலை உயர்வு விவரம் வகுப்பு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (பழைய விலை அடைப்புக்குறிக்குள்)
2–ம் வகுப்பு – ரூ.65 (ரூ.60)
3–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)
4–ம் வகுப்பு – ரூ.90 (ரூ.80)
5–ம் வகுப்பு – ரூ.100 (ரூ.80)
6–ம் வகுப்பு – ரூ.105 (ரூ.80)
7–ம் வகுப்பு – ரூ.140 (ரூ.100) 8–ம் வகுப்பு – ரூ.165 (ரூ.100)

தனியார் அச்சகங்களுக்கு வேண்டுகோள் இதற்கிடையே, ஒன்றாம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை (தமிழ் நீங்கலாக) அச்சிட விரும்பும் தனியார் அச்சகங்களிடம் இருந்து மாநில பொது பள்ளிக்கல்வி வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தனியார் அச்சகங்கள் வருகிற 24–ந் தேதிக்குள் 2 பிரதி வரைவு புத்தகங்களை சமர்ப்பிக்குமாறும் பள்ளிக்கல்வி வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

9–ம் வகுப்புக்கு முப்பருவமுறை புத்தகங்கள் அறிமுகம் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரம் பாடப்புத்தகங்கள் கிடைக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு

  பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாடப்புத்தகங்கள் கிடைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு 9–ம் வகுப்பு மாணவர்களுக்கும் முப்பருவமுறையில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இலவச பாடப்புத்தகம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்–2 படிக்கும் அனைவருக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கின்ற மாணவ–மாணவிகள் கட்டணம் செலுத்தித்தான் புத்தகங்களை வாங்க முடியும். பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்குகிறது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் அச்சகங்கள் மூலமாகவும் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வெளியிடும் பாடப்புத்தகங்களை வாங்கவே மாணவ–மாணவிகளும், பெற்றோரும் விரும்புகிறார்கள்.

5½ லட்சம் புத்தகங்கள் அச்சடிப்பு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் 3–ந்தேதி திறக்கப்பட உள்ளன.

Directorate of School Education common syllabus I to X std

Thursday, May 16, 2013

சிவில் சர்வீசஸ் தேர்வு விடைத்தாள்கள் ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை

  ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை, ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது. ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக, யு.பி.எஸ்.சி., என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இது, முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத்தேர்வு என, மூன்று நிலைகளை கொண்டது. முதல்நிலை தேர்வானது, அப்ஜக்டிவ் முறையிலானது. பிரதான தேர்வு, பாட வாரியாக நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் எழுதிய தேர்வின் விடைத்தாள்களை சரிபார்க்கும் வகையில், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, ஆன்லைனில் (இணையதளத்தில்) வெளியிட வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். குறிப்பாக, முதல் நிலை மற்றும் பிரதான தேர்வுக்கான விடைத்தாள்களை வெளியிட வேண்டும் என, கோரி வந்தனர். சிவில் சர்வீசஸ் தேர்வு விடைத்தாளை விண்ணப்பதாரர்கள் பார்க்கும் வசதி இல்லாமல் இருந்தது. குறிப்பிட்ட காரணங்களுக்காக, விடைத்தாள்களை அளிக்க, கடந்தஆண்டு முதல் தேர்வாணையம் முன்வந்தது.

இருப்பினும், தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகே வழங்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக, முதல் நிலை தேர்வுக்கான விடைத்தாள்களை மட்டும்,ஸ்கேன் செய்து இணையதளத்தில் வெளியிடுவது பற்றி தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக, பல அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனுமதி கிடைத்ததும் திட்டம் செயல்படுத்தப்படும். பின், பிரதான தேர்வு விடைத்தாள்களை வெளியிடுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மத்திய பணியாளர் நல அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1: முதன்மைத் தேர்வுக்கு 1,330 பேர் தகுதி

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. டி.என்.பி.எஸ்.சி. இணைய தளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம் முறை தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுகள் முடிந்த பின்னரே கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும்.

ஆனால், இம்முறை முதன்மைத் தேர்வுக்கு முன்னரே சான்றிதழ் சரிபார்ப்பை தேர்வாணையம் மேற்கொள்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் வியாழக்கிழமை அளித்த பேட்டி: துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், துணைப் பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களில் உள்ள 25 காலிப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 75,629 பேர் பங்கேற்றனர். இவர்களில் 1,330 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வில் தகுதி பெற்றவர்கள் தங்களுடைய கல்வித் தகுதி, பிறந்த தேதி, பாலினம், சமூகப் பிரிவு தொடர்பான சான்றிதழ் நகல்களை பதிவுத் தபால் மூலம், ""தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பிரேசர் பிரிட்ஜ் சாலை, வ.உ.சி. நகர், பூங்கா நகர், சென்னை - 600 003'' என்ற முகவரிக்கு அனுப்புவதோடு, தேர்வாணைய இணைய தளத்திலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.

உரிய தகுதி இல்லாதவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக, இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பப்படும் சான்றிதழ்கள் சரிபார்ப்பின்போது தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 1,330 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் முடிவு செய்யப்படும். அதன் பிறகு, முதன்மை தேர்வுக்கான தேதி முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என்றார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற வருவாய் உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு மத்திய மந்திரிசபை முடிவு

மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை ரூ.6 லட்சமாக மத்திய மந்திரிசபை உயர்த்தி உள்ளது. கிரீமிலேயர் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் முன்னேறியவர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ.12 லட்சமாகவும், கிராமப்புறங்களில் ரூ.9 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சிபாரிசு செய்தது. ஆனால், இது சாத்தியம் இல்லை என்றும், ஒரே மாதிரியாக ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் மந்திரிகள் குழு சிபாரிசு செய்தது. ரூ.6 லட்சமாக உயர்வு இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்டோரில் இன்னும் அதிகமானோர் பலன் அடைவார்கள்.

  இதுதொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகமும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

TNPSC Group I results

Wednesday, May 15, 2013

பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை: மே 21 முதல் விண்ணப்பம் விநியோகம்

பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். வார வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் ரூ.300-க்கான டி.டி.யை "பட்ங் நங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ஹ், நங்ஸ்ரீர்ய்க் ஹ்ங்ஹழ் ஆ.உ./ஆ.பங்ஸ்ரீட். ஈங்ஞ்ழ்ங்ங் அக்ம்ண்ள்ள்ண்ர்ய்ள் 2013, அப்ஹஞ்ஹல்ல்ஹ இட்ங்ற்ற்ண்ஹழ் இர்ப்ப்ங்ஞ்ங் ர்ச் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் ஹய்க் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ், ஓஹழ்ஹண்ந்ன்க்ண் -630004" என்ற பெயரில், காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.

அதைக் கொடுத்து விற்பனை மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் கிண்டிதொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், புரசைவாக்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பம் செய்யப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை "பட்ங் நங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ஹ், நங்ஸ்ரீர்ய்க் ஹ்ங்ஹழ் ஆ.உ./ஆ.பங்ஸ்ரீட். ஈங்ஞ்ழ்ங்ங் அக்ம்ண்ள்ள்ண்ர்ய்ள் 2013, அப்ஹஞ்ஹல்ல்ஹ இட்ங்ற்ற்ண்ஹழ் இர்ப்ப்ங்ஞ்ங் ர்ச் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் ஹய்க் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ், ஓஹழ்ஹண்ந்ன்க்ண் -630004" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 12-ஆம் தேதி ஆகும். இதற்கான கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் கடைசி வாரத்தில் அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். அழைப்புக் கடிதம் உரியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

"ஆன்லைன்' பதிவில் மாற்றம் வருமா :ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

  இடமாறுதல் "கவுன்சிலிங்'கில் பங்கேற்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, மே 18 க்குள் ஆன்லைனில் பதிவு செய்ய, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், மே 22, 23 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 24, 25ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் "கவுன்சிலிங்' நடக்கிறது. விருப்பம் உள்ள ஆசிரியர்கள், "கவுன்சிலிங்' கில் பங்கேற்க, ஏற்கனவே அந்தந்த தலைமை ஆசிரியர்களிடம், விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, வழங்கிய நிலையில், அனைத்து விண்ணப்பங்களையும் 4 நாட்களுக்குள் (மே 14 முதல் 18க்குள்) "ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும், என்று தற்போது வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறை, நேற்று துவங்கிய நிலையில், அதிகபட்சமாக 3 "கம்ப்யூட்டர்'களில் மட்டுமே பதிவு பணிகள் நடக்கின்றன. ஒரு விண்ணப்பம் பதிவு செய்ய, குறைந்தது 15 நிமிடம் வரை ஆகிறது. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை, குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பள்ளிகளிலும் "ஆன்லைன்' வசதியுடன் "கம்ப்யூட்டர்' வசதி உள்ளது. மாணவர்களுக்கான "ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்தது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தெரிந்துகொண்டது, அந்தந்த பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் தான். எனவே, "கவுன்சிலிங்' விண்ணப்பங்களையும், அந்தந்த பள்ளிகளில் ஆன்லைனில் பதிவு செய்தால், ஆசிரியர்களும், பல கிலோ மீட்டர் தூரம் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தேவையின்றி அலைய வேண்டியதில்லை. பள்ளிகளிலேயே பதிவு செய்ய, கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், விரைவில் பணிகள் முடியும், என்றனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி மத்திய அரசு ஒப்புதல

  2012–13–ம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இ.பி.எப்.) 8.5 சதவீதம் வட்டி வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவலை, ‘இ.பி.எப்.’ அமைப்பின் மத்திய ஆணையர் அனில் ஸ்வரூப் நிருபர்களிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டின் வட்டி விகிதத்தை (8.25) விட இந்த ஆண்டு 0.25 சதவீதம் அதிகமாகும். இதற்கான முடிவை கடந்த பிப்ரவரி மாதத்தில் ‘இ.பி.எப்.’ அமைப்பின் உயர் அதிகார குழு எடுத்து இருந்தது. இந்த முடிவுக்கு தற்போது நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, புதிய வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 5 கோடி தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.

சமையல் கியாஸ் மானியத்தை ஜூன் 1–ந் தேதி முதல் பெறலாம்: புதுச்சேரி உள்பட 20 மாவட்டங்களில் அமல்

  சமையல் கியாஸ் மானிய தொகையை வங்கி கணக்கில் பெறும் நடைமுறை, ஜூன் 1–ந் தேதி முதல், புதுச்சேரி உள்பட 20 மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு முறை சிலிண்டர் பதியும்போதும் வங்கி கணக்கில் ரூ.435 போடப்படும். உங்கள் பணம் உங்கள் கையில் மத்திய அரசு வழங்கி வரும் மானியம் மற்றும் நலத்திட்ட நிதிஉதவிகள் தவறாக திருப்பிவிடப்படுவதாக புகார்கள் வந்தன.

எனவே, உரிய பயனாளிகள் கையில் பணம் சென்றடையும் வகையில், ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தி வருகிறது. ‘ஆதார்’ எண்ணுடன் இணைந்த வங்கி கணக்கு மூலமாக பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி, இதுவரை, ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை போன்ற நிதிஉதவிதான் வழங்கப்பட்டு வருகிறது. சமையல் கியாஸ் இந்நிலையில், சமையல் கியாசுக்கான மானியத்தொகையையும் இத்திட்டத்தின் கீழ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது, ஜூன் 1–ந் தேதி அமலுக்கு வருகிறது. இந்த தகவலை பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி அதிகாரபூர்வமாக அறிவித்தார். அ

Tuesday, May 14, 2013

1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் : ஜெயலலிதா

் பள்ளிகளைத் தரம் உயர்த்தி, அதற்கேற்ப ஆசிரியர்களை பணியமர்த்த புதிதாக 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ்  தமிழக முதல்வர்  ஆற்றிய உரையில், மக்கள் தொகை 300 பேர் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு தொடக்கப்பள்ளி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப் பள்ளிகள் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 54 குடியிருப்புப் பகுதிகளிலும் புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதையும், அப்பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

  உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்த வரையில், 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியிலிருந்து 2013-2014 ஆம் கல்வியாண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு  5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

  இதே போன்று, 2013-2014 ஆம் கல்வியாண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும், அவற்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் பள்ளி ஒன்றுக்கு ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடம் வீதம் 900  முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும